முந்த்ரா துறைமுகத்தில் 3000 கிலோ போதை பொருள்.. 'எங்களுக்கு அதிகாரம் இல்ல சாமி' அதானி குரூப் விளக்கம்

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்திய வரலாற்றிலேயே இதுவரை சிக்காத அளவிற்கு ஓரே இடத்தில் அதுவும் பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சரின் சொந்த மாநிலமான குஜராத்தில், கௌதம் அதானி கட்டுப்பாட்டில் இருக்கும் முந்த்ரா துறைமுகத்தில் சுமார் 3000 கிலோ அளவிலான ஹெராயின் போதைப் பொருளை வருவாய் நுண்ணறிவு இயக்குநரகத்தின் சோதனையில் சிக்கியுள்ளது.

 

இந்தியாவில் துறைமுகம் மற்றும் விமான நிலையங்களை அதிகளவில் மத்திய அரசு தனியாருக்கு அளித்து வரும் நிலையில், இந்திய பணக்காரர்களின் ஒருவரான கௌதம் ஆதானி இதில் ஆதிக்கம் செலுத்தி வருகிறார்.

இந்த நிலையில் 21,000 கோடி ரூபாய் மதிப்பிலான 3000 கிலோ ஹெராயின் போதை பொருள் சிக்கியது நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு கௌதம் அதானி தலைமையிலான அதானி குரூப் விளக்கம் கொடுத்துள்ளது.

அம்பானிக்கு போட்டியாக களமிறங்கும் அதானி.. ஒவர்டேக் செய்வாரா..!

 முந்த்ரா துறைமுகம்

முந்த்ரா துறைமுகம்

குஜராத் மாநிலத்தின் கட்ச் பிராந்தியத்தில் இருக்கும் முந்த்ரா துறைமுகத்தில் தான் தற்போது ரூ21,000 கோடி மதிப்பிலான 3,000 கிலோ ஹெராயின்-ஐ இரு கண்டைனர்களில் வருவாய் நுண்ணறிவு இயக்குநரகம் கைப்பற்றியுள்ளது. முந்த்ரா துறைமுகம் அதானி போர்ட் நிறுவன கட்டுப்பாட்டில் இருக்கும் ஒரு முக்கியமான துறைமுகம்.

 கௌதம் அதானி

கௌதம் அதானி

இந்த விஷயம் மிகப்பெரியதாக வெடித்துள்ள நிலையில் இதற்குக் கௌதம் அதானி தலைமை வகிக்கும் அதானி குரூப் விளக்கம் கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் தள்ளப்பட்டு உள்ளது. அதானி குரூப் இந்த விளக்கத்தை டிவிட்டரில் வெளியிட்டுள்ளது.

 அதானி குரூப் வாழ்த்துக்கள்
 

அதானி குரூப் வாழ்த்துக்கள்

அதானி குரூப் டிவிட்டரில், செப்டம்பர் 16ஆம் தேதி சர்வதேச முந்த்ரா துறைமுகத்தில் இரண்டு கண்டைனர்களில் வருவாய் நுண்ணறிவு இயக்குநரகம் போதைப்பொருள் இருப்பதைக் கண்டுபிடித்துள்ளது பாராட்டுக்குரிய விஷயம், DRI மற்றும் சுங்கத் துறைக்கு வாழ்த்துக்கள்.

 யாருக்கும் அதிகாரம் இல்லை

யாருக்கும் அதிகாரம் இல்லை

இந்திய அரசு சட்டத்தின் மூலம் வருவாய் நுண்ணறிவு இயக்குநரகம் மற்றும் சுங்க துறை சரக்குகளைத் திறந்து, ஆய்வு செய்யவும், பறிமுதல் செய்யவும் உரிமை உண்டு. ஆனால் துறைமுகத்தை இயக்கும் நிறுவனங்களுக்கு இத்தகைய அதிகாரம் இந்தியாவில் யாருக்கும் இல்லை, துறைமுகத்தை இயக்கும் நிறுவனங்களுக்குச் சில கட்டுப்பாடுகள் உள்ளது.

 பொய்களுக்கு முற்றுப்புள்ளி

பொய்களுக்கு முற்றுப்புள்ளி

இந்த அறிக்கை மூலம் சமுக வலைத்தளத்தில் பரவி வரும் பொய்யான, தவறான கருத்துக்களுக்கு விளக்கம் தரப்பட்டு முற்றுப்புள்ளி வைக்கப்படும் என எதிர்பார்க்கிறோம். அதானி போர்ட் மற்றும் SEZ நிறுவனம் கடல்வழி போக்குவரத்து சேவை அளிக்கும் நிறுவனம். முந்த்ரா துறைமுகம் மட்டும் அல்லாமல் இந்தியாவில் இருக்கும் பிற துறைமுகங்களில் வரும் பல ஆயிரம் கண்டைனர்களில் இருக்கும் பொருட்களைச் சோதனை செய்ய எங்களுக்கு அதிகாரம் இல்லை என விளக்கம் கொடுத்துள்ளது அதானி போர்ட்.

 ஆப்கானிஸ்தான்

ஆப்கானிஸ்தான்

இந்த ஹெராயின் போதைப் பொருள் கொண்ட கண்டைனர் ஆப்கானிஸ்தானில் இருந்து டேல்க் (talc) பவுடர் உடன் சேர்ந்து ஏற்றுமதி செய்யப்பட்டு ஈரான் கொண்டு செல்லப்பட்டு அதன் பின்பு இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.

 சென்னை நிறுவனம்

சென்னை நிறுவனம்

இந்தக் கண்டைனரை சென்னையைச் சேர்ந்த ஆஷி டிரேடிங் கம்பெனி புக் செய்து, ஆப்கானிஸ்தான் நாட்டில் இருந்து ஆந்திர மாநிலத்தின் விஜயவாடா நகரைச் சேர்ந்த நிறுவனத்தின் பெயரில் ஹெராயின் அடங்கிய கண்டெய்னர்கள் ஏற்றுமதி செய்யப்பட்டு உள்ளது.

 கைது நடவடிக்கை

கைது நடவடிக்கை

இந்நிலையில் வருவாய் நுண்ணறிவு இயக்குநரகம் ஆஷி டிரேடிங் கம்பெனியின் உரிமையாளர்களான எம்.சுதாகரன் மற்றும் அவரது மனைவி ஜி.துர்கா பூர்னா வைஷாலி ஆகியோரை கைது செய்துள்ளனர்.

 விஜயவாடா முகவரி

விஜயவாடா முகவரி

இதேபோல் விஜயவாடா முகவரி ஒரு வீட்டின் முகவரி என்பதால் வீட்டின் உரிமையாளரை விசாரணை செய்யப்பட்டும் வீட்டை தொடர்ந்து கண்காணிக்கப்படு வருவதாகத் தெரிகிறது. முதல்கட்ட விசாரணையில் விஜயவாடா நிறுவனம் பதிவு செய்ய இந்த முகவரியைப் பயன்படுத்தியது தெரியவந்துள்ளது எனக் காவல் துறை தெரிவித்துள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Adani Group role is limited: Statement on seizure of illegal drugs at Mundra Port

Adani Group role is limited: Statement on seizure of illegal drugs at Mundra Port
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X