அடுத்தடுத்து பதவி விலகும் பெரும்தலைகள்.. ஆதி கோத்ரெஜ் செப்டம்பர் 30 அன்று பதவி விலகல்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மூத்த தொழிலதிபரும், கோத்ரெஜ் குழுமத்தின் தலைவருமான ஆதி கோத்ரெஜ், செப்டம்பர் 30 அன்று கோத்ரெஜ் கன்ஸ்யூமர் ப்ராடக்ட் லிமிடெட் (Godrej Consumer Products Ltd) போர்டில் இருந்து விலககுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

 

எனினும் அவர் எஃப்.எம்.சி.ஜி நிறுவனத்தின் தலைவராக இருப்பார் எனவும் தெரிகிறது.

விதியை மீறிய பிளிப்கார்ட்.. ரூ.10,000 கோடி அபராதம்.. அமலாக்க துறை நோட்டீஸ்..!

இது குறித்து வெளியான அறிக்கையில், 79 வயதான மூத்த தொழிலதிபர் 17 வருடங்களாக நிறுவனத்தை வழி நடத்திய பிறகு, 2017ல் தனது இளைய மக்கள் நிஷாபா கோத்ரெஜ் இந்த நிறுவனத்தினை வழி நடத்த தொடங்கினார். இவரே தற்போது இந்த நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் ஆவார்.

இது எனது பாக்கியம்

இது எனது பாக்கியம்

கோத்ரெஜ் கன்சியூமர் நிறுவனத்திற்கு சேவை செய்தது எனது பாக்கியம். நமது குழு உறுப்பினர்கள் பெருமைபடக்கூடிய ஒரு நிறுவனத்தினை உருவாக்குவதற்காக பாடுபட்டுள்ளனர். இதற்காக நான் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். எங்கள் வாடிக்கையாளர்கள் மற்றும் பிசினஸ் பார்ட்னர்ஸ், பங்குதாரர்கள், முதலீட்டாளர்கள், மக்களுக்கும் நான் நன்றி கடன் பட்டுள்ளேன்.

ஆதி கோத்ரெஜ் நம்பிக்கை

ஆதி கோத்ரெஜ் நம்பிக்கை

கோத்ரெஜ் நிறுவனத்தின் அடித்தளம் மிக வலுவானது. நிஷாபாவும், எங்கள் தலைமை குழுவும் சேர்ந்து தொடர்ந்து நிறுவனத்தினை வளர்ச்சி பாதையில் கொண்டு செல்வர். அதில் எனக்கு மிக நம்பிக்கையுள்ளது. எங்களின் பங்குதாரர்களுக்கு இது நீண்டகால வளர்ச்சியினை கொடுக்கும் என்று நான் நம்புகிறேன் என ஆதி கோத்ரெஜ் தெரிவித்துள்ளார்.

தந்தைக்கு நன்றி கூறிய நிஷாபா
 

தந்தைக்கு நன்றி கூறிய நிஷாபா

நிஷாபா கோத்ரெஜ் தனது தந்தையின் வழிகாட்டுதலுக்கு நன்றி தெரிவித்துள்ளார். மேலும் அவரின் இந்த வழிகாட்டுதல் கோத்ரெஜ் கன்சியூமர் நிறுவனத்தின் வளர்ச்சிக்கு பெரும் அளவில் உதவியதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் அவரின் அணுகுமுறைகள் எங்களின் டிஎன்ஏவில் எப்போதும் இருக்கும். இது எங்களது வளர்ச்சிக்கும், இலக்கினை அடையவும் உந்துதலாக இருக்கும் என, தனது தந்தையினை பற்றி நெகிழ்ச்சியடைந்துள்ளார்.

பல்வேறு பதவிகள்

பல்வேறு பதவிகள்

ஆதி கோத்ரெஜ் பல இந்திய வர்த்தக மற்றும் தொழிற்துறை அமைப்புகள் மற்றும் சங்கங்களின் தலைவராகவும் இருந்துள்ளார். அதோடு இந்தியன் ஸ்கூல் ஆஃப் பிசினஸ் வாரியத்தின் தலைவராகவும் இருந்துள்ளார். இதோடு இந்திய தொழிற்துறை கூட்டமைப்பின் தலைவராகவும் இருந்துள்ளார்.

மற்றொரு முக்கிய மாற்றம்

மற்றொரு முக்கிய மாற்றம்

கோத்ரெஜ் கன்சியூமர் நிறுவனத்தின் தலைமை நிதியதிகாரி வி சீனிவாசன் ராஜினாமாவைத் தொடர்ந்து, ஏற்கனவே குழுவில் பல மாற்றங்களை செய்துள்ளது. தற்போது இந்த நிறுவனத்தின் தலைவர் மற்றும் முதலீட்டாளர் குழுவின் தலைவர் சமீர் ஷா, தலைமை நிதி அதிகாரியாகவும் பொறுப்பேற்பார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

புதிய நியமனம் எப்போது?

புதிய நியமனம் எப்போது?

