83,000 ரூபாயை நான்கு மணி நேரம் எண்ணிய ஊழியர்கள்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இது பண்டிகை காலம். பொதுவாகவே இரு சக்கர வாகனங்கள் தொடங்கி வணிக வாகனங்கள் வரை, வீட்டு உபயோகப் பொருட்களாக ஏசி, டிவி, ஃப்ரிட்ஜ், வாசிங் மெஷின் என பல பொருட்களையும் இந்த பண்டிகை காலத்தில் தான் அதிகமாக வாங்குவார்கள்.

 

அந்த வரிசையில் ஒருவர் வழக்கம் போல, ஒரு ஹோண்டா ஆக்டீவா இருசக்கர வாகனத்தை வாங்கி இருக்கிறார்.

அட ஒருவர் ஒரே ஒரு ஹோண்டா ஆக்டீவாவை வாங்கியது தான் செய்தியா..? எனக் கேட்டால் இல்லை. அவர் அந்த ஹோண்டா ஆக்டிவா வாகனத்துக்கான 83,000 ரூபாயை ஒட்டு மொத்தமாக சில்லறை காசாக மட்டுமே கொடுத்து வாங்கி இருக்கிறார் என்பது தான் இங்கு செய்தி.

ஒரே நாளில் 600 பென்ஸ் கார் விற்பனை..!

மத்தியப் பிரதேசம்

மத்தியப் பிரதேசம்

மத்தியப் பிரதேசத்தில் சத்னா மாவட்டத்தைச் சேர்ந்தவர் ராகேஷ் குப்தா. இவர் கடந்த அக்டோபர் 25, 2019, வெள்ளிக்கிழமை தந்தேரா பண்டிகையை முன்னிட்டு ஒரு புதிய ஹோண்டா ஆக்டிவா வாகனத்தை, கிருஷ்ணா ஹோண்டா ஷோரூமில் வாங்க, நான்கு பைகளோடு ஆட்டோவில் சென்று இருக்கிறார். ஆட்டோவில் இருந்து நான்கு பைகளோடு இறங்கிய ராகேஷ் குப்தாவை, கிருஷ்ணா ஷோரூம் ஊழியர்கள் வழக்கம் போல வரவேற்கிறார்கள்.

வாகனம் தேர்வு

வாகனம் தேர்வு

கடையில் இருந்தவர்களிடம், ஒவ்வொரு வாகனமாக எல்லா விவரங்களையும் கேட்கிறார் ராகேஷ் குப்தா. கடைசியாக ஒரு 125 சிசி இன்ஜின் கொண்ட ஹோண்டா ஆக்டிவா பாரத் ஸ்டேஜ் 6 ரக வாகனத்தை வாங்கிக் கொள்வதாகச் சொல்லி இருக்கிறார் ராகேஷ் குப்தா. வரும் ஏப்ரல் 01, 2020 முதல் இந்தியாவில் பாரத் ஸ்டேஜ் 4 ரக வாகனங்களை விற்கக்கூடாது என்பதை இங்கு மீண்டும் நினைவு படுத்திக் கொள்ளலாம்.

காசு தான்
 

காசு தான்

கடைக்காரர்களும், ராகேஷ் குப்தா தேர்ந்தெடுத்த வாகனத்துக்கு 83,000 ரூபாய் விலை சொல்லி இருக்கிறார்கள். நம் ராகேஷ் குப்தா, கிருஷ்ணா ஷோரூமுக்கு வரும் போதே நான்கு பைகளையும் கையில் எடுத்துச் சென்று இருக்கிறார் எனச் சொன்னோம் இல்லையா..? அப்போது கடைக்காரர்கள் ஏதோ பண்டிகை கால பர்சேஸ் போல என கண்டு கொள்ளவில்லை. ஷோரூம் ஊழியர்கள் அதிகம் கவனம் கொடுக்காத அந்த நான்கு பைகளையும் பில் கவுண்டரில் கொடுத்து இருக்கிறார் ராகேஷ் குப்தா.

