இந்தியாவில் யார் முதல் இடத்தைப் பிடிப்பது என்பதில் டிசிஎஸ், இன்போசிஸ், ஹெச்சிஎல், விப்ரோ தொடர்ந்து போட்டிப்போட்டு வரும் நிலையில், அக்சென்சர் ஏற்கனவே டாப் 3 நிறுவனங்களுக்கு இணையான வருமானத்தைப் பெற்று வரும் நிலையில் 2022ஆம் ஆண்டில் விப்ரோ உடன் சேர்ந்து 4 நிறுவனத்தையும் மொத்தமாகச் சேர்ந்து அதிக வருமானத்தைப் பெறத் தயாராகி வருகிறது.
இந்தியா ஐடி நிறுவனங்கள் ஒன்று, இரண்டு நிறுவனங்களை வாங்கினாலே இந்திய முதலீட்டாளர்கள் வியந்து பார்க்கும் நிலையில் அக்சென்சர் நிறுவனம் கைப்பற்றியுள்ள நிறுவனங்களைப் பார்த்தீங்கனா ஆடிப்போயிடுவீங்க.
அக்சென்சர் ஊழியர்களுக்கு ஜாக்பாட்.. ஒன்-டைம் போனஸ் அறிவிப்பு..!

அக்சென்சர் நிறுவனம்
உலகம் முழுவதும் ஐடி சேவை நிறுவனங்கள் அதிகளவிலான வர்த்தகத்தைப் பெற்று வரும் நிலையில், இத்துறையில் முன்னோடியாக விளங்கும் அக்சென்சர் நிறுவனமும் அதிகளவிலான வர்த்தகத்தைப் பெற்று வருகிறது. மேலும் அக்சென்சர் நிறுவனம் இந்திய ஐடி நிறுவனங்களைப் போல் அதிகப்படியான விலை போட்டியை உருவாக்க முடியு செய்துள்ளது.

50.5 பில்லியன் டாலர் வருவாய்
அக்சென்சர் நிறுவனம் 2021ஆம் ஆண்டில் மட்டும் சுமார் 50.5 பில்லியன் டாலர் அளவிலான வர்த்தகத்தைப் பெற்றுள்ளது. இது டாலர் மதிப்பீட்டில் 2020ஆம் ஆண்டை விடவும் 14 சதவீதம் அதிகமாகும். அக்சென்சர் நிறுவனத்தின் வருவாய் அளவீட்டைப் பார்த்து டிசிஎஸ், இன்போசிஸ், ஹெச்சிஎல், விப்ரோ நிறுவனங்கள் மட்டும் அல்லாமல் உலகின் அனைத்து முன்னணி டெக் சேவை நிறுவனங்களும் வியந்து பார்க்கிறது.

ஐடி சேவை பிரிவு
உலகளவில் ஐடி சேவை பிரிவில் அதிகம் வருமான பெற்ற நிறுவனங்கள் பட்டியலில் 50.5 பில்லியன் டாலர் உடன் அக்சென்சர் 4 இடத்தில் இருக்கும் நிலையில் முதல் இடத்தில் டெல் 100 பில்லியன் டாலர் உடனும், ஐபிஎப் 74 பில்லியன் டாலர் உடன் 2வது இடத்திலும், ஹெச்பி எண்டர்பிரைசர்ஸ் 62 பில்லியன் டாலர் வருவாய் உடன் 3வது இடத்தில் உள்ளது.
இந்திய ஐடி சேவை நிறுவனங்கள் டாப் 10 பட்டியலுக்குள் இல்லை என்பது கூடுதல் தகவல்.

அக்சென்சர் வளர்ச்சி அளவீடு
இந்நிலையில் அக்சென்சர் 2022ஆம் ஆண்டுக்கான வருவாய் வளர்ச்சி அளவீட்டை ஏற்கனவே இருந்த 12-15 சதவீத வளர்ச்சி அளவீட்டைச் சமீபத்தில் 19-22 சதவீதமாக உயர்த்தியது. கடந்த 3 காலாண்டில் அக்சென்சர் நிறுவனத்தின் வருவாய் மற்றும் ஆப்ரேட்டிங் லாபம் 20 சதவீதம் வரையில் அதிகரித்துள்ளது.

அக்சென்சர் பங்கு மதிப்பு
இதன் எதிரொலியாக அக்சென்சர் நிறுவனத்தின் பங்கு மதிப்பு கடந்த 6 மாதத்தில் மட்டும் 300 டாலரில் இருந்து 38 சதவீதம் வரையில் உயர்ந்து 414 டாலர் வரையில் உயர்ந்துள்ளது.

104 நிறுவனங்கள் கைப்பற்றல்
அக்சென்சர் நிறுவனம் தனது வர்த்தகம் மற்றும் சேவை விரிவாக்கத்திற்காக 2019ஆம் ஆண்டில் இருந்து சுமார் 104 நிறுவனங்களைக் கைப்பற்றியுள்ளது, தோராயமாகக் கணக்குப்போட்டுப் போட்டு பார்த்தால் ஒரு வாரத்திற்கு ஒரு நிறுவனத்தை வாங்கியுள்ளது அக்சென்சர்.

50,000 ஊழியர்கள்
மேலும் அக்சென்டர் கடந்த ஒரு காலாண்டில் மட்டும் 50,000க்கும் அதிகமான ஊழியர்களைப் பணியில் அமர்த்தியுள்ளது. இது டிசிஎஸ் 2021 முழுவதும் சேர்த்த ஊழியர்கள் எண்ணிக்கையை விடவும் அதிகமாகும்.

இந்திய ஐடி நிறுவனங்கள்
2021ஆம் ஆண்டுக் கணக்கின் படி அக்சென்சர் 50.5 பில்லியன் டாலர் வருமானத்தைப் பெற்றுள்ள நிலையில் டிசிஎஸ் 22 பில்லியன் டாலரும், இன்போசிஸ் 14 பில்லியன் டாலரும், ஹெச்சிஎல் 10 பில்லியன் டாலரும் அளவிலான வருவாய் பெற்றுள்ளது.

விப்ரோ
அக்சென்சர் ஏற்கனவே டிசிஎஸ், இன்போசிஸ், ஹெச்சிஎல் நிறுவனத்தின் மொத்த வருவாயும் பெற்றுள்ள நிலையில் அடுத்த வருடத்தின் 19-22 சதவீத வருவாய் வளர்ச்சி டாக்கெட் மூலம் விப்ரோ நிறுவனத்தின் 10 பில்லியன் டாலர் வருவாய் அளவீட்டையும் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.