முதலீட்டாளர்களே உஷாரா இருங்க.. அடுத்த ஆண்டில் நிலவரம் கடும் சவாலாக இருக்கலாம்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

அடுத்த ஆண்டில் பங்குசந்தைகள் மற்றும் நிலையான வருமானம் தரும் முதலீட்டுத் திட்டங்கள் சற்றே சவாலானதாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

 

ஏன் இப்படி கூறப்படுகிறது, அப்படி எனில் வங்கி டெபாசிட்கள், அஞ்சலக திட்டங்கள் உள்ளிட்ட முக்கிய அம்சம் பொருந்திய முதலீட்டு திட்டங்களில் வருமானம் குறையுமா? எதனால் நிபுணர்கள் இப்படி கூறுகின்றனர். வாருங்கள் பார்க்கலாம்.

தற்போது இந்தியா உள்பட 30 நாடுகளில் ௐமிக்ரான் தாக்கம் அதிகரிக்க தொடங்கியுள்ளது. இது தொடர்ந்து பொருளாதாரத்தில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Elon Musk Vs Jeff Bezos: ஓரே வருடத்தில் 20 பில்லியன் டாலர் பங்குகள் விற்பனை..!

பொருளாதாரத்தின் தாக்கமே

பொருளாதாரத்தின் தாக்கமே

தற்போதுதான் இரண்டாம் கட்ட பரவலில் இருந்து பொருளாதாரம் மீண்டு வரத் தொடங்கியுள்ளது. இந்நிலையில் மீண்டும் ஓமிக்ரான் அச்சம் தொடங்கியுள்ளது. இரண்டாம் கட்ட பரவல் காரணமாக கடுமையான லாக்டவுன் போடப்பட்ட நிலையில், தற்போது ஓமிக்ரான் பரவலினால் மீண்டும் அப்படியொரு நிலைவந்துவிடுமோ என்ற அச்சம் எழுந்துள்ளது. இது மீண்டும் பொருளாதாரத்தில் தாக்கத்தினை ஏற்படுத்துமோ என்ற நிலை உள்ளது.

நிஃப்டி 50 ஏற்றம்

நிஃப்டி 50 ஏற்றம்

தொடர்ச்சியாக கடந்த சில மாதங்களாகவே கொரோனாவின் தாக்கம் படிப்படியாக குறையத் தொடங்கியது. ஆனால் தற்போது நிலையே வேறு. ஏனெனில் மீண்டும் கொரோனாவின் தாக்கம் அதிகரிக்க தொடங்கியுள்ளது. இது பொருளாதாரத்தில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்து நிஃப்டி 50 நவம்பர் 30, 2021 வரையிலான காலகட்டத்தில் இருந்து 21.47% ஏற்றத்தில் உள்ளது.

புதியபங்கு வெளியீடு
 

புதியபங்கு வெளியீடு

தற்போதைய காலகட்டத்தில் பங்கு சந்தையில் பல்வேறு நிறுவனங்கள் தங்களது புதிய பங்கு வெளியீட்டினை செய்து வருகின்றன. கடந்த 2020ம் ஆண்டில் 16 நிறுவனங்கள் தங்களது பங்கு வெளியீட்டினை செய்தன. இந்த வெளியீட்டின் மூலம் 26,628 கோடி ரூபாய் மதிப்பிலான நிதியும் திரட்டப்பட்டது. இதே நடப்பு ஆண்டின் முதல் 11 மாதங்களில் மட்டும் 54 நிறுவனங்கள் தங்களது பொதுபங்கு வெளியீட்டினை செய்துள்ளன. இதன் மூலம் 1.11 லட்சம் கோடி ரூபாய் நிதியினையும் திரட்டியுள்ளன.

பங்கு விலை அதிகம்

பங்கு விலை அதிகம்

இதற்கிடையில் கடந்த 18 மாதங்களில் ஈக்விட்டி பங்குகளின் விலையானது விலை அதிகமுள்ளதாக மாறியுள்ளது. இது கடந்த காலங்களில் மிகப்பெரிய அளவிலான லாபம் ஈட்டும் ஒரு முதலீடாகவும் உருவெடுத்துள்ளது. ஆனால் இனி வரும் மாதங்களில் இந்த நிலை மாறக்கூடும். ஏற்கனவே பங்கின் விலையானது விலை அதிகமுள்ளதாக இருக்கும் நிலையில், முதலீட்டாளர்கள் மாற்றுவழியில் முதலீடுகளை செய்ய நினைக்கலாம்.

தனிநபர் செய்யும் வணிகம்

தனிநபர் செய்யும் வணிகம்

சொல்லப் போனால் தனிநபர்கள் வணிகத்தில் கவனம் செலுத்தலாம். முதலீடுகளையும் அதில் செய்யலாம். நீண்டகாலநோக்கில் தனிநபர் நிறுவனங்களில் முதலீடு செய்வதே லாபகரமானதாக மாறலாம். நிறுவங்களின் நீண்டகாலபோக்கு சாதகமாக உள்ள நிலையில் அவற்றின் எதிர்காலம் நன்றாக இருக்கலாம். ஆக ஒரு நிறுவனத்தின் வளர்ச்சி, அதன் நிர்வாகம், முதலீடு, நிதிநிலைமை, சந்தையின் இலக்கு, தரம் உள்ளிட்டவற்றை பொறுத்து முதலீட்டாளர்களின் முதலீடுகள் மாறக்கூடும். மொத்தத்தில் தற்போதைய முதலீட்டு போர்ட்போலியோக்களில் பெரும் மாற்றம் வரக்கூடும்.

