அதானி குழுமம் முதல் முறையாக 200 பில்லியன் டாலர் சந்தை மதிப்பீட்டைப் பெற்று, மார்ச் 7 ஆம் தேதி மூன்று நிறுவனங்கள் மட்டுமே இருக்கும் எலைட் கிளப்பில் நுழைந்தது சாதனை படைத்துள்ளது.
இதைத் தொடர்ந்து வர்த்தக விரிவாக்கத்திற்காக அபுதாபி-ஐ சேர்ந்த முன்னணி நிறுவனம் 15400 கோடி ரூபாய் முதலீட்டை ஈர்த்துள்ளது.
அள்ளி அள்ளி கொடுத்த அதானி.. பண மழையில் முதலீட்டாளர்கள்.. எவ்வளவு லாபம் தெரியுமா..?

அபுதாபி
அபுதாபியை தலைமையிடமாகக் கொண்ட இண்டர்நேஷ்னல் ஹோல்டிங் கம்பெனி (IHC) சுமார் 2 பில்லியன் டாலார் அளவிலான தொகை இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் 15,400 கோடி ரூபாய் அளவிலான தொகையை 3 அதானி குழும நிறுவனத்தில் முதலீடு செய்ய உள்ளது.

3 அதானி நிறுவனங்கள்
அதானி குழுமத்தின் கிரீன் எனர்ஜியை சார்ந்த நிறுவனங்களான அதானி கிரீன் எனர்ஜி லிமிடெட் (ஏஜிஎல்), அதானி டிரான்ஸ்மிஷன் லிமிடெட் (ஏடிஎல்) மற்றும் அதானி எண்டர்பிரைசஸ் லிமிடெட் (ஏஇஎல்) ஆகிய 3 நிறுவனத்தில் இந்த 15400 கோடி ரூபாய் முதலீடு குவிய உள்ளது.

முதலீடு
IHC நிறுவனம் அதானி கிரீன் எனர்ஜி லிமிடெட் நிறுவனத்தில் 3,850 கோடி ரூபாயும், அதானி டிரான்ஸ்மிஷன் நிறுவனத்தில் 3,850 கோடி ரூபாயும், அதானி எண்டர்பிரைசஸ் நிறுவனத்தில் 7,700 கோடி ரூபாயும் முதலீடு செய்ய முடிவு செய்துள்ளது.

அதானி குழுமம்
இந்த முதலீடு பரிவர்த்தனைகள் அடுத்த ஒரு மாதத்திற்குள் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதானி குழும நிறுவனங்களின் வளர்ச்சியை மேம்படுத்தவும், நிறுவனத்தின் நிதிநிலையைச் சரி செய்ய இந்த முதலீடு பயன்படுத்தப்படும் என்று அதானி குழுமம் தெரிவித்துள்ளது.

மத்திய கிழக்கு நாடுகள், ஆப்பிரிக்கா
அதானி குரூப் இந்த முதலீட்டின் வாயிலாக இண்டர்நேஷ்னல் ஹோல்டிங் கம்பெனி உடன் இணைந்து தனது வர்த்தகத்தை இந்தியா, மத்திய கிழக்கு நாடுகள், ஆப்பிரிக்கா போன்ற நாடுகளுக்கு விரிவாக்கம் செய்ய உள்ளது. மேலும் இந்த முதலீட்டுக்கு அதானி குழும நிர்வாகம் ஒப்புதல் அளித்துள்ளது.