மீண்டும் ரூ.60- 70 தொட்ட தக்காளி, வெங்காயத்தின் விலை..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி : அரசின் நடவடிக்கைகள் இருந்த போதிலும் கூட தலைநகர் டெல்லியில், சில்லறை சந்தைகளில் வெங்காயம் மற்றும் தக்காளி விலை 60 -70 ரூபாயை தொட்டுள்ளது.

 

இந்திய பெண்களின் சமையறையில் முதலிடம் வகிக்கும் இப்பொருட்கள் விலையேற்றத்தினால் பெரும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர்.

மீண்டும் ரூ.60- 70 தொட்ட தக்காளி, வெங்காயத்தின் விலை..!

நுகர்வோர் விவகார அமைச்சகத்தால் பராமரிக்கப்படும் தரவுகளில், வெங்காயத்தின் சில்லறை விலை கிலோ 55 ரூபாயாகவும், இதே தக்காளி விலை கிலோ 53 ரூபாயாகவும் உள்ளது.

அரசுக்கு சொந்தமான மதர் டெய்ரியின் சஃபால் விற்பனை நிலையங்கள், கூட்டுறவு நிறுவனங்கான நாஃபெட் மற்றும் என்.சி.சி.எஃப் மூலம் தேசிய தலைநகரில் அரசாங்கம் பொருட்களை உயர்த்தியுள்ள நிலையிலும் கூட இந்த விலையேற்றம் நிகழ்ந்துள்ளது.

ஜெட் ஏர்வேஸ் பங்கு விலை 50% உயர்வு..!

சஃபால் அதன் 400 விற்பனை நிலையங்கள் மூலம் வெங்காயத்தை கிலோவுக்கு 23.90 ரூபாய்க்கும், இதே தக்காளி கிலோ 55 ரூபாய்க்கும் விற்பனை செய்து வருகிறது. இதில் வெங்காயம் விலை குறைவுக்கு காரணம் அரசாங்கம் தனது கையிருப்பில் இருந்து வழங்கப்படுவதாகவும் கூறப்படுகிறது.

மஹாராஷ்டிரா மற்றும் கர்நாடகா போன்ற முக்கியமாக, இப்பயிர்கள் வளர்ந்து வரும் மாநிலங்களில் பலத்த மழை மற்றும் வெள்ளம் ஏற்பட்டதையடுத்து, இந்த இரண்டு காய்கறிகளின் விலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.

ஏனெனில் இப்பகுதிகளில் பலத்த மழை மற்றும் வெள்ளம் ஏற்பட்டதையடுத்து இந்த உற்பத்தி வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. எனினும் புதிய கரீப் பருவ பயிர்கள், தற்போது சந்தைக்கு வர ஆரம்பித்துள்ளதால், வரும் நாட்களில் இதன் விலை குறையும் என்று எதிர்ப்பார்க்கப்படுவதாகவும் கூறப்படுகிறது.

மேலும் நாட்டின் வடக்கு பகுதிகளுக்கான சப்ளையும் பாதிக்கப்பட்டுள்ளது என்றும், அடுத்த 10 நாட்களில் இந்த நிலைமை மேம்படலாம் என்றும் கூறப்படுகிறது. இதனால் அடுத்த 10 நாட்களில் விலையில் சிறிது மாற்றம் இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

வெங்காயம் மற்றும் தக்காளியின் விலைகள் மிதமான நிலையில் தான் இருந்தது. ஆனால் இது வளர்ந்து வரும் முக்கிய மாநிலங்களில் திடீரென பெய்த கனமழையால் மீண்டும் வழங்கல் பாதிக்கப்பட்டுள்ளது. இது சில்லறை விற்பனையில் மேலும் ஒர் அழுத்தத்தைக் கொடுத்துள்ளது என்றும் கூறப்படுகிறது.

 

இதே தமிழ் நாட்டை பொறுத்த வரையில் வெங்காயத்தின் சில்லறை விலை 50 - 60 ரூபாய் வரையிலும், இதே தக்காளியில் விலை 40 - 60 வரையிலும் வர்த்தகமாகி வருகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Again Onion, tomato prices are high at Rs 60-70 per kg in Delhi

Again Onion, tomato prices are high at Rs 60-70 per kg in Delhi, tamilnadu also traded nearby same rates
Story first published: Thursday, October 31, 2019, 16:26 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X