பெங்களூர்: நாட்டின் மிகப்பெரிய வணிக குழுமங்களில் ஒன்றாக வளர்ந்து வரும் அதானி குழுமம், தனது அடுத்தகட்ட வணிக பயணத்திற்காக கூகுள் நிறுவனத்துடன் கூட்டணி வைத்துள்ளதாக அறிவித்துள்ளது.
கூகுள் உடனான இந்த கிளவுட் கூட்டணி, அதானியின் பன்முகப்படுத்தப்பட்ட வணிகத்தில் டிஜிட்டல் பயன்பாட்டினை மேம்படுத்தும்.
6 நாளில் 5 முறை பெட்ரோல் டீசல் விலை அதிகரிப்பு.. சாமானியர்களை பதம் பார்க்க தொடங்கிய விலையேற்றம்!
மொத்தத்தில் அதானி குழுமத்தின் தகவல் தொழில்நுட்ப செயல்பாடுகளை இது மேம்படுத்தும். இது சிறந்த ஐடி உள்கட்டமைப்பு, தொழில் நுட்ப வசதிகள், தொழிற்துறை தீர்வுகள் என பலவற்றையும் மேம்படுத்த உதவும் என கூகுள் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

கிளவுட் சேவைக்கு மாற்றம்
அதானி நிறுவனம் இந்த கூட்டணி மூலம் 250-க்கும் மேற்பட்ட வணிக - முக்கிய அப்ளிகேஷன்களை கிளவுட் சேவைக்கு மாற்றுவதை நோக்கமாக கொண்டுள்ளது. இது அதன் செயல்பாடுகளை நெறிப்படுத்துகிறது. அதன் பணிகளை மையப்படுத்துகிறது. செயல்பாடுகளை ஒழுங்குபடுத்த பயன்படுகிறது. அதேசமயம் வேகமாகவும், துல்லியமாகவும் அதன் தரவுகளை பயன்படுத்தவும் பயன்படும். மொத்தத்தில் இந்த கூட்டணி அதானி குழுமத்தின் தகவல் தொழில் நுட்ப செயல்பாடுகளை நவீனமயமாக்குவதற்கான இது அவசியமான ஒன்றாகும்.

புதிய வாய்ப்புகளை வழங்கும்
டிஜிட்டல் மாற்றம் என்பது தவிர்க்க முடியாத ஒன்று. இது பல புதிய சவால்கள் மற்றும் புதிய வாய்ப்புகளை வழங்குகிறது. இந்த மாற்றத்தை ஏற்படுத்துவது மட்டுமின்றி, புதிய தொழிற்துறை ஒத்துழைப்பும் தேவை என அதானி குழுமத்தின் தலைவர் கெளதம் அதானி கூறியுள்ளார்.

விரைவான முன்னேற்றம்
இது கூட்டாண்மையின் முதல் கட்ட செயல்பாடுகள் சிறப்பாக நடந்து வருகின்றது. அதானி குழுமம் அதன் தற்போதைய வளாகத்தில் உள்ள தரவு மையம் மற்றும் கூகுள் கிளவுடுக்கு அதன் விரிவான தகவல் தொழில் நுட்பத்தினை மாற்றுவதன் மூலம் விரைவான முன்னேற்றத்தினை அடைந்துள்ளது. இது இன்னும் வளர்ச்சி காண வழிவகுக்கும்.

வளர்ந்து வரும் வணிக குழுமம்
அதானியின் சாப் (SAP) இடம்பெயர்வு என்பது வேகமான ஒன்றாகும். இது வணிகம் முழுவதும் ஏற்கனவே குறிப்பிடத்தக்க தாக்கத்தினை ஏற்படுத்தியுள்ளது. இது எங்களின் தொடர்ச்சியான ஒத்துழைப்பு, புதிய டிஜிட்டல் பிளார்ட்பார்ம்களை மாற்றியமைக்கும் என்று கூகுள் கிளவுட்டின் தலைமை செயல் அதிகாரி தாமஸ் குரியன் கூறியுள்ளார்.
அதானி குழுமம் இந்தியாவில் பல்வகை வணிகங்களின் மிகப்பெரிய மற்றும் வளர்ந்து வரும் வணிக குழுமங்களில் ஒண்றாகும்.