6 மாத கெடு.. ஏர் இந்தியா-விற்கு அபாய மணி..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்திய அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் விமானப் போக்குவரத்து நிறுவனமான ஏர் இந்தியா-வை யாரும் வாங்க முன்வரவில்லையெனில் 2020ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் சேவை மற்றும் வர்த்தகத்தை முழுவதுமாக நிறுத்திவிட்டு மொத்தத்தையும் இழுத்துப் பூட்ட வேண்டியிருக்கும் என ஏர் இந்தியாவின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

 

12 விமானங்கள்

12 விமானங்கள்

ஏற்கனவே வர்த்தகத்தை அதிகளவில் குறைத்துவிட்ட ஏர் இந்தியா, தற்போது நிறுத்திவைக்கப்பட்ட 12 விமானங்களை இயக்க வேண்டும் என்றால் கூட நிதி இல்லை என்பது தான் நிதர்சனமான உண்மை.

மத்திய அரசு முயற்சி

மத்திய அரசு முயற்சி

வாழ்வா சாவா என்ற நிலையில் மத்திய அரசு மீண்டும் ஏர் இந்தியா நிறுவனத்தின் பங்கு விற்பனையின் கட்டுப்பாடுகளைத் தளர்வு செய்ய முடியுமா என ஆலோசனை செய்து வருகிறது.

இந்நிலையில் அடுத்த 6 மாதத்திற்குள் ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தை வாங்க யாரும் வரவில்லை எனில் ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்திற்கு ஏற்பட்ட நிலை தான் உருவாகும்.

இனி நிதி கிடையாது
 

இனி நிதி கிடையாது

கடந்த வருடம் வரையில் ஏர் இந்தியா நிறுவனத்தை லாபகரமான நிறுவனமாகக் கொண்டு வர வேண்டும் என மத்திய அரசு போராடிய நிலையில் நாட்டின் போதுமான பொருளாதார வளர்ச்சி மற்றும் வர்த்தகப் பயணம், சுற்றுலா பயணம் செல்வதற்கான சூழலும் மக்கள் மத்தியில் ஏற்படவில்லை. இதனால் ஒட்டுமொத்த விமானச் சேவையும் இந்த வருடம் பாதிக்கப்பட்டது.

இதில் ஏர் இந்தியா, ஜெட் ஏர்வேஸ் ஆகிய நிறுவனங்கள் அதிகளவில் பாதித்து உள்ளது.

30,000 கோடி ரூபாய்

30,000 கோடி ரூபாய்

2012ஆம் ஆண்டுக் காங்கிரஸ் ஆட்சியில் இருக்கும்போதே ஏர் இந்தியாவின் விமானச் சேவை மற்றும் வர்த்தகத்தை மீண்டு எடுப்பதற்காக 10 ஆண்டு திட்டத்தின் கீழ் 30000 கோடி ரூபாய் கொடுக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில் 2011-12ஆம் ஆண்டு முதல் இன்று வரையில் சுமார் 30,520.21 கோடி ரூபாய் அளவிலான நிதியை மத்திய அரசு இந்நிறுவனத்திற்கான வர்த்தகத்திற்கு நிதி ஒதுக்கியுள்ளது.

மத்திய அரசு மறுப்பு

மத்திய அரசு மறுப்பு

இந்த இக்கட்டான சூழ்நிலையில் ஏர் இந்தியா நிர்வாகம் விமானங்களை இயக்க தேவையான 2,400 கோடி ரூபாய் அளவிலான நிதியைக் கொடுக்க வேண்டுகோள் விடுத்தது. ஆனால் மத்திய அரசோ ஏர் இந்தியா மீதான நம்பிக்கையை இழந்து 2400 கோடி எல்லாம் கொடுக்க முடியாது வேண்டுமென்றால் 500 கோடி கொடுக்கிறோம் எனப் பதில் அளித்துள்ளது.

இதன் மூலம் இந்தியாவில் மேலும் ஒரு விமான நிறுவனம் மூடப்படும் எனத் தெரிகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Air India might shut down in 6 months,Without buyer

Without buyer, Air India might be forced to shut down in six months: Airline official. As per the government, it has infused funds to the tune of ₹30,520.21 crore in the flag carrier from financial year 2011-12 till December this year. The airline has a debt burden of around ₹60,000 crore and the government is still working on the modalities for the disinvestment.
Story first published: Tuesday, December 31, 2019, 8:45 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X