இரு மடங்கு சம்பளமா.. எதற்காக.. டிசிஎஸ் விளக்கம்!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டிசிஎஸ் ஊழியர்கள் தங்களை ஒரு ஹாட் டேலண்ட் என நிரூபித்தால் இரு மடங்கு சம்பளம் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதற்காக இந்த நிறுவனம் ஊழியர்களை சோதனை செய்வதற்காக, கடினமான தேர்வுகள் இருக்கும் என்றும் இந்த நிறுவனம் அறிவித்துள்ளது.

இரு மடங்கு சம்பளமா.. எதற்காக.. டிசிஎஸ் விளக்கம்!

 

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள டிசிஎஸ் தலைமை இயக்க அதிகாரி, இந்த கடிமான தேர்வுகளில் யார் தேர்தெடுக்கப்படுகிறார்களோ அவர்களுக்கு இரு மடங்கு சம்பளத்தினை நிறுவனம் வழங்கும் எனவும் கூறியுள்ளார்.

முன்னணி ஐடி நிறுவனமான டி.சி.எஸ் நிறுவனம், ஐடி துறையில் சிறந்த திறமையுள்ளவர்களை ஈர்க்க இப்படி திட்டமிட்டுள்ளது என்றும், கடந்த ஆண்டு டி.சி.எஸ் நிறுவனம் இந்த தகுதிச் சோதனையை தொடங்கிய நிலையில், இது கிட்டதட்ட 2.2 லட்சம் ஊழியர்களை ஈர்த்துள்ளதுள்ளதாகவும் கூறியுள்ளது. இதற்காக டிசிஎஸ் நிறுவனத்தின் ஒவ்வொரு கேம்பஸ்சாக செல்ல வேண்டிய அவசியத்தை நீக்கியது என்றும், இது தற்போது பணியமர்த்தல் நேரத்தையும் முந்தைய நான்கு மாத காலத்திலிருந்து, ஆறு வாரா காலாமாக மாற்றியுள்ளது என்றும் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் சோதனைக்கு பின்பு இந்த நிறுவனம் 30,000 ஊழியர்களுக்கு சலுகை கடிதத்தினை அனுப்பியுள்ளதாகவும் இந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

எங்கள் தேசிய சோதனை மூலம் தேர்தெடுக்கப்பட்ட சிறந்த நபர்களுக்கு, நாங்கள் அவர்களுக்கு மற்றொரு சோதனையை வழங்குகிறோம் என்றும், அந்த சோதனையில் அவர்கள் தேர்ந்துவிட்டால் அவர்களை ஹாட் டேலண்ட் என்று அழைப்போம் என்றும், மேலும் அவர்களை ஊக்குவிக்கும் விதமாக அவர்களுக்கு இரு மடங்கு சம்பளம் வழங்கப்படும் என்றும் இந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

மேலும் நாங்கள் உள்ஊழியர்களுக்கும் இந்த சோதனையை செய்ய முடிவு செய்தோம், இதன் படி மூன்று வருட அனுபவமுள்ள ஊழியர்களுக்காக நாங்கள் இதை செய்தோம் என்றும், நாங்கள் அவர்களுக்கும் இதே டிஜிட்டல் சேவையை வழங்குகிறோம் என்றும் லக்காட் கூறியுள்ளார்.

மேலும் தகவல் தொழில்நுட்ப துறையின் நிலைமாறும் நிலையில் உள்ளது என்பதை நாங்கள் புரிந்து கொண்டோம். இதனால் இரண்டு ஆண்டுகளாக நாங்கள் திறமையானவர்களை பணியமர்த்தல், சிறந்த திறமையானவர்களை கண்டறிதல், சிறந்த திறமைகளை அங்கீகரித்தல் மற்றும் வாடிக்கையாளர்களுடன் திறந்த மற்றும் சுறுசுறுப்பான வழியில் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பதை அங்கீகரித்தல் ஆகியவற்றில் அடிப்படையில் செயல்படுகிறோம் என்றும் இந்த் நிறுவனத்தின் தலைமை இயக்க அதிகாரி என்.ஜி சுப்பிரமணியம் கூறியுள்ளார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

Read more about: tcs
English summary

Tcs now will pay double on much talent on it’s employees

Tcs now will pay double on much talent on it’s employees, and its says who have proven to be "Hot Talents" will got best of salary.
Story first published: Tuesday, October 22, 2019, 16:28 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X