சர்வதேச பங்கு சந்தைகள்

சர்வதேச பங்கு சந்தைகள்

சர்வதேச பங்குகளில் முதலீடுகள் அதிகரிக்ககூடும். நடப்பு நிதியாண்டில் பணவீக்கம் என்பது பெரும் சவாலாக இருந்து வருகின்றது. இதனால் மத்திய வங்கிகள் கொரோனாவின் காரணமாக துவண்டுபோன பொருளாதாரத்தினை மீட்கும் விதமாக, வட்டி விகிதத்தினை குறைவாக வைத்துள்ளன. இதனால் வட்டிவிகிதம் என்பது பல ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு குறைந்துள்ளது. இதனால் வங்கிகளில் வைப்புநிதிகளுக்கான வட்டிவிகிதம் என்பதுமிக குறைவாக உள்ளது.

பிக்சட் டெபாசிட்கள் குறையலாம்

பிக்சட் டெபாசிட்கள் குறையலாம்

குறைவான வட்டி விகித்தினை அதிகரிக்க வங்கிகள் திட்டமிடலாம் என்ற நிலையில், தற்போது ஓமிக்ரான் அச்சம் எழுந்துள்ளது. இதன் காரணமாக மீண்டும் வட்டி விகிதம் அதிகரிக்கப்படுமா? என்ற அச்சம் எழுந்துள்ளது. இதன் காரணமாக மீண்டும் பத்திர சந்தையானது அதிகரிக்க வாய்ப்புகள் அதிகம் உள்ளது. இதனால் வட்டி குறைவான வங்கி வைப்பு நிதிகளில் முதலீடுகள் குறைய வாய்ப்புள்ளது, அதேபோல ஏற்கனவே விலை அதிகமுள்ள பங்குகளிலும் முதலீடுகள் குறையலாம். மாறாக புதியதாக சந்தையில் நுழையும் பங்குகளில் அதிகரிக்கலாம்.

 முதலீடுகள் குறையலாம்

முதலீடுகள் குறையலாம்

பணவீக்கம் அதிகரித்து வரும் நிலையில், மத்திய வங்கியானது பணவீக்கத்தினை கட்டுக்குள் கொண்டு வர, வட்டி விகிதத்தினை அதிகரிக்கலாம். இது அடுத்த ஆண்டின் தொடக்கத்தில் இருக்கலாம். இது சந்தையில் தாக்கத்தினை அப்போது ஏற்படுத்தலாம். எனினும் ஓமிக்ரான் அச்சத்தின் மத்தியில் இது சாத்தியப்படுமா என்பதும் கேள்விக் குறியாக உள்ளது. அப்படி தாக்கம் இருக்கும் பட்சத்தில் இது வைப்பு நிதிகளுக்கு வட்டி குறைவாகவே இருக்க வழிவகுக்கும். மொத்தத்தில் இது முதலீடுகளை குறைக்க வழிவகுக்கும்.

முதலீடுகளை ஈர்க்கலாம்

முதலீடுகளை ஈர்க்கலாம்

சந்தையில் நிலையான வருமானம் தரக்கூடிய இதுபோன்ற முதலீடுகளில் முதலீடுகள் குறையலாம் என்றாலும், ரியல் எஸ்டேட், உள்கட்டமைப்பு துறையில் முதலீடுகள் அதிகரிக்க கூடும். இது நிலையான ரெகுரலான வருமானம் தராவிட்டாலும் முதலீட்டாளர்களை ஈர்க்கலாம். இது நீண்டகால நோக்கில் லாபகரமானதாக மாறக்கூடும்.

சவாலாகத் தான் இருக்கும்.

சவாலாகத் தான் இருக்கும்.

ஆக நடப்பு ஆண்டுடன் ஒப்பிடும்போது அடுத்த 2022ம் ஆண்டு என்பது சற்று கடினமானதாகவே இருக்கும்.

மொத்தத்தில் லாபம் கிடைக்கும் மாற்று வழிகளை தேடுவது நல்லது. குறிப்பாக நம் முன்னோர்கள் மண்ணில் போட்ட பணம் என்றும் வீண்போகாது என்று கூறுவதை கேள்வி பட்டிருப்போம். அந்த வகையில் இனி வரும் ஆண்டுகளில் மீண்டும் இது தான் உண்மையாகுமோ என்ற நிலையே இருந்து வருகின்றது. எதில் முதலீடு செய்தாலும் சரி, அதில் கவனமுடனும், ஒரு முறைக்கு பல முறை யோசித்து முதலீடு செய்வது மிக நல்லது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

2022 may be more challenging for returns in Equities and Fixed income schemes

2022 may be more challenging for returns in Equities and Fixed income schemes/ முதலீட்டாளர்களே உஷாரா இருங்க.. அடுத்த ஆண்டில் நிலவரம் கடும் சவாலாக இருக்கலாம்.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X