டெல்லி: அரசு பொதுத்துறையை சேர்த்து மிகப்பெரிய போக்குவரத்து நிறுவனமான ஏர் இந்தியா, தனது ஊழியர்களுக்கு 5% சம்பளத்தை குறைக்கக் கூடும்.
அதிகரித்து வரும் கொரோனா தாக்கத்தினை அடுத்து, மத்திய அரசு பற்பல நாடுகளுக்கு செல்ல தடை விதித்துள்ளது.
இந்த நிலையில் மக்கள் அதிகமாக கூடும் இடங்களை தவிர்க்க கூறியுள்ள நிலையில், மக்கள் முற்றிலுமாக தங்களது பயணங்களை ரத்து செய்துள்ள நிலையில் விமான தளங்கள் வெறிச் சோடி காணப்படுகின்றன.

பல பிரச்சனைகள்
கிட்டதட்ட அதன் சர்வதேச சேவைகள் அனைத்தினையும் இழக்க நேரிட்டுள்ள நிலையில் இம்முடிவினை எடுத்திருக்கலாம் என அவ்வட்டாரங்கள் தெரிவித்தன. ஏற்கனவே பெரும் கடன் பிரச்சனையினால் தத்தளித்து வரும் ஏர் இந்தியா நிறுவனத்தினை தனியார்மயமாக்கும் முயற்சியினை அரசு எடுத்து வருகிறது. அரசின் முயற்சி முதன் முறையாக கைகொடுக்காமல் போகவே தற்போது, ஏர் இந்தியாவில் முழு பங்கினையும் விற்க தயாராக உள்ளதாகவும் கூறப்படுகிறது.

நெருக்கடியை போக்க நடவடிக்கை
அரசு மும்முரமாக பங்கு விற்பனைக்கான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தற்போது கொரோனா வைரஸ் அதற்கு இடைஞ்சலாக வந்துள்ளது. இந்த நிலையில் தற்போதுள்ள நெருக்கடி நிலையினை போக்க, விமான நிர்வாகம் சில அலவன்ஸ்களை குறைத்துள்ளதாகவும், இது தவிர பொழுதுபோக்கு தொடர்பான அலவன்ஸ் மற்றும் சில நடவடிக்கைகளை எடுத்துள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

நிதி நெருக்கடி
இந்த நிலையில் ஏர் இந்தியா தனது ஊழியர்களுக்கு 5% ஊதியக் குறைப்பை பரிசீலித்து வருவதாகவும் கூறப்படுகிறது. ஏனெனில் கொரோனா நெருக்கடி காரணமாக பெரும் நிதி நெருக்கடியையும் எதிர்கொண்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் கிட்டதட்ட அனைத்து சர்வதேச நடவடிக்கைகளையும் இழந்துள்ள நிலையில் இப்படி ஒரு நடவடிக்கை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

செலவினைக் குறைக்க திட்டம்
மேலும் செலவினங்களைக் குறைக்க இன்னும் பலவிதமான நடவடிக்கைகளை எடுத்துக் கொண்டுள்ளது. ஏப்ரல் 1 முதல் அமல்படுத்தப்படும் எரிபொருள் கொடுப்பனவும் ஆறு மாதங்களுக்கு 10% குறைக்கப்படுகிறது. மேலும் சமீபத்திய உலகளாவிய வளர்ச்சியை அடுத்து நிறுவனத்தின் நிதி நிலையை கருத்தில் கொண்டு இது போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன என்றும் இந்த விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.

செலவினை குறைக்க நடவடிக்கை
இந்த நிறுவனம் தற்போதுள்ள நிலையில் முடிந்தவரை செலவுகளை குறைக்க நடவடிக்கைகள் எடுத்து வருவதாகவும் கூறப்படுகிறது. விமான நிறுவனம் மேலும் இது குறித்து கூறுகையில், உலகெங்கிலும் உள்ள விமான நிறுவனங்கள் இந்த விஷயத்தில் நடவடிக்கை எடுத்து வருகின்றன. ஒரு சிலர் மிகவும் ஆக்ரோஷமான நடவடிக்கைகளை எடுத்துள்ளனர் என்றும் கூறியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.