தேர்தலுக்கு மயங்காத பட்ஜெட்.. ஆனா டிமாண்ட்-ஐ உருவாக்க மறந்துவிட்டது மோடி அரசு..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கொரோனா தொற்று மூலம் ஏற்பட்ட வர்த்தகம் மற்றும் பொருளாதாரப் பாதிப்புகளைச் சரி செய்ய மத்திய அரசு இந்தப் பட்ஜெட் அறிக்கையில் சரியான முறையில் உள்கட்டமைப்பு மற்றும் டிஜிட்டல் கட்டுமானத்திற்குச் செலவு செய்யும் வகையில் திட்டமிட்டு உள்ளது.

 

5 மாநிலத் தேர்தல்கள் நெருங்கிவிட்ட போதிலும், நுகர்வோர் மற்றும் ஏழைகளுக்கு ஆதரவாக வெளியிடப்பட வேண்டிய அவசியம் இருந்த போதும், மத்திய பட்ஜெட் 2022-23 நாட்டின் நிதிநிலையைக் கருத்தில் கொண்டு சரியான முறையில் வெளியிடப்பட்டு உள்ளது.

 இந்திய பொருளாதாரம்

இந்திய பொருளாதாரம்

இந்தப் பட்ஜெட் அறிக்கையில் முக்கியமான கவனிக்க வேண்டிய ஒன்று என்னவென்றால் தேவையில்லாத மானியங்கள், நாட்டின் வளர்ச்சிக்குப் பெரிய அளவில் பயன்படாத எந்த அறிவிப்புகளும் இல்லை. இது பாராட்டுக்குரியது, குறிப்பாக இந்திய பொருளாதாரத்தின் தற்போதைய நிதி நிலைமையில் நாட்டின் வளர்ச்சிக்குத் தேவையான இடத்தில் நிதி ஆதாரங்கள் பயன்படுத்தப்பட்டு உள்ளது.

 அரசின் முதலீடுகள்

அரசின் முதலீடுகள்

இந்தப் பட்ஜெட் அறிக்கை அரசின் முதலீடுகள் நாட்டின் வளர்ச்சிக்கு மிகவும் முக்கியமானது என்பதை உணர்த்தியுள்ளது. இந்தப் பட்ஜெட்டில் கட்டுமான துறையில் மட்டும் அல்லாமல் தனியார் கேப்பிட்டல் துறைக்கான முதலீடு பற்றியும் அறிவிக்கப்பட்டு உள்ளது.

 ஆனந்த் ராதாகிருஷ்ணன்
 

ஆனந்த் ராதாகிருஷ்ணன்

இது பொருளாதார வளர்ச்சிக்குத் தடையாக இருக்கும் சப்ளை பிரிவு பிரச்சனைகளைச் சரி செய்ய முடியும் எனப் பிராங்க்ளின் டெம்பிள்டன் நிறுவனத்தின் எமர்ஜிங் மார்க்கெட் ஈக்விட்டி பிரிவின் சிஐஓ, ஆனந்த் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

 அவசரக்கால கடன்

அவசரக்கால கடன்

பட்ஜெட் அறிக்கையில் அவசரக்கால கடன் உத்தரவாதத் திட்டத்திற்கான காலக்கெடுவை மார்ச் 2023 வரை நீட்டித்ததும், அதன் காப்பீட்டை ₹5 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது, MSME துறைக்கு உதவுவதோடு வங்கித் துறையின் ஆரோக்கியத்தையும் பாதுகாக்கும் ஒரு முக்கியமான நடவடிக்கையாக உள்ளது.

டிமாண்ட்

டிமாண்ட்

மத்திய அரசு தனது பட்ஜெட் அறிக்கையில் சப்ளை பிரிவு பிரச்சனைகளை முதலீடு, கட்டுமான திட்டங்கள் மூலம் ஈடு செய்தாலும், இந்திய சந்தையில் டிமாண்ட் உருவாக்குவதற்கான எந்த முக்கியத் திட்டமும் இல்லை.

 கொரோனா

கொரோனா

இந்தியாவில் கொரோனா தொற்று மூலம் நகரம் மற்றும் கிராமம் வரையில் அனைத்துத் தரப்பு மக்களும் அதிகளவில் பாதித்துள்ள காரணத்தால் வர்த்தகச் சந்தை மந்தமாகவே உள்ளது. இந்த நிலையில் இந்தியாவின் வர்த்தகத்தை அதிகரிக்க எவ்விதமான அறிவிப்பும் இல்லாமல் இருப்பது பெரிய ஏமாற்றமாக உள்ளது.

 சிறு நிறுவனங்கள்

சிறு நிறுவனங்கள்

தற்போது பெரு நிறுவனங்களுக்கு வங்கிகளைத் தாண்டி முதலீட்டையும் கடனையும் பெற அதிகளவிலான வாய்ப்புகள் இருக்கும் நிலையில், சிறு நிறுவனங்களை மத்திய அரசு மற்ந்துவிட்டது. financial inclusion பிரிவில் இன்னுமும் சிறு நிறுவனங்கள் சேர்க்கப்படாமல் உள்ளது என ஆனந்த் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

5 State elections ahead Govt spending at right, but misses demand push

5 State elections ahead Govt spending at right, but misses demand push தேர்தலுக்கு மயங்காத பட்ஜெட்.. ஆனா டிமாண்ட்-ஐ உருவாக்க மறந்துவிட்டது மோடி அரசு..!
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X