இந்திய வாடிக்கையாளர்களின் உற்சாகத்தினால் நல்ல லாபம்.. பெருமிதம் கொள்ளும் சீனாவின் ஒன்பிளஸ்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பெங்களூரு: சீனா டெக்னாலஜி நிறுவனமான ஒன்பிளஸ் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், தீபாவளி விற்பனையின் போது மொத்த விற்பனை மதிப்பு 1,500 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளதாக கூறியுள்ளது.

 

இந்த வெற்றிக்குக் காரணம் அண்மையில் வெளியிடப்பட்ட ஒன்பிளஸ் பொருட்கள் தான் என்றும், குறிப்பாக ஒன்பிளஸ் ஆன்ட்ராய்டு டிவி மற்றும் ஸ்மார்ட்போன் பிரிவுகளில் சிறந்த விற்பனை ஆகியுள்ளதாகவும், இது ஆன்லைன் தளமான அமேசான் மற்றும் சில ஆஃப் லைன் கூட்டாளர் மூலம் விற்பனை செய்துள்ளதாகவும் கூறியுள்ளது.

இந்திய வாடிக்கையாளர்களின் உற்சாகத்தினால் நல்ல லாபம்.. பெருமிதம் கொள்ளும் சீனாவின் ஒன்பிளஸ்..!

இந்தியா முழுவதும் உள்ள வாடிக்கையாளர்கள், எங்களது புதிய பொருட்கள் மீது காட்டிய உற்சாகத்தால் தான், நாங்கள் இந்த முடிவுகளை அடைய முடிந்துள்ளது என்றும் ஒன்பிளஸ் இந்தியாவின் பொது மேலாளர் விகாஸ் அகர்வால் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

குறிப்பாக ஒன்பிளஸ் டிவி ஆன்லைன் தளங்களிலும் சரி, ஆஃப் லைன் கூட்டாளர்காளிடம் சரி, நல்ல விற்பனையை கண்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.

இதன் விலை ஒன்பிளஸ் டிவியின் விலை 69,900 ரூபாய் என்றும், இந்த ஒன்பிளஸ் டிவி தற்போது அமேசான் தளத்தில் கிடைப்பதாகவும், நாடு முழுவதிலும் உள்ள ரிலையன்ஸ் டிஜிட்டல் ஸ்டோர்களிலும் கிடைக்கும் என்றும் இந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

அதிலும் வரும் சனிக்கிழமையிலிருந்து, பழைய பொருட்களை எக்சேஞ்ச் செய்தால், கூடுதலாக 3000 ரூபாய் சலுகையுடன் கிடைக்கும் என்றும், இது நவம்பர் மிடில் வரை கிடைக்கும் என்றும் இந்த நிறுவனம் அறிவித்துள்ளது.

கால் கிலோ சாக்லேட் 1 லட்சம் ரூபாயா..? பிரம்மாண்டம் காட்டும் ஐடிசி..!

மேலும் தற்போது வாடிக்கையாளர்கள் ஒன்பிளஸ் டிவி க்யூ1 சீரியஸ் மாடல் டிவிக்களுக்கு 4000 ரூபாய் கேஸ்பேக் சலுகையும், இதே ஒன்பிளஸ் டிவி 55 க்யூ1 ஃபுரோ டிவி மாடல்களுக்கு 5000 ரூபாய் கேஸ் பேக் சலுகையும் கிடைக்கும் என்றும் இந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

 

இது தவிர இந்த நிறுவனத்தின் ஒன்பிளஸ் 7டி ஃபுரோ (OnePlus 7T Pro McLaren Edition) இன்று மதியம் 12 மணியிலிருந்து விற்பனைக்கு கிடைக்கும் என்றும், இதன் விலை 58,999 ரூபாய் என்றும், இது தவிர நோ காஸ்ட் இ.எம்.ஐ மற்றும் ஆக்ஸிஸ் பேங்க் மற்றும் சிட்டி பேங்க் கார்டு வைத்திருப்பவர்களுக்கு 10 சதவிகித தள்ளுபடியும், இதே ரூபே பேங்கிங் கார்டுகள் மூலம் வாங்குபவர்களுக்கு கூடுதலாக 400 ரூபாய் சலுகையும் வழங்கப்படும் என்றும் கூறப்படுகிறது.

இது மட்டும் அல்ல தீபாவளி சலுகையாக இன்னும் பல பொருட்களை, பல மாடல்களில் பல சலுகைகளுடன் அறிவித்துள்ளது இந்த ஒன்பிளஸ் நிறுவனம்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Chinese company oneplus said Rs.1,500 crore gained for diwali sales

Chinese company oneplus said Rs.1,500 crore gained for diwali sales. OnePlus India general manager said newly launched products help with the bright sales
Story first published: Friday, October 25, 2019, 15:10 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X