அக்சென்சர்-ன் வெற்றி இந்திய ஐடி நிறுவனங்களின் தோல்வியா..? உண்மை என்ன..?

By என். சொக்கன்
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்திய மென்பொருள் துறை என்று பேசினால் உடனடியாக எல்லாரும் முன்வைக்கும் மூன்று பெயர்கள் டிசிஎஸ் (டாடா கன்சல்டிங் சர்வீசஸ்), இன்ஃபோசிஸ் மற்றும் விப்ரோ.

 

இந்த மூவரைத் தாண்டி இன்னும் பல நிறுவனங்களும் கடந்த சில ஆண்டுகளில் முன்னுக்கு வந்திருந்தாலும், உலக அளவில் இந்தத் துறையில் இந்தியாவின் பங்களிப்பாகப் பார்க்கப்படுகிற முக்கிய நிறுவனங்கள் இவைதான்.

சாமானியர்களுக்கு சர்பிரைஸ்.. 6வது நாளாக சரிவில் தங்கம் விலை.. எவ்வளவு குறைந்திருக்கு பாருங்க!

இந்திய பொருளாதாரம்

இந்திய பொருளாதாரம்

பல்வேறு நாடுகளில் மென்பொருள் துறை சார்ந்த பணிகளை வழங்குவதன் மூலம் இவர்கள் சம்பாதிக்கிற பெரும் வருவாய் நம்முடைய பொருளாதாரத்துக்குத் துணை நிற்கிறது என்கிற நன்மை ஒருபுறமிருக்க, உள்நாட்டில் இவர்கள் உருவாக்கியிருக்கிற பணிகளின் எண்ணிக்கையும் ஒரு பெரிய சமூக மாற்றத்தைக் கொண்டு வந்திருக்கிறது.

இந்திய மென்பொருள் துறை

இந்திய மென்பொருள் துறை

எனினும், இந்திய மென்பொருள் துறை பெரும்பாலும் சேவைப் பணிகளைத்தான் (Service Business) சார்ந்துள்ளது என்கிற குற்றச்சாட்டும் இருக்கிறது. அதாவது, Product Innovation எனப்படுகிற பொருள்/தயாரிப்புச் சார்ந்த புதுமைச் சிந்தனைகளை இந்திய நிறுவனங்கள் பெரிய அளவில் கொண்டுவரவில்லை, உலக அளவில் ஏற்றுக்கொள்ளப்படுகிற மென்பொருள் தயாரிப்புகளை உருவாக்கி அதன்மூலம் வருவாயை, வேலை வாய்ப்புகளைப் பெருக்கவில்லை என்கிறார்கள்.

சாப்ட்வேர் ப்ராடெக்ட்ஸ்
 

சாப்ட்வேர் ப்ராடெக்ட்ஸ்

நாம் இந்தியர்கள் என்கிற காரணத்தால் வரக்கூடிய சார்பு நிலையைச் சற்று நிறுத்திவிட்டு முற்றிலும் தரவுகளை வைத்துச் சிந்தித்தால், இந்தக் குற்றச்சாட்டில் ஓரளவு உண்மை இருக்கிறதுதான். இந்திய நிறுவனங்களால் உருவாக்கப்பட்ட மென்பொருள் தயாரிப்புகளின் (Software Products) சிறு பட்டியல் ஒன்றை நாம் முன்வைக்கலாம் என்றபோதும், பங்களிப்பு என்ற அளவில் பார்க்கும்போது அவை பின்னணியில்தான் நிற்கின்றன, ஒரு வீட்டில் பெரிய மகன் கோடிகளில் சம்பாதிக்கும்போது இளைய மகன் சில ஆயிரம் சம்பாதிப்பதைப்போலதான் இது.