பேமெண்ட்

பேமெண்ட்

என்ன சார் இது என ஊழியர்கள் கேட்டு இருக்கிறார்கள். அதற்கு 83,000 ரூபாய் பணம் எனச் சொல்லி அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தி இருக்கிறார். என்னங்க எல்லாம் காசுகளாக (காயின்) இருக்கிறதே என்ன செய்ய..? என ஷோரூம் ஊழியர்கள் அனைவரும் திகைத்துப் போய் நின்று இருக்கிறார்கள். கிருஷ்ணா ஷோரூம் மேலாளர் அனுபம் மிஸ்ரா, ஷோரூம் முதலாளி ஆஷிஷ் பூரிக்கு விஷயத்தை தெரியப்படுத்துகிறார்.

ஏமாற்ற வேண்டாம்

ஏமாற்ற வேண்டாம்

கிருஷ்ணா ஷோரூம் உரிமையாளரான ஆஷிஷ் பூரியோ, நம்பி வந்த வாடிக்கையாளரை ஏமாற்ற வேண்டாம், அவர் வாங்கி இருக்கும் ஷோண்டா ஆக்டிவா பாரத் ஸ்டேஜ் 6 வாகனத்தை மகிழ்ச்சியாக கொடுத்து அனுப்புங்கள். அவர் கொடுத்த நான்கு பை நிறைய இருக்கும் காசுகளை பொறுமையாக எண்ணிக் கொள்ளலாம் எனச் சொல்லி இருக்கிறார். ஷோரூம் முதலாளி அனுமதி கொடுத்ததின் பேரில் ராகேஷ் குப்தாவிடம் வாகனத்தைக் கொடுத்து அனுப்புகிறார்கள். நம் ராகேஷ் குப்தாவும் ஜாலியாக ஓட்டுக் கொண்டு வீட்டுக்கு வந்துவிட்டார்.

 எண்ணுங்க

எண்ணுங்க

நம் ராகேஷ் குப்தா கொடுத்த 83,000 ரூபாய் பணத்தை, 3 ஊழியர்களை வைத்து சுமார் 4 மணி நேரம் எண்ணி இருக்கிறார்களாம். நம் ராகேஷ் குப்தா நல்ல வேளையாக 5 ரூபாய் மற்றும் 10 ரூபாய் காசுகளாக கொடுத்தார். இதுவே, ஒரு ரூபாய் மற்றும் இரண்டு ரூபாய் காசுகளாக கொடுத்து இருந்தால், காசு எண்ணும் வேலை இன்னும் அதிக நேரம் எடுத்து இருக்கும். ராகேஷ் சார் வண்டி வாங்குறப்ப இப்படியா ஷோரூம் ஊழியர்களை கொடுமைப் படுத்துவது..? கொஞ்சம் பாத்து பண்ணுங்க சார்.

குட்டி கணக்கு

குட்டி கணக்கு

83,000 ரூபாய் முழுக்க முழுக்க 10 ரூபாய் காசுகளாக இருந்து இருந்தால் 8,300 காசுகளை எண்ணி இருப்பார்கள். 83,000 ரூபாயை முழுக்க முழுக்க 05 ரூபாய் காசுகளாக கொடுத்து இருந்தால் 16,600 காசுகளை எண்ண வேண்டும். ஆக, நம் கிருஷ்ணா ஷோரூம் வாடிக்கையாளர்கள், குறைந்தபட்சம் 8,300 காசுகள், அதிகபட்சம் 16,600 காசுகளை எண்ணி இருப்பார்கள். பாவம் ஷோரூம் ஊழியர்களை சில மணி நேரம், திருப்பதி உண்டியல் காணிக்கையை எண்ணும் பக்தர்களாக மாற்றி விட்டார் ராகேஷ் குப்தா.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

83000 rupee paid in coins for Honda activa counted 4 hours

Rakesh Gupta paid Rs. 83,000 only in five and ten rupee coins to Krishna Honda showroom.for his new Honda Activa 125 BSVI. Showroom staffs counted the coins for four hours.
Story first published: Monday, October 28, 2019, 14:57 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X