5 அம்சமான ஸ்மார்ட்போன் ஆஃபர்கள்.. அமேசான், பிளிப்கார்டின் விழாக்கால சலுகை.. மிஸ் பண்ணிடாதீங்க..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பண்டிகை காலம் தொடங்குவதற்கு முன்பே, பிளிப்கார்ட் மற்றும் அமேசானின் விழாக்கால சலுகை தொடங்கிவிடும். இதன் மூலம் அதிரடியான பல சலுகைகளும், தள்ளுபடிகளும் வழங்கும்.

 

அந்த வகையில் பிளிப்கார்ட் மற்றும் அமேசானின் விழாக்கால சலுகையில், ஸ்மார்ட்போன்களுக்கு என்று தனி ஆஃபர்களும் இருக்கும்.

அதுபோன்று இந்த முறை விழாக்கால சலுகையில், எந்தெந்த ஸ்மார்ட்போன்களுக்கு சலுகைகள் வழங்கப்பட உள்ளன, என்னென்ன சலுகைகள், எவ்வளவு தள்ளுபடிகள் உள்ளன என்பதைத் தான் பார்க்கப் போகிறோம்.

இனியும் வீட்டுக்கடன், வாகனக்கடன்கள் குறைவான வட்டியிலேயே கிடைக்கும்.. RBIயின் நடவடிக்கை தான் காரணம்!

ஐபோன் 11 சலுகை

ஐபோன் 11 சலுகை

அமேசான் இன்னும் இந்த ஸ்மார்ட்போனுக்கான தள்ளுபடியினை அறிவிக்கவில்லை. எனினும் அதன் குறிச்றொற்கள் தோராயமான யோசனையை வழங்குகிறது. ஆப்பிள் நிறுவனத்தின் ஸ்மார்ட்போனின் உண்மையான விலையானது 66,300 ரூபாய் என்ற நிலையில், அதற்கு பதிலாக அமேசான் 50,000 ரூபாய்க்கு கீழ் விற்பனை செய்யப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் இந்த முறை ஆப்பிள் ஸ்மார்ட்போனின் தேவை மற்றும் ஆர்டர்களை பொறுத்து விலை நிர்ணயிக்கப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

சாம்சங் கேலக்ஸி எம்51

சாம்சங் கேலக்ஸி எம்51

அமேசானின் தி கிரேட் இந்தியன் சேல் விற்பனையில் சாம்சங் கேலக்ஸி எம்51 ஸ்மார்ட்போனுக்கு சலுகை அளிக்கப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் முன்பு 26,999 ரூபாய்க்கு அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த ஸ்மார்ட்போனுக்கான இறுதி சலுகை விலை இன்னும் அறிவிக்கப்படவில்லை. எனினும் 20,999 ரூபாய் முதல் 26,999 ரூபாய் வரை விற்பனை செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சாம்சங் கேலக்ஸி எஸ்20
 

சாம்சங் கேலக்ஸி எஸ்20

சாம்சங் கேலக்ஸி எஸ்20 ஸ்மார்ட்போனின் விலையானது அதன் Ram, Romமினை பொறுத்து சில மாடல்கள் உள்ளது. இதன் விலையானது 83,000 ரூபாய் வரையில் உள்ளது. இதனை பிளிப்கார்ட் பிக் பில்லியன் டே விற்பனை திருவிழாவில் 49,999 ரூபாய் வரை முதல் இருக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

அதோடு சாம்சங் ஸ்மார்ட்போன் மேம்படுத்தல் திட்டத்தினையும் வழங்குகிறது. இந்த திட்டத்தின் மூலம் சாம்சங் தொலைபேசியின் மொத்த செலவில் 70% மட்டுமே செலுத்தவும், ஒரு வருடத்திற்கு பிறகு அதனை மாற்றவும் அனுமதிக்கிறது.

LG G8XThinQ

LG G8XThinQ

பிளிப்கார்டின் இந்த விழாக்கால சலுகையில் எல்ஜியின் LG G8XThinQ போனின் விலையானது 19,990 ரூபாயாக இருக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதே இரட்டை ஸ்க்ரீன் கொண்ட ஸ்மார்ட்போனுக்கு 49,999 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதன் உண்மையான விலையானது, 54,990 ரூபாயாகும்.

மோட்டரோலாவிற்கு என்ன சலுகை

மோட்டரோலாவிற்கு என்ன சலுகை

இதே மோட்டரோலாவின் Motorola Moto Edge+ மாடல் ஸ்மார்ட்போனின் உண்மையான எம்ஆர்பி விலை 64,999 ரூபாயாகும். இந்த போன் 64,999 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. அதோடு எஸ்பிஐ கிரெடிட் கார்டு மற்றும் டெபிட் கார்டுகள் மூலம் செய்யும் எக்சேன்ஜ்களுக்கு 10% மேல் சலுகையும் உண்டு.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

5 Smartphone deals to watch out for Amazon, flipkart festival sales 2020

Five Smartphone deals to watch out for Amazon, flipkart festival sales 2020
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X