7வது சம்பள கமிஷன்: மத்திய அரசு ஊழியர்களுக்குப் புதிய சலுகை.. தீபாவளிக்கு முன் சம்பளத்தில் உயர்வு..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்தியாவில் கொரோனா தொற்றுக் காரணமாக மத்திய அரசு ஊழியர்களுக்கான பல சலுகைகளை அரசு நிறுத்தி வைத்திருந்த நிலையில் தற்போது, ஒவ்வொரு சலுகையாக அளிக்கப்பட்டு வருகிறது.

 

சமீபத்தில் மத்திய அரசு தனது ஊழியர்களுக்கான கிராக்கிப்படி மற்றும் கிராக்கிப்படி நிவாரணம் ஆகியவற்றை உயர்த்திக் கொடுத்த நிலையில் அனைத்து ஊழியர்களின் சம்பளம் அதிகரித்தது.

தொடர் லாபத்தில் முதலீட்டாளர்கள்.. மீண்டும் மீண்டும் புதிய உச்சம் தொடும் இந்திய சந்தைகள்..!

இந்நிலையில் தற்போது புதிதாக ஒரு சலுகை திட்டத்தை அறிவித்துள்ளது, மத்திய அரசு.

குழந்தைகள் கல்வி உதவித்தொகை

குழந்தைகள் கல்வி உதவித்தொகை

கொரோனா தொற்றுக் காலத்தில் மத்திய அரசு ஊழியர்கள் யாரேனும் குழந்தைகள் கல்வி உதவித்தொகை (Education Allowance (CEA)) பெறாமல் இருந்திருந்தால், அவர்கள் தற்போது எவ்விதமான ஆவணமும் இல்லாமல் குழந்தைகள் கல்வி உதவித்தொகை பெற அனுமதி அளித்துள்ளது.

மாதம் 2,250 ரூபாய்

மாதம் 2,250 ரூபாய்

மத்திய அரசு தனது ஊழியர்களின் கல்விக்காக ஒவ்வொரு மாதமும் 2,250 ரூபாய் அளவிலான உதவித் தொகையை 7வது சம்பள கமிஷன் அடிப்படையில் அளிக்கிறது. இந்தத் தொகையைத் தகுந்த ஆவணத்தைச் சமர்ப்பித்துப் பெற முடியும்.

கொரோனா காலம்

கொரோனா காலம்

ஆனால் இந்தக் கொரோனா காலத்தில் போதுமான ஆவணங்கள் பெற முடியாத பட்சத்தில் மத்திய அரசு, தனது ஊழியர்களுக்கு ஆவணமும் இல்லாமல் குழந்தைகள் கல்வி உதவித்தொகை பெற அனுமதி அளித்துள்ளது.

ஜூலை மாத அறிவிப்பு
 

ஜூலை மாத அறிவிப்பு

மத்திய அரசின் பர்சனல் மற்றும் ட்ரைனிங் துறை ஜூலை மாதம் கிராக்கிப்படி மற்றும் கிராக்கிப்படி நிவாரணம் அறிவித்த போதே குழந்தைகள் கல்வி உதவித்தொகை பெறுவதற்கான அறிவிப்பை வெளியிட்டது.

ஆவணங்கள் பற்றாக்குறை

ஆவணங்கள் பற்றாக்குறை

ஆனால் லாக்டவுன் காலத்தில் கல்விக் கட்டணம் ஆன்லைன் மூலம் செலுத்தியதாலும், குழந்தைகளின் ரிப்போட்ர்ட் கார்டு கல்வி நிர்வாகம் அனுப்பாத நிலையில் போதுமான ஆவணங்கள் மத்திய அரசு ஊழியர்களிடம் இல்லாத காரணத்தால் இத்தொகையைப் பெற முடியாமல் போனது.

அரசு சலுகை

அரசு சலுகை

இந்தப் பிரச்சனை பெரியதாக வெடித்த போது மத்திய அரசின் பர்சனல் மற்றும் ட்ரைனிங் துறை மார்ச் 2020-21ஆம் நிதியாண்டுக்கான குழந்தைகள் கல்வி உதவித்தொகையைப் பெற ரிசல்ட் / ரிப்போர்ட் கார்டு / கல்வி கட்டணம் செலுத்தியதற்கான எஸ்எம்எஸ் அல்லது ஈமெயில் ஆகியவை பிரின்ட் அவுட் சமர்ப்பித்துப் பெறலாம். இல்லையெனில் self-declaration முறையில் பெறலாம் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

வருடத்திற்கு 54000 ரூபாய்

வருடத்திற்கு 54000 ரூபாய்

மத்திய அரசு ஊழியர்கள் அதிகப்படியாக இரு குழந்தைகளுக்குக் குழந்தைகள் கல்வி உதவித்தொகையைப் பெற முடியும். இதன் மூலம் ஒருவர் 2,250 முதல் 4500 ரூபாய் வரையில் ஒவ்வொரு மாதமும் கல்விக்கான உதவித் தொகையாகப் பெறலாம். இதன் மூலம் 27000 ரூபாய் முதல் 54000 ரூபாய் வரையிலான உதவித் தொகையைப் பெறலாம்.

தீபாவளி

தீபாவளி

இதன் மூலம் இதுநாள் வரையில் 020-21ஆம் நிதியாண்டுக்கான குழந்தைகள் கல்வி உதவித்தொகையைப் பெறாதவர்கள், தீபாவளி பண்டிக்கு முன்பு மிகப்பெரிய தொகையைத் தங்களது சம்பளத்தில் பெற உள்ளனர்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

7th Pay Commission: Good news for Central govt employees on Children Education Allowance

7th Pay Commission: Good news for Central govt employees on Children Education Allowance
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X