ரூ.1.38 லட்சம் கோடி அவுட்.. முதலீட்டாளர்கள் பாவம்.. லிஸ்டில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தான் பர்ஸ்ட்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி: சந்தையில் ஏற்றம் இறக்கம் என்பது சகஜமான ஒன்றாக இருந்தாலும், இது கொரோனா மத்தியில் ஏற்கனவே பெரிய இழப்பினை சந்திதுள்ள சந்தை, கடந்த வாரத்திலும் சரிந்துள்ளது.

குறிப்பாக மும்பை பங்கு சந்தையின் சென்செக்ஸ் 522 புள்ளிகள் வீழ்ச்சி கண்டுள்ளது. இது 1.36% சரிவாகும்.

இந்த நிலையில் அதிக சந்தை மதிப்பினை உடைய 10 நிறுவனங்களில் 6 நிறுவனங்கள் 1,38,839.83 கோடி ரூபாயினை இழந்துள்ளன.

ரிலையன்ஸ் தான் டாப் லூசர்
 

ரிலையன்ஸ் தான் டாப் லூசர்

இதில் கவனிக்கதக்க விஷயம் என்னவெனில் முந்தைய வாரத்தில் டாப் லிஸ்டில் லாபத்தில் இருந்த நிறுவனங்கள் கூட, கடந்த வாரத்தில் நஷ்டத்தினை சந்தித்துள்ளன. இதில் டாப் லிஸ்டில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் இருக்கிறது என்றால் தெரிந்து கொள்ளுங்களேன். தொடர்ந்து முதலீட்டாளர்களுக்கு நல்ல லாபத்தினை கொடுத்து வந்த ரிலையன்ஸ், கடந்த வாரத்தில் 50,239.78 கோடி ரூபாய் சந்தை மதிப்பினை இழந்து, 13,10,323.21 கோடி ரூபாயாக குறைந்துள்ளது.

ஹெச்டிஎஃப்சி வங்கியின் இழப்பு

ஹெச்டிஎஃப்சி வங்கியின் இழப்பு

இதற்கு அடுத்தாற்போல், தனியார் துறையினை சேர்ந்த மிகப்பெரிய வங்கியான ஹெச்டிஎஃப்சி வங்கி அதன் சந்தை மதிப்பில் 46,374.63 கோடி ரூபாயினை இழந்து, 5,67,877.84 கோடி ரூபாயாக குறைந்துள்ளது.

இதே மற்றொரு தனியார் வங்கியான ஐசிஐசிஐ வங்கியின் சந்தை மதிப்பானது 22,631.74 கோடி ரூபாய் குறைந்து, 22,631.74 கோடி ரூபாயாக குறைந்துள்ளது.

ஐடிசி மற்றும் பார்தி ஏர்டெல்

ஐடிசி மற்றும் பார்தி ஏர்டெல்

ஹெச்டிஎஃப்சியின் சந்தை மதிப்பானது 10,078.06 கோடி ரூபாய் குறைந்து 3,09,254.09 கோடி ரூபாயாக குறைந்துள்ளது.

இதே பிரபல நிறுவனமான ஐடிசியின் மதிப்பானது 6,815.12 கோடி ரூபாய் குறைந்து 2,38,660.74 கோடி ரூபாயாக குறைந்துள்ளது.

தொலைத் தொடர்பு நிறுவனமான பார்தி ஏர்டெல்லின் சந்தை மதிப்பில் 2,700.5 கோடி ரூபாயினை இழந்து, 3,3,02,,701.60 கோடி ரூபாயாக குறைந்துள்ளது.

டிசிஎஸ் & இன்ஃபோசிஸ் சந்தை மதிப்பு
 

டிசிஎஸ் & இன்ஃபோசிஸ் சந்தை மதிப்பு

ஐடி துறையில் முன்னணி நிறுவனமான டாடா கன்சல்டன்ஸி சர்வீசஸ் லிமிடெட் நிறுவனம், அதன் சந்தை மதிப்பில் 47,054.91 கோடி ரூபாய் அதிகரித்து, 8,56,463.05 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.

இதே மற்றொரு ஜாம்பவான் ஆன இன்ஃபோசிஸ் நிறுவனம் 18,591.83 கோடி ரூபாய் சந்தை மதிப்பினை அதிகரித்து, 4,11,554.51 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.

ஹிந்துஸ்தான் யூனிலீவர் லிமிடெட் நிறுவனத்தின் மதிப்பு

ஹிந்துஸ்தான் யூனிலீவர் லிமிடெட் நிறுவனத்தின் மதிப்பு

கோடக் மகேந்திரா வங்கியின் சந்தை மதிப்பானது 3,481.72 கோடி ரூபாய் அதிகரித்து, 2,70,600.52 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.

இதுவே ஹிந்துஸ்தான் யூனிலீவர் லிமிடெட் நிறுவனத்தின் சந்தை மதிப்பானது 740.11 கோடி ரூபாய் அதிகரித்து, 5,19,931.93 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

6 out of 10 most valued firms lose Rs.1.38 lakh crore in market valuation, RIL was in top place

Market valuation update.. six out of 10m most valued firms lose Rs.1.38 lakh crore in market valuation, RIL and HDFC bank, ICICI was in top places.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X