தடுப்பூசி போடலைன்னா வேலைக்கு வரமாட்டோம்.. ஏர் இந்தியா விமானிகள் சங்கம் அதிரடி..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்தியாவில் கொரோனாவின் தாக்கம் 2 கோடியை தாண்டியுள்ள நிலையில், நாளுக்கு நாள் லட்சக்கணக்கானவர்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

 

இது கடந்த ஆண்டை காட்டிலும் மிக மோசமான விளைவுகளை ஏற்படுத்தி வருகின்றது. இதன் தாக்கம் என்பது சொல்ல முடியாத அளவு இழப்பினை ஏற்படுத்தி வருகின்றது.

சாதித்து காட்டிய அதானி.. லாபம் 285% அதிகரிப்பு.. போர்ட் நிறுவனத்தில் பண மழை..!

அது மனித உயிர்கள், பொருளாதாரம், தொழிற்துறை பாதிப்பு இப்படி பல இழப்புகளை ஏற்படுத்தி வருகின்றது. குறிப்பாக விலைமதிப்பற்ற மனித உயிர்களையும் கருணையே இல்லாமல் குடித்துக் கொண்டுள்ளது.

விமான ஊழியர்களின் பங்கு முக்கியமானது