7வது சம்பள கமிஷன் குறித்து எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை.. ஜூலை 1 முதல் மாற்றம் இருக்காது..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இன்னும் ஜூன் மாதம் முடிய இன்னும் சில தினங்களே உள்ள நிலையில், ஜூலை முதல் அரசு ஊழியர்களின் சம்பளத்தில் பெரும் மாற்றம் வரலாம் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது.

 

இதற்கிடையில் ஜூன் 26 அன்று நடந்த தேசிய கவுன்சில் கூட்டத்தில், DA மற்றும் DR வழங்கப்படுவது தொடர்பான எந்த ஆணையும் வழங்கப்படவில்லை.

ஓலாவின் பிரம்மாண்ட E-scooter திட்டம்.. விரைவில் தொடங்கப்படலாம்..!

இது குறித்து சமூக வலைதளங்களில் வெளியாகும் தகவலும் பொய்யானது எனவும், இது குறித்து அரசால் எந்த அதிகாரபூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை என விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

பெரும் ஏமாற்றம்

பெரும் ஏமாற்றம்

மேலும் ஜூலை 1, 2020 மற்றும் ஜனவரி 1, 2021க்கு செலுத்த வேண்டிய டிஏ மற்றும் டிஆர் தவணைகளும் செலுத்தப்படாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஜூலை 1 முதல் மத்திய அரசு ஊழியர்களுக்கு பெரும் நிவாரணம் வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில் 2021 ஜூலை மாதத்தில் அகவிலைப்படியில் இருந்து வரும் முடக்கம் நீக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவி வந்த நிலையில், இது பெரும் ஏமாற்றத்தினை அளித்துள்ளது.

தற்போதைக்கு நிவாரணம் இல்லை

தற்போதைக்கு நிவாரணம் இல்லை

மத்திய அரசின் இந்த அறிவிப்பினால் 52 லட்சம் மத்திய அரசு ஊழியர்களுக்கும், 60 லட்சம் ஓய்வூதியதாரர்களுக்கும் பயனடைவார்கள் என்றும் பெரிதும் எதிர்பார்ப்பு நிலவி வந்தது. ஆனால் அரசின் இந்த அறிவிப்பு ஏமாற்றம் அளிக்கும் விதமாகவே வந்துள்ளது.

என்ன காரணம்?
 

என்ன காரணம்?

கொரோனவின் இரண்டாம் கட்ட பரவல் காரணமாக, ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியினால், மத்திய அரசு இந்த டிஏ மற்றும் டிஆர் விகிதங்களை நிறுத்தி வைத்தது. அரசுக்கு வரவேண்டிய வருவாய் குறைந்த நிலையில், வருவாய் விகிதங்கள் வீழ்ச்சி கண்டன. அதே சமயம் கொரோனா காரணமாக செலவினங்களும் அதிகரித்தன. இந்த நிலையில் தான் அரசு ஊழியர்களுக்கு வழங்கப்பட்டு வந்த டிஏ மற்றும் டிஆர் விகிதம் நிறுத்தப்பட்டது.

எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை

எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை

முன்னதாக கடந்த மார்ச் 2021ல் மத்திய அரசு ஜூலை மாதம் முதல் இந்த அகவிலைப்படி தொடரப்படும் என அரசு அறிவித்தது. எனினும் பரவி வரும் கொரோனா காரணமாக ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் இன்னும் கொஞ்ச நாள் காத்திருக்க வேண்டியிருக்கலாம் என கூறப்பட்ட நிலையில், தற்போதும் இது குறித்த அறிவிப்பு வெளியாகவில்லை.

பெரிய மாற்றம் இருக்கலாம் என எதிர்பார்ப்பு

பெரிய மாற்றம் இருக்கலாம் என எதிர்பார்ப்பு

மத்திய அரசு ஊழியர்களுக்கான இந்த டிஏ விகிதம், இறுதியாக வழங்கப்பட்ட 17%ல் இருந்து, 28% வரை அதிகரிக்கலாம் என்று பெரிய எதிர்பார்ப்பு இருந்து வந்தது. இது பல லட்சம் பேருக்கு நிவாரணமாக வரலாம். இதனால் அரசு ஊழியர்களின் சம்பளத்தில் பெரிய மாற்றம் இருக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்பட்டது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

7th pay commission updates: No memorandum issued on resumption of DA to govt employees

7th pay commission updates.. 7th pay commission: official meeting confirmed tomorrow regarding restoration of DA & DA benefits
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X