மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி-யை ஏற்கனவே அரசு பல முறை உயர்த்தியுள்ள நிலையில், தற்போது 7வது சம்பள கமிஷன் கீழ் நடப்பு ஆண்டுக்கான அகவிலைப்படியை மத்திய அரசு 3 சதவீதம் வரையில் உயர்த்த ஒப்புதல் அளித்துள்ளது.
இதன் மூலம் மத்திய அரசு பணிகளில் இருக்கும் அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி, அடிப்படை சம்பளத்தில் 34 சதவீதமாக உயர்ந்துள்ளது. இந்த உயர்வின் மூலம் மத்திய அரசு பணிகளில் இருக்கும் 50 லட்சம் அரசு ஊழியர்களும் 65 லட்சம் ஓய்வூதியதாரர்களும் நன்மை அடைய உள்ளனர்.
பேக்கரி-களுக்கு இனி 18% ஜிஎஸ்டி வரி..? மத்திய அரசு செக்..!

மத்திய அரசு ஊழியர்கள்
மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான அகவிலைப்படி (DA) மற்றும் அகவிலை நிவாரணம் (DR) ஆகியவற்றைத் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம், தொழிலாளர் பணியகத்தால் (Labour Bureau) வெளியிடப்பட்ட தொழில்துறை தொழிலாளர்களுக்கான அகில இந்திய நுகர்வோர் விலைக் குறியீட்டின்படி பணவீக்க விகிதத்தின் (AICPI-IW) அடிப்படையில் கணக்கிடப்படுகிறது.

சில்லறை பணவீக்கம்
2021 நிதியாண்டில் அக்டோபர்-டிசம்பர் காலாண்டில் சராசரி சில்லறை பணவீக்கம் 5.01 சதவீதமாக இருந்தது, ஆனால் பிப்ரவரி மாதம் இதன் அளவீடு 6.07 சதவீதமாக உயர்ந்துள்ளது. இதன் மூலம் தற்போது மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 3 சதவீதம் அதிகரிக்கப்பட்டது.

நரேந்திர மோடி
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை, மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலை நிவாரணம் (டிஆர்) அக்டோபர் மாதம் 28 சதவீதத்தில் இருந்து அதிகரித்து 3% அதிகரிக்கப்பட்டு 1.7.2021 முதல் 31 சதவீதமாக நடைமுறைப்படுத்த உத்தரவிட்டார்.

34 சதவீத அகவிலைப்படி
இதைத் தொடர்ந்து மத்திய அரசு மீண்டும் இன்று பணவீக்க அளவீட்டை அடிப்படையாகக் கொண்டு 3 சதவீத உயர்த்தி அகவிலைப்படி அளவீட்டை 34 சதவீதமாக அறிவித்துள்ளது. இதன் மூலம் மத்திய அரசுக்கு நடப்பு ஆண்டில் ரூ.9,488.70 கோடி கூடுதல் செலவாகும். இதன் மூலம் 47.14 லட்சம் மத்திய அரசு ஊழியர்களும், 68.62 லட்சம் ஓய்வூதியதாரர்களும் பயனடைவார்கள்.

18 மாத நிலுவை
மத்திய அரசின் அகவிலைப்படி (DA) உயர்வு அறிவிப்பு அனைவராலும் பாராட்டப்பட்ட நிலையில் உயர்த்தப்பட்ட அகவிலைப்படி (DA) இன்னும் முழுமையாக அளிக்கப்படாமல் உள்ளது. இதனால் மத்திய அரசு ஊழியர்கள் சுமார் 18 மாதத்திற்கான அகவிலைப்படியை (DA ஜனவரி 2020 முதல் ஜூன் 2021) பெற காத்திருக்கின்றனர்.

லெவல்-1 ஊழியர்கள்
மத்திய அரசு ஊழியர்களுக்கான 18 மாத அகவிலைப்படி அரியர் தொகையைக் கணக்கிடும் போது, லெவல்-1 பிரிவில் இருக்கும் மத்திய அரசு ஊழியர்களின் DA நிலுவைத் தொகை ரூ.11,880 முதல் ரூ.37,554 வரை உள்ளது.

லெவல்-14 ஊழியர்கள்
இதேபோல் 7வது சம்பள கமிஷன் படி அடிப்படை ஊதியம் ரூ. 1,23,100 முதல் ரூ. 2,15,900 கொண்ட லெவல்-13 மற்றும் லெவல்-14 பிரிவில் இருக்கும் மத்திய அரசு ஊழியர்களுக்கான 18 மாத அகவிலைப்படி நிலுவை தொகை ரூ.1,44,200 மற்றும் ரூ.2,18,200 ஆக உள்ளது.

மத்திய அரசு
மத்திய அரசு ஏற்கனவே நிதி நெருக்கடி, பணவீக்க உயர்வு, விலைவாசி உயர்வு எனப் பல பிரச்சனைகளை எதிர்கொண்டு வரும் நிலையில் 18 மாத அகவிலைப்படி நிலுவை தொகையை அளிக்க முடியாமல் உள்ளது. மேலும் இன்று அகவிலைப்படி உயர்த்தி அளிக்கப்பட்ட அறிவிப்பிலும் 18 மாத நிலுவை தொகை எப்போது அளிக்கப்படும் என்பதை அறிவிக்கவில்லை.