ரூ.12,000 கோடி சலுகை.. 33 நிறுவனங்கள் தேர்வு.. டெக் மஹிந்திரா தோல்வி..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்தியாவில் டெலிகாம் மற்றும் நெட்வொர்கிங் உபகரணங்களைத் தயாரிக்க மத்திய அரசு அறிவித்துள்ள PLI திட்ட பலன்களைப் பெற சுமார் 36 நிறுவனங்கள் விண்ணப்பம் செய்திருந்த நிலையில் டெக் மஹிந்திரா, ஸ்டெர்லைட் டெக்னாலஜிஸ் மற்றும் கென்ஸ்டெல் நெட்வொர்க்ஸ் ஆகிய நிறுவனங்களின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டு 33 நிறுவனங்கள் தேர்வு செய்யப்பட்டு உள்ளது.

 

இந்த PLI திட்டம் மூலம் 33 நிறுவனங்கள் சுமார் 12,195 கோடி ரூபாய் மதிப்புள்ள இன்சென்டிவை பெற உள்ளது.

டெலிகாம் மற்றும் நெட்வொர்கிங் உபகரணங்கள்

டெலிகாம் மற்றும் நெட்வொர்கிங் உபகரணங்கள்

மத்திய அரசு இந்தியாவில் டெலிகாம் மற்றும் நெட்வொர்கிங் உபகரணங்கள் உற்பத்திக்காக 2021 பிப்ரவரி மாதம் 24ஆம் தேதி PLI இத்திட்டத்தை அறிவித்தது. தற்போது தேர்வு செய்யப்பட்டு உள்ள நிறுவனங்கள் சுமார் 3,455 கோடி ரூபாய் அளவிலான முதலீட்டை செய்ய உள்ளதாகக் கூறப்படுகிறது.

33 நிறுவனங்கள் உற்பத்தி

33 நிறுவனங்கள் உற்பத்தி

இந்த 33 நிறுவனங்களும் இந்தியாவில் டெலிகாம் டிரான்ஸ்மிஷன் கருவி, 4ஜி மற்றும் 5ஜி சேவைக்கான ரேடியோ ஆக்சஸ் நெட்வொர்க், IOT கருவிகள், டெலிகாம் ஸ்விச் மற்றும் ரவுட்களைத் தயாரிக்க உள்ளது. இந்தியாவில் தயாரிக்கப்படும் டெலிகாம் கருவிகள் இந்தியச் சந்தையில் விற்பனை செய்வது மட்டும் அல்லாமல் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படத் திட்டமிடப்பட்டு உள்ளது

5 வருட PLI திட்டம்
 

5 வருட PLI திட்டம்

மத்திய அரசு PLI திட்டம் மூலம் இந்த 33 நிறுவனங்களுக்கு அடுத்த 5 வருடத்திற்குப் பல வகையில் 12,195 கோடி ரூபாய் மதிப்புள்ள இன்சென்டிவை அளிக்க உள்ளது. இது இந்தியாவில் உற்பத்தி தளத்தை அமைக்கும் எண்ணிக்கையை அதிகரிப்பது மட்டும் அல்லாமல் வேலைவாய்ப்பு, வர்த்தகம் மற்றும் ஏற்றுமதியை அதிகரிக்க முடியும்.

வெளிநாட்டு நிறுவனங்கள்

வெளிநாட்டு நிறுவனங்கள்

மத்திய தற்போது தேர்வு செய்துள்ள நிறுவனங்களில் தைவான் நாட்டின் பாக்ஸ்கான் 208 கோடி ரூபாயும், ரைசிங் ஸ்டார்ஸ் ஹைய் டெக் 125 கோடி ரூபாயும், பின்லாந்து நாட்டின் நோக்கியா சொல்யூஷன்ஸ் 125 கோடி ரூபாயும், அமெரிக்காவின் பிளெக்ஸ்ட்ரானிக்ஸ் 102 கோடி ரூபாயும், ஜாபிள் சர்கியூட் 176 கோடி ரூபாயும், காம்ஸ்கோப் 209 கோடி ரூபாயும், சான்மினா SCI 110 கோடி ரூபாயும் முதலீடு செய்துள்ளது.

