ஒரு துருக்கிக் காரர் ஏர் இந்தியாவின் CEO-வா.. வேண்டவே வேண்டாம்.. வலுத்த எதிர்ப்பு..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஏர் இந்தியாவின் தலைமை நிர்வாகியாக இருக்க மறுத்துவிட்டதாகவும் கூறப்படுகின்றது.

 

ஏர் இந்தியாவின் புதிய தலைமை நிர்வாக அதிகாரியாக துருக்கி அதிபர் எர்டோகானின் முன்னாள் ஆலோசகர் மற்றும் துருக்கி ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் தலைவராக இருந்த இலகர் அய்சியை டாடா குழுமம் ஏப்ரல் 1 முதல் நியமிக்கப்படுவதாக அறிவித்தது.

எனினும் ஒரு துருக்கிகாரர் ஏர் இந்தியாவுக்கு தலைமை அதிகாரியா? என்ற எதிர்ப்புகள் எழுந்தன.

இது இந்தியா துருக்கிக்கு இடையிலான உறவுகளில் சில கருத்து வேறுபாடு இருக்கும் நிலையில், இல்கர் அய்சி நியமனத்தில் பிரச்சனை உருவாகியுள்ளது. இது குறித்து பல்வேறு கோணத்தில் மத்திய அரசு ஆய்வு செய்து வருவதாகவும் சமீபத்தில் தகவல்கள் வெளியாகின.

டாடா-வின் ஏர் இந்தியா சிஇஓ ஆஃபரை தூக்கி எறிந்த இல்கர் ஆய்சி.. மோடி அரசு தான் காரணமா..?!

இல்கர் அய்சி நிராகரிப்பு

இல்கர் அய்சி நிராகரிப்பு

இதற்கிடையில் இதற்கு ஆர் எஸ் எஸ் கீழ் இயங்கும் சுதேசி ஜாக்ரன் மஞ்ச் எதிர்ப்பு தெரிவித்தது. இது நாட்டின் பாதுகாப்பிற்கே ஆபத்து., ஒன்றிய அரசு அண்டை நாட்டவரை தலைமை பதவிக்கு நியமிப்பதற்கு அனுமதி -கொடுக்குமா? என்ற கேள்வியை முன் வைத்தது. இந்த நிலையில் தான் ஆர்.எஸ்.எஸ் அறிக்கை வெளீயான 4 நாட்களுக்குள் இல்கர் அய்சி தனது நியமனத்தினை நிராகரித்துள்ளார்.

தேசிய பாதுகாப்பு முக்கியம்

தேசிய பாதுகாப்பு முக்கியம்

தேசிய பாதுகாப்பினை கருத்தில் கொண்டு அரசாங்கம் இதற்கு அனுமதி கொடுக்க கூடாது என்று நாங்கள் நினைக்கிறோம். அரசு ஏற்கனவே இந்த பிரச்சனையை உணர்ந்திருக்கும். இதனை தீவிரமாக எடுத்து கொள்ள வேண்டும். உள்துறை அமைச்சகம் வெளி நாட்டினரை இந்திய நிறுவனங்களின் முக்கிய பணிகளில் பணியமர்த்தும் போது, அவர்களின் பின்னணியை கவனமாக எடுத்துக் கொள்ளும்.

இது தான் காரணம்
 

இது தான் காரணம்

ஆக இல்கர் அய்சி பணியமர்த்தலிலும் அரசு இதனைத் தான் கவனத்தில் எடுத்துக் கொண்டிருக்கலாம். 1994 - 1998 வரை இஸ்தான்புல் மேயராக இருந்த போது, துருக்கி அதிபர் எர்டோகானின் ஆலோசகராக அய்சி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் துருக்கி ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் தலைவராக 2015ம் ஆண்டு நியமிக்கப்பட்டார்.

திறமையானவர்

திறமையானவர்

உலகளாவிய அளவில் துருக்கி ஏர்லைன்ஸ் வெற்றி பெற்றதற்கு முக்கிய காரணம் அய்சியும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. எனினும் சுமார் 7 ஆண்டுகாலம் அங்கு பணியாற்றிய நிலையில், கடந்த ஜனவரி மாதத்தில் தான் தனது பதவியினை ராஜினாமா செய்தார். அதன் பின்னர் தான் ஏர் இந்தியாவின் தலைவராக நியமிகப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

A Turkish man is the CEO of Air India? RSS affiliate opposes choice of AI chief

A Turkish man is the CEO of Air India? RSS affiliate opposes choice of AI chief/ஓரு துருக்கிக் காரர் ஏர் இந்தியாவின் CEO-வா.. வேண்டாவே வேண்டாம்.. வலுத்த எதிர்ப்பு..!
Story first published: Tuesday, March 1, 2022, 16:50 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X