இந்த 63 இந்தியர்களிடம் ரூ.24 லட்சம் கோடியா..! ஷாக் கொடுத்த Oxfam..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்தியா என்கிற மிகப் பெரிய நாட்டில், எத்தனையோ கலாச்சார, மத வேறுபாடுகள் இருக்கிறது. இந்த சாதி, மத மற்றும் கலாச்சாரங்களால் சில ஏற்றத் தாழ்வுகளும் இருக்கத் தான் செய்கிறது.

 

இந்த ஏற்றத் தாழ்வுகளைத் தாண்டி, பொருளாதார ரீதியாக ஏழை பணக்காரன் என்கிற ஏற்றத் தாழ்வுகளும் உலகம் முழுக்க இருந்து கொண்டு தான் இருக்கின்றன.

இந்த ஏற்றத் தாழ்வின் ஒரு பகுதியை Oxfam என்கிற அமைப்பு தன் அறிக்கையில் சொல்லி இருக்கிறது. அதைத் தான் இங்கு பார்க்கப் போகிறோம்.

பணக்காரர்கள்

பணக்காரர்கள்

இந்தியாவின் டாப் ஒரு சதவிகித பணக்காரர்களிடம், இந்தியாவின் 95.3 கோடி பேரிடம் இருக்கும் பணத்தை விட அதிக பணம் இருக்கிறதாம். இன்னும் சுருக்கமாகச் சொல்ல வேண்டும் என்றால், இந்தியாவின் டாப் 63 பணக்காரர்களிடம் மட்டும் 24.4 லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் சொத்து பத்துக்கள் இருக்கிறதாம்.

ஒரு பட்ஜெட்

ஒரு பட்ஜெட்

கடந்த 2018 - 19 நிதி ஆண்டில், இந்தியாவின் மொத்த பட்ஜெட் தொகையே 24.42 லட்சம் கோடி ரூபாய் தானாம். இந்த 63 டாப் இந்தியப் பணக்காரர்கள் தங்கள் சொத்து பத்துக்களை எல்லாம் அரசுக்கு தானமாகக் கொடுத்துவிட்டால், ஒரு வருட பட்ஜெட்டையே மத்திய அரசு அசால்டாகப் போட்டு விடலாமாம்.

உலகம்
 

உலகம்

உலக அளவிலும் இதே நிலை தான். உலகின் டாப் 2,153 கோடீஸ்வரர்களின் சொத்து மதிப்பை, தராசின் ஒரு பக்கம் வைத்து விட்டு, உலகின் 460 கோடி மக்களிடம் இருக்கும் பணத்தை கணக்கிட்டு மறு பக்க தராசில் வைத்தால் கூட 2,153 கோடி பணக்காரர்கள் பக்கம் தான் தராசு சாய்கிறதாம். அந்த அளவுக்கு பில்லியனர்களிடம் பணம் குவிந்து கிடக்கிறது.

இந்திய பெண்கள்

இந்திய பெண்கள்

இந்தியாவில் இருக்கும் பெண்கள் மற்றும் சிறுமிகள், நாள் ஒன்றுக்கு, சுமாராக 326 கோடி மணி நேரத்தை எந்த ஒரு பொருளாதார பலன்கள் இல்லாமல் சமைப்பது, வீட்டைச் சுத்தம் செய்வது, குழந்தைகளைப் பார்த்துக் கொள்வது போன்ற வேலைகளைச் செய்கிறார்களாம். இதற்கு எல்லாம் பொருளாதார பலன்களைக் கணக்கிட்டால் சுமாராக 19 லட்சம் கோடி ரூபாய் வருமாம்.

10 நிமிடம்

10 நிமிடம்

பொதுவாக, வீட்டு வேலை செய்யும் ஒரு பெண், ஒரு டாப் டெக்னாலஜி கம்பெனியில் சி இ ஓ-வாக இருப்பவரின் சம்பாத்தியத்தைப் பெற வேண்டும் என்றால்.. சுமாராக 22,277 வருடங்கள் ஆகுமாம். ஆனால் வீட்டு வேலை செய்யும் ஒரு பெண்ணின் சம்பளத்தை ஒரு டாப் டெக்னாலஜி சி இ ஓ- சுமார் 10 நிமிடங்களில் சம்பாதித்து விடுகிறார் என்கிறது Oxfam.

சிரமம்

சிரமம்

இதை எல்லாம் விட மிக முக்கியமான விஷயம்... இன்றைய பொருளாதார சூழலில், பெண்கள் மற்றும் சிறுமிகள் தான் மிகக் குறைவான, பொருளாதார பலன்களை அடைவதாகவும் சொல்லி இருக்கிறது Oxfam. உலகின் டாப் 22 பணக்காரர்கள், ஆபிரிக்கா கண்டத்தில் இருக்கும் அனைத்து பெண்களிடம் இருக்கும் சொத்து பத்துக்களை விடவும் அதிகமாக சொத்து வைத்திருக்கிறார்களாம்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

63 indian billionaire has more than 24 lakh crore wealth

The top 63 indian billionaires have more than 24 lakh crore worth of wealth with them. If they pledge their wealth to indian govt, the central government can make a whole financial year budget.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X