இந்திய ஐடி நிறுவனங்கள்

இந்திய ஐடி நிறுவனங்கள்

டிசிஎஸ், இன்ஃபோசிஸ், விப்ரோவும் சரி, மற்ற புதிய இந்திய நிறுவனங்களும் சரி, இந்த உண்மையை உணர்ந்திருக்கின்றன. இதைச் சரிசெய்வதற்கு என்ன செய்யலாம், நம்முடைய புதுமைச் சிந்தனையை எப்படித் தூண்டிவிடலாம், உலகச் சந்தையைப் புரிந்துகொண்டு அதற்கேற்ற தயாரிப்புகளை எப்படி உருவாக்கலாம் என்கிற கேள்விகள் எழுந்திருக்கின்றன, பல மூளைகள் இந்தக் கோணத்தில் சிந்தித்துக் கொண்டிருக்கின்றன

சேவை துறை

சேவை துறை

அதே நேரம், சேவைத்துறையில் நமக்கு இருக்கிற ஆழமான திறன், அனுபவத்தை முழுமையாகப் பயன்படுத்திக்கொள்வதையும் நாம் தொடரவேண்டும்; அதில் நாம் தொடவேண்டிய (பயன்படுத்திக்கொள்ளவேண்டிய) சந்தை இன்னும் ஏராளமாக இருக்கிறது.

அக்சென்சர்

அக்சென்சர்

எடுத்துக்காட்டாக, Accenture நிறுவனம் சமீபத்தில் வெளியிட்டிருக்கிற நிதி அறிக்கையின்படி அவர்கள் தங்களுடைய சேவை சார்ந்த தொழில் அளவைக் கணிசமாக (கிட்டத்தட்ட மூன்று மடங்கு) உயர்த்தியிருக்கிறார்கள். இவர்களும் இந்திய மென்பொருள் சேவை நிறுவனங்களும் கிட்டத்தட்ட ஒரே வாடிக்கையாளர்களைத்தான் (Same Customers) குறிவைக்கிறார்கள் என்பதால், ஆக்செஞ்சரின் வளர்ச்சி டிசிஎஸ், இன்ஃபோசிஸ், விப்ரோ நிறுவனங்களுக்குச் சரிவா என்கிற கேள்வி எழுகிறது.

ஐடி வர்த்தகச் சந்தை

ஐடி வர்த்தகச் சந்தை

ஆங்கிலத்தில் "Zero Sum Game" என்று ஒரு பயன்பாடு உண்டு. இதன் பொருள், ஒரு சந்தையில் எத்தனை பேர் குதித்தாலும் அந்தச் சந்தையின் அளவு பெருகாது. எல்லாரும் இருப்பதைத்தான் தங்கள் திறமைக்கேற்ப பிரித்து எடுத்துக்கொள்ளவேண்டும். அதனால், ஒருவர் கூடுதலாக எடுத்துக்கொண்டால் இன்னொருவருடைய பங்கு குறைந்துவிடும். வேறுவிதமாகச் சொல்வதென்றால், ஒருவருடைய வெற்றி, இன்னொருவருடைய தோல்வி.

அக்சென்சர் ஆதிக்கம்

அக்சென்சர் ஆதிக்கம்

இந்தப் பின்னணியில் பார்த்தால், அக்சென்சர்

எந்த வாடிக்கையாளர்களிடமிருந்து தனக்கான மென்பொருள் சேவைப் பணிகளைப் பெறுகிறதோ அங்கெல்லாம் மற்ற நிறுவனங்கள் நுழைய இயலாது என்று சொல்லலாம். ஆனால், உண்மையில் மென்பொருள் சந்தை அத்தனை சிறிய களம் இல்லை.

மென்பொருள் துறை

மென்பொருள் துறை

தொழில்நுட்பமும் அது சார்ந்த சேவைகளும் அவற்றுக்கான தேவைகளும் தொடர்ந்து உருவாகிக்கொண்டிருக்கிற சூழ்நிலையில் இந்தச் சந்தை கொஞ்சம் சுருங்கிக் கொஞ்சம் விரிவடைந்து நிறைய மாறிக்கொண்டிருக்கிறது. அதனால், வாய்ப்புகளும் நிறைய இருக்கின்றன, ஏற்கெனவே உள்ள நிறுவனங்களுக்கு மட்டுமின்றி புதிய நிறுவனங்களுக்கும் இடம் உள்ளது.