நடப்பு ஆண்டு மே மாதத்தின் ஜிசிபிஎல் நிறுவனத்தின் புதிய நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியாக ஹெச்.யு.எல்லின் நிர்வாக இயக்குனர் சுதீர் சீதாபதியை நியமிப்பதாக அறிவித்தது. அவரது நியமனம் அக்டோபர் 18, 2021 முதல் அமலுக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

நிஷாபா கோத்ரெஜ் தொடருவார்

நிஷாபா கோத்ரெஜ் தொடருவார்

தற்போது நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக தலைவராக இருக்கும் நிஷாபா கோத்ரெஜ், இந்த புதிய நியமனத்திற்கு பிறகு நிறுவனத்தின் நிர்வாக தலைவராகவும் பணியாற்றுவார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. GCPL 124 வருடத்திற்கும் அதிகமான கோத்ரெஜ் குழுமத்தின் ஒரு பகுதியாகும்.

தொடர்ந்து விரிவாக்கம்

தொடர்ந்து விரிவாக்கம்

தற்போது ஆசியா, ஆப்பிரிக்கா மற்றும் லத்தீன் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் வளர்ந்து வரும் சந்தைகளில், ஹோம் கேர், பர்சனல் கேர், ஹேர் கேர் உள்ளிட்ட மூன்று பிரிவுகளில் தனது கவனத்தினை செலுத்தி வருகின்றது. வளர்ந்து வரும் சந்தைகளில் தற்போது முக்கிய இடத்தினை கோத்ரெஜ் பிடித்துள்ளது.

ஜூன் காலாண்டில் என்ன நிலவரம்

ஜூன் காலாண்டில் என்ன நிலவரம்

இதற்கிடையில் நுகர்வோர் துறையை சேர்ந்த இந்த நிறுவனம் ஏப்ரல் - ஜூன் வரையிலான முதல் காலாண்டில், அதன் ஒருங்கிணைந்த நிகரலாபம் 4.75% அதிகரித்து, 413.66 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது முந்தைய ஆண்டில் இந்த நிறுவனம் 394.88 கோடி ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

தூள் கிளப்பிய விற்பனை

தூள் கிளப்பிய விற்பனை

இதே இந்த நிறுவனத்தின் விற்பனையானது 23.87% அதிகரித்து 2,862.83 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது முந்தைய ஆண்டில் 2,311.17 கோடி ரூபாயாக இருந்ததாக பங்கு சந்தைக்கு அளித்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது. குறிப்பாக விற்பனை வளர்ச்சியானது அதிகரித்துள்ள நிலையில் இந்த நிலையினை எட்டியுள்ளதாகவும், ஹோம் கேர், பர்சனல் கேர் முறையே 14% மற்றும் 29% வளர்ச்சி கண்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

வருவாய் நிலவரம் என்ன?

வருவாய் நிலவரம் என்ன?

கடந்த ஜூன் காலாண்டில் இந்த நிறுவனத்தின் வருவாய் விகிதமானது 20.28% அதிகரித்து 1660.65 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது முந்தைய ஆண்டில் 1380.65 கோடி ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக இந்தோனேசியன் சந்தையில் வளர்ச்சி விகிதமானது 1.43% அதிகரித்து 411.47 கோடி ரூபாயாக வளர்சி கண்டுள்ளதாகவும், இது கடந்த ஆண்டில் 405.64 கோடி ரூபாயாக இருந்ததாகவும் தெரிவித்துள்ளது.

ஆப்பிரிக்காவில் தூள் கிளப்பிய வருவாய்

ஆப்பிரிக்காவில் தூள் கிளப்பிய வருவாய்

இதே ஆப்பிரிக்கா சந்தையில் 58.74% அதிகரித்து 694.23 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இங்கு கடந்த ஆண்டில் வெறும் 127.29 கோடி ரூபாய்க்கு மட்டுமே வருவாய் கண்டிருந்தது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக ஆப்பிரிக்கா, அமெரிக்கா, மத்திய கிழக்கு பகுதிகளில் விற்பனை அதிகரித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

தொடர்ந்து கவனம்

தொடர்ந்து கவனம்

நிறுவனம் வளர்ச்சி பாதையில் உள்ள நிலையில், அதன் சப்ளை செயின் மற்றும் வணிகத்தினை மேம்படுத்துவதில் தொடர்ந்து கவனம் செலுத்தி வருவதாகவும் தெரிவித்துள்ளது. இதே போன்று அதிக தேவையுள்ள ஹோம் கேர் மற்றும் பர்சனல் கேர் பொருட்களில் கவனம் செலுத்தி வருவதாகவும் தெரிவித்துள்ளது. மொத்தத்தில் நிறுவனத்தின் வளர்ச்சியை மேம்படுத்துவோம். வளர்ச்சியினை ஊக்குவிப்போம் எனவும் நிஷாபா கோத்ரெஜ் தெரிவித்துள்ளார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Adi Godrej to step down from Godrej consumer products ltd board on September 30, 2021

Godrej group chairman Adi Godrej will step down from the board of godrej consumer products ltd next month
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X