7வது சம்பள கமிஷன்.. இப்போதைக்கு TA உயர்வு இல்லை.. மத்திய அரசு ஊழியர்களுக்கு ஏமாற்றம்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

வரவிருக்கும் ஜூலை முதல் மத்திய அரசு ஊழியர்களுக்கு பெரும் நிவாரணம் வரலாம். ஏனெனில் 2021 ஜூலை மாதத்தில் அகவிலைப்படியில் இருந்த முடக்கம் நீக்கப்படும் என பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகின்றது.

 

இந்த அகவிலைப்படி உயர்வுடன், ஊழியர்களுக்கு பயணப்படி உயர்வும் இருக்கும் என்றும் பெரும் எதிர்ப்பார்ப்பு நிலவி வந்தது.

ஆனால் மத்திய அரசு தரப்பில் மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வுடன், பயணப்படி உயர்வும் இருக்காது என தேசிய கவுன்சில் அதிகாரி தகவல் தெரிவித்துள்ளார்.

வங்கி தலைவர் பதவி காலம் இனி 15 ஆண்டுகள் மட்டுமே.. RBI உத்தரவால் யாருக்கெல்லாம் பாதிப்பு..?!

முக்கிய அறிவிப்பு

முக்கிய அறிவிப்பு

அரசின் அகவிலைப்படி அதிகரிப்பினை பொறுத்து பயணப்படி அதிகரிக்காது. ஏனெனில் தற்போது அகவிலைப்படி 25% மேலாக இல்லை. கொரோனா பெருந்தொற்று காரணமாக கடந்த 2020 ஜனவரி 1 முதல் மத்திய அரசு ஊழியர்களுக்கான டிஏவினை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. ஜனவரி 2020 முதல் ஜூன் 2020 வரையும், ஜூலை 2020 முதல் டிசம்பர் 2020 வரையிலும், ஜனவரி 2021 முதல் ஜூன் 2021 வரையிக்லும் என்று மூன்று தவணை அகவிலைப்படியானது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

டிஏ விகிதம்

டிஏ விகிதம்

இதற்கிடையில் தான் மத்திய அரசு ஊழியர்களுக்கான இந்த டிஏவினை வரும் ஜூலை 1 முதல் வழங்கப்படும் என அறிவித்துள்ளது. இதனால் டிஏ 25% ஆக வழங்கப்படலாம் என கூறப்படுகிறது. பொதுவாக இந்த டிஏ ஒவ்வொரு தவணைக்கும் 2% அதிகரித்து வழங்கப்படுவது வழக்கமான ஒன்று. ஆக நிறுத்தப்பட்ட 3 தவணைகள் மற்றும் ஜூலை 2021ம் சேர்த்து, இறுதியாக வழங்கப்பட்ட 17%ல் இருந்து, 25% அதிகரிக்கும் என்றும் எதிர்பார்ப்புகள் இருந்து வருகின்றது.

பயணப்படி அதிகரிக்காது?
 

பயணப்படி அதிகரிக்காது?

இதற்கிடையில் பயணப்படி குறித்து தேசிய கவுன்சில் ஜே.சி.எம் இன் பணியாளர் தரப்புச் செயலாளர் டி.ஏ.சிவ் கோபால் மிஸ்ரா கூறுகையில், மத்திய அரசு ஊழியர்களின் பயணப்படி டிஏவினை பொறுத்து அதிகரிக்கும். ஆனால் டிஏ 25% அல்லது அதற்கு மேல் இருந்தால் தான் இது சாத்தியமாகும். தற்போது மத்திய அரசு ஊழியர்களின் டிஏ விகிதம் 17% ஆக உள்ளது. ஆக தற்போதைக்கு பயணப்படி உயராது என்றும் கூறியுள்ளார்.

டிஏ உயர்வு எதிர்பார்ப்பு

டிஏ உயர்வு எதிர்பார்ப்பு

மேலும் ஜனவரி 2021 முதல் ஜூன் வரையிலான டிஏ உயர்வு இன்னும் எதிர்பார்ப்பு நிலையிலேயே உள்ளது. இது நவராத்திரியில் இருந்து, தீபாவளிக்குள் அறிவிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. டிஏ உயர்வினை ஊழியர்கள் 2021ம் ஆண்டின் இறுதியில் 7வது சிபிசி பே மேட்ரிக்ஸில் பிரதிபலிக்கும் என்று எதிர்பார்க்கலாம்.

மூன்று தவணைகள் முடக்கம்

மூன்று தவணைகள் முடக்கம்

கொரோனா வைரஸ் பெருந்தொற்று நோய் பரவல் காரணமாக, மத்திய அரசு, ஜூன் 2021 வரை மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியை முடக்கியது. இதனால் 1.1.2020 முதல் 30.6.2020, 1.7.2020 முதல் 31.12.2020 வரை மற்றும் 1.1.2021 முதல் 30.6.21 வரையிலான காலப்பகுதியில் அறிவிக்கப்பட்ட மூன்று டிஏ தவணைகளை அறிவிக்க முடியாமல் போனது. அகவிலைப்படி முடக்கம் அறிவிக்கப்பட்டபோது, மத்திய அரசு ஊழியர்களின் டிஏ அவர்களின் அடிப்படை சம்பளத்தில் 17% ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

7th pay commission: TA hike for CGS not coming in july 2021

7th pay commission updates.. 7th pay commission: TA hike for CGS not coming in july 2021
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X