2020ல் கொரோனா தொற்றுக் காரணமாக நாடு முழுவதும் லாக்டவுன் அறிவிக்கப்பட்டு உயிரை கையில் பிடித்துக்கொண்டு மக்கள் வீட்டிலேயே இருக்க வேண்டிய மோசமான நிலையில் உருவான போது, கூலி வேலை செய்வோர் முதல் கார்பரேட் வேலை செய்வோர் வரையில் அனைத்துத் தரப்பு மக்களும் தங்களது வேலைவாய்ப்பை இழந்தனார்.
இதனால் பொருளாதார ரீதியாகப் பாதிக்கப்பட்ட மக்கள் மன ரீதியாகவும் அதிகளவில் பாதிக்கப்பட்டனர். தற்போது மீண்டும் இதே நிலை உருவாகத் துவங்கியுள்ளதாகத் தெரிகிறது.
TATA: இனி இந்த 4 துறை தான் இலக்கு.. ரகசியத்தை உடைத்த சந்திரசேகரன்..!

கொரோனா டூ ஒமிக்ரான்
கொரோனா தொற்றின் முதல் மற்றும் 2வது அலையில் இருந்து அனைத்துத் தரப்பு மக்களும் மீண்டு வரும் வேளையில் ஒமிக்ரான் மக்களுக்குப் பெரும் தலைவலியாக மாறியுள்ளது. இந்தியாவில் கடந்த ஒரு மாதமாகவே மத்திய மாநில அரசுகள் ஒமிக்ரான் வைரஸ் பரவலைத் தடுக்கப் பல முயற்சிகளை எடுக்கத் துவங்கியுள்ளது.

8 நகரங்கள்
இதில் குறிப்பாக நாட்டின் முக்கியமான 8 நகரங்களில் அறிவிக்கப்பட்டு உள்ள இரவு நேர லாக்டவுன், வெளிநாட்டு விமானப் பயணிகளுக்குக் கட்டுப்பாடு, குழந்தைகளுக்கு வேக்சின், பெரியவர்களுக்குப் பூஸ்டர் வேக்சின், புத்தாண்டு மற்றும் கிறிஸ்துமஸ் பொது இடங்களில் கொண்டாட்டங்களுக்குத் தடை எனப் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வந்தது.

வேலைவாய்ப்பு அளவீடு
இதேவேளையில் டிசம்பர் 2021ல் இந்தியாவின் வேலைவாய்ப்பை இழந்த மற்றும் வேவைவாய்ப்பு இல்லாதோர் எண்ணிக்கை 4 மாத உச்சத்தைத் தொட்டு உள்ளது. ஆதாவது கொரோனா தொற்று 2வது அலையின் இறுதிக்கட்டத்தை மீண்டும் அடைந்துள்ளது.

CMIE அமைப்பு
CMIE அமைப்பின் தரவுகள் படி டிசம்பர் 2021ல் நாட்டின் வேலைவாய்ப்பின்மை அளவீடு ஒரு மாத இடைவெளியில் 7.0 சதவீதத்தில் 7.9 சதவீதமாக அதிகரித்துள்ளது. இதற்கு முன்பு ஆகஸ்ட் மாதம் நாட்டின் வேலைவாய்ப்பின்மை அளவீடு 8.3 சதவீதமாக உயர்ந்திருந்தது.

நகரங்களில் அதிகப் பாதிப்பு
ஒமிக்ரான் பரவி வரும் காரணத்தால் இந்தியாவில் நாளுக்கு நாள் வர்த்தகம் சேவை எண்ணிக்கை அளவீடு தொடர்ந்து குறைந்து வருகிறது. இதன் எதிரொலியாக நகரப்புறத்தில் வேலைவாய்ப்பு இல்லாதோர் அளவீடு 9.3 சதவீதமாகவும், கிராமபுறத்தில் வேலைவாய்ப்பின்மை அளவீடு 7.3 சதவீதமாகக் குறைந்துள்ளது.

வொர்க் ப்ரம் ஹோம்
இந்தியாவில் ஒமிக்ரான் வேகமாகப் பரவி வரும் காரணத்தால் ஏற்கனவே பல முன்னணி நிறுவனங்கள் ஊழியர்களுக்கு வீட்டில் இருந்து பணியாற்ற அனுமதி கொடுத்துள்ளது. இந்தியாவில் தற்போது 20க்கும் அதிகமான மாநிலங்களில் கொரோனா மற்றும் ஒமிக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

பெங்களூர்
பெங்களூரில் 200 சதவீதத்திற்கும் அதிகமான வேகத்தில் ஒமிக்ரான் பரவி வருவது மட்டும் அல்லாமல் பல முக்கியமான பகுதிகளைப் பாதிக்கப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

சென்னை
இதேபோல் சென்னையில் ஒமிக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களைத் தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டும், அவர்களுடன் நேரடியாக மற்றும் மறைமுகமாகத் தொடர்பில் இருந்தவர்களுக்கும் கோவிட் பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.

மீண்டும் சோகம்
இந்த நிலையில் தொற்று எண்ணிக்கை அதிகமாகும் பட்சத்தில் மாநில வாரியாக, பகுதி வாரியாக லாக்டவுன் விதிக்கப்பட்ட வாய்ப்புகள் உள்ளது. இதனால் மீண்டும் பல லட்சம் பேர் நாடு முழுவதும் வேலைவாய்ப்பை இழக்க நேரிடும்.