சவால்

சவால்

ஆனால், இவர்களில் யாரும் "வழக்கமான" வரையறைகளுடன் இங்கு வந்தால் தனித்து நிற்க இயலாது. ஏதேனும் ஒரு புதுமை வேண்டும், அது ஒரு மென்பொருளாக, சேவை வழங்கும் செயல்முறையாக, திரும்பத் திரும்பப் பயன்படுத்தக்கூடிய கருவிகளாக, ஆவணங்களாக, புதுமைக் கண்டுபிடிப்புகளாக, விரைவான செயல்பாடாக, நேரத்தை மிச்சப்படுத்தும் உத்தியாக, துறை சார்ந்த அறிவு, அனுபவமாக... இப்படி எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம், இவற்றின் கலவையாகவும் இருக்கலாம், அதை வாடிக்கையாளர்களுக்கு எடுத்துரைத்து அவர்களை வெல்வதுதான் சவால்.

அக்சென்சர் வெற்றி

அக்சென்சர் வெற்றி

இந்தக் கோணத்தில் பார்க்கும்போது, அக்சென்சரின் வெற்றி மற்ற இந்திய (அல்லது வேறு நாடுகளைச் சேர்ந்த) மென்பொருள் சேவை நிறுவனங்களுக்கு ஓர் ஆக்கப்பூர்வமான போட்டியைத்தான் உருவாக்கும். அவர்களிடமிருந்து பிறரும் பிறரிடமிருந்து அவர்களும் கற்பதற்கான சூழல் ஏற்படும், பழைய நிறுவனங்கள் தங்களுடைய வலுவான அனுபவத்தைப் பயன்படுத்திக்கொள்கிற அதே நேரத்தில் அதைமட்டும் நம்பியிருக்காமல் புதிய துறைகள், தொழில்நுட்பங்களில் நுழைவார்கள், பொதுவான நெகிழ்வுத்தன்மையை உருவாக்கிக்கொண்டு முன்னேற முயல்வார்கள், புதிய நிறுவனங்கள் துடிப்பை முதலீடாக்கிச் சந்தையைப் பிடிக்கப் பார்ப்பார்கள். இவை அனைத்தும் வாடிக்கையாளர்களுக்கு நல்லது, அவர்களுக்கு நன்மை கிடைத்தால் தொழில்நுட்பத் தேவை, வாய்ப்புகள் இன்னும் பெருகும்.

கஸ்டமர் ஈஸ் கிங்

கஸ்டமர் ஈஸ் கிங்

இதனால், நிறுவனங்களும் அவற்றில் வேலை செய்கிற நம்மைப்போன்ற தனி நபர்களும் வாடிக்கையாளர்களை மையமாக வைத்துச் சிந்திக்கத் தொடங்கவேண்டும் (Customer Centric Thinking). அத்துடன், 'இது எனக்குக் கிடைத்தே தீரும்' என்கிற அசட்டு நம்பிக்கையைத் தூரப்போட்டுவிடவேண்டும்.

மாற்றம் மட்டுமே மாற்றாதது

மாற்றம் மட்டுமே மாற்றாதது

உலகம் கடந்த சில ஆண்டுகளில் பலவிதமாக மாறிவிட்டது, அதைப் புரிந்துகொண்டு ஒவ்வொரு நாளும் நம் இடத்துக்காகப் போராடுவதுதான் இயல்பு. இந்த மனநிலைக்குப் பழகிவிட்டால் 'எல்லாம் சரியாகதான் இருக்கிறது' என்கிற எண்ணமும் அதனால் வருகிற அலட்சியமும் நம்மைவிட்டு விலகிவிடும், எப்போதும் கவனத்துடன் செயல்படுவோம். மிகுதியான அழுத்தத்தை, வெறுப்புணர்வை உண்டாக்காத, குறுக்கு வழிகளை நாடச்செய்யாத சுறுசுறுப்பான போட்டி இந்தத் துறைக்கு நல்லதுதான்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Accenture's Success & what Indian IT Companies can do

Accenture's Success & what Indian IT Companies can do அக்சென்சர்-ன் வெற்றி இந்திய ஐடி நிறுவனங்களின் தோல்வியா..? உண்மை என்ன..?
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X