26 நிறுவனங்களுக்கு ஒப்புதல்

26 நிறுவனங்களுக்கு ஒப்புதல்

மேல கூறப்பட்ட நிறுவனங்கள் அனைத்தும் வெளிநாட்டு நிறுவனங்கள், இந்த PLI திட்டத்தின் கீழ் சுமார் 26 இந்திய நிறுவனங்களும் தேர்வாகியுள்ளது. இதில் 9 நிறுவனங்கள் பெரு நிறுவனங்கள், 17 நிறுவனங்கள் MSME நிறுவனங்களாகும்.

உள்நாட்டு நிறுவனங்கள்

உள்நாட்டு நிறுவனங்கள்

அக்ஷதா டெக்னாலஜிஸ் 593 கோடி ரூபாயும், VVDN டெக்னாலஜிஸ் 400 கோடி ரூபாயும், நியோலிங்க் டெலி கம்யூனிகேஷன்ஸ் 188கோடி ரூபாயும், டிக்சான் எலக்ட்ரோ அப்ளையன்ஸ் 180கோடி ரூபாயும், ITI 120 கோடி ரூபாயும், தேஜாஸ் நெட்வொர்க்ஸ் 111 கோடி ரூபாயும், GDN எண்டர்பிரைசர்ஸ் 46 கோடி ரூபாயும், STL நெட்வொர்க்ஸ் 49 கோடி ரூபாயும் முதலீடு செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது.

வேதாந்தா குழுமத்தின் ஸ்டெர்லைட் டெக்னாலஜிஸ்

வேதாந்தா குழுமத்தின் ஸ்டெர்லைட் டெக்னாலஜிஸ்

மத்திய அரசிடம் விண்ணப்பம் செய்ய 36 நிறுவனங்களில் வேதாந்தா குழுமத்தின் ஸ்டெர்லைட் டெக்னாலஜிஸ் குளோபல் பிரிவில் விண்ணப்பம் செய்தது. ஆனால் குளோபல் நிறுவனங்கள் அடிப்படையாக 10000 கோடி ரூபாய் வருமானத்தைப் பெற வேண்டும் என்ற அடிப்படைத் தகுதியை பூர்த்திச் செய்யாத காரணத்தால் விண்ணப்பம் ரத்து செய்யப்பட்டு உள்ளது.

டெக் மஹிந்திரா

டெக் மஹிந்திரா

உள்நாட்டு நிறுவனங்கள் பட்டியலில் விண்ணப்பம் செய்த டெக் மஹிந்திரா மென்பொருள் பிரிவில் வர்த்தகம் செய்தாலும் இதுவரை டெலிகாம் உபகரணங்கள் பிரிவில் பணியாற்றாத காரணத்தால் விண்ணப்பம் ரத்து செய்யப்பட்டது.

கென்ஸ்டெல் நெட்வொர்க்ஸ்

கென்ஸ்டெல் நெட்வொர்க்ஸ்

இதேபோல் MSME பிரிவில் கென்ஸ்டெல் நெட்வொர்க்ஸ் வருடாந்திர வருமானத்தை 6.4 கோடி ரூபாய் எனப் பதிவு செய்திருந்தது, ஆனால் PLI சலுகை பெற குறைந்தபட்சம் 10 கோடி ரூபாய் அளவிலான வருமானத்தைப் பெற வேண்டும் எனக் கட்டுப்பாடு இருக்கும் காரணத்தால் இந்த நிறுவனத்தின் விண்ணப்பமும் ரத்துச் செய்யப்பட்டது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

33 companies selected for Rs 12,000 crore telecom PLI Scheme

33 companies selected for Rs 12,000 crore telecom PLI Scheme
Story first published: Monday, September 6, 2021, 21:34 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X