மும்பை பங்குச்சந்தையில் இன்று யாரும் எதிர்பார்க்காத வகையில் ஓரே நாளில் 1066.33 புள்ளிகள் சரிந்து 40,000 புள்ளிகளில் சரிந்து வர்த்தக முடிவில் 39,728.41 புள்ளிகளை அடைந்து இன்றைய வர்த்தகம் முடிந்துள்ளது. இன்றைய மோசமான வர்த்தகத்தில் மும்பை பங்குச்சந்தையில் டாப் 3 நிறுவனங்கள் சந்தை மதிப்பீட்டில் சுமார் 1 லட்சம் கோடி ரூபாயை இழந்து நிற்கிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்களின் தொடர் முதலீட்டின் காரணமாகவும், வெளிநாட்டு வர்த்தகத்தில் ஏற்பட்ட உயர்வின் காரணமாகவும், தீபாவளி பண்டிகையின் எதிரொலியாகக் கிடைக்கப்போகும் வர்த்தக்தின் எதிரொலியாகவும் கடந்த சில வாரங்களாகச் சிறப்பான வளர்ச்சியைப் பதிவு செய்து வந்த ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், டிசிஎஸ் மற்றும் ஹெச்டிஎப்சி இன்று மிகப்பெரிய சரிவை எதிர்கொண்டுள்ளது.
இதுமட்டும் அல்லாமல் இன்றைய வர்த்தகத்தில் பல முன்னணி நிறுவனங்களும் அதிகளவிலான சரிவை எதிர்கொண்டு உள்நாட்டு முதலீட்டாளர்களுக்கு மிகப்பெரிய சோகத்தைக் கொடுத்துள்ளது.
உங்கள் குழந்தைகளுக்கான அம்சமான திட்டம்.. எல்ஐசி ஜீவன் தருண்.. என்னென்ன சலுகைகள்.. விவரம் இதோ..!

பங்குச்சந்தையில் ரத்த களரி
இன்றைய வர்த்தகத்தைப் பற்றிச் சுருக்கமாகச் சொல்ல வேண்டுமென்றால், மும்பை பங்குச்சந்தையில் இன்று 2 பங்குகள் வளர்ச்சி அடைந்தால், 4 பங்குகள் சரிவைச் சந்தித்துள்ளது. இதனால் முதலீட்டாளர்கள் இன்று ஒரு நாள் வர்த்தகத்தில் மட்டும் சுமார் 3.28 லட்சம் கோடி ரூபாய் அளவில் நஷ்டத்தை எதிர்கொண்டுள்ளனர்.
இதேபோல் 207 பங்குகள் அதிர்ச்சி அளிக்கும் வகையில் lower circuit limit-ஐ அடைந்துள்ளது, 28 பங்குகள் 8 சதவீதம் முதல் 23 சதவீதம் வரையில் வீழ்ச்சி அடைந்துள்ளது. கோல் இந்தியா உட்பட 59 பங்குகளின் விலை 52 வார சரிவைச் சந்தித்துள்ளது.

டாப் 3
இதேபோல் இன்றைய வர்த்தகத்தில் முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், டாடா குழுமத்தின் டிசிஎஸ், தனியார் வங்கித்துறையில் மிகப்பெரிய வங்கியாக விளங்கும் ஹெச்டிஎப்சி ஆகிய 3 நிறுவனங்களுக்கும் இன்று ஒரு நாள் வர்த்தகத்தில் 1.05 லட்சம் கோடி ரூபாய் அளவிலான சந்தை மதிப்பீட்டை இழந்துள்ளது.

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்
பல்வேறு அன்னிய முதலீட்டு நிறுவனங்களின் முதலீட்டால் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் வேகமாக வளர்ச்சி அடைந்து வந்த நிலையில், இன்றைய வர்த்தக முடிவில் ரிலையன்ஸ் பங்குகள் 3.58 சதவீத சரிந்து ஒரு பங்கின் விலை 2,205.55 ரூபாயாகக் குறைந்துள்ளது.
இதனால் இந்நிறுவனத்தின் சந்தை மதிப்பீடு 15.46 லட்சம் கோடி ரூபாயில் இருந்து 14.91 லட்சம் கோடி ரூபாயாகச் சரிந்துள்ளது.

டிசிஎஸ் மற்றும் ஹெச்டிஎப்சி
இதேபோல் மாபெரும் ஐடி நிறுவனமான டிசிஎஸ் இன்றைய வர்த்தகத்தில் சந்தை மதிப்பீட்டு அளவு 10.54 லட்சம் கோடி ரூபாயில் இருந்து 10.28 லட்சம் கோடி ரூபாயாகச் சரிந்துள்ளது. மேலும் ஹெச்டிஎப்சி வங்கியின் சந்தை மதிப்பீடு 6.66 லட்சம் கோடி ரூபாயில் இருந்து 6.43 லட்சம் கோடி ரூபாயாகச் சரிந்துள்ளது.
இதனால் இந்த 3 நிறுவனங்களில் ஏற்பட்ட சரிவின் மூலம் முதலீட்டாளர்களின் முதலீட்டு மதிப்பு இன்று 83,085 கோடி ரூபாய் இழந்துள்ளனர்.

9 நாள் தொடர்ந உயர்வு
மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு செவ்வாய் வர்த்தக முடிவில் 9 நாள் தொடர்ச்சியாக வளர்ச்சிப் பாதையில் இருந்தது. இந்த 9 நாள் காலகட்டத்தில் மட்டும் சென்செக்ஸ் குறியீடு சுமார் 2,600 புள்ளிகள் உயர்ந்து முதலீட்டாளர்களுக்கு மிகப்பெரிய நம்பிக்கையைக் கொடுத்துள்ளது.
இதுமட்டும் அல்லாமல் கடந்த 2.5 வருடத்தில் இந்த 9 நாட்கள் தான் அதிக நாட்கள் தொடர்ச்சியாக வளர்ச்சிப் பாதையில் இருந்த காலமாகவும் இது உள்ளது. இதற்கு முன்பு 2018ல் ஏப்ரல் 05 முதல் ஏப்ரல் 17 வரையிலான காலகட்டத்தில் தொடர்ச்சியாக 9 வர்த்தக நாட்கள் சென்செக்ஸ் வளர்ச்சிப் பாதையில் இருந்தது குறிப்பிடத்தக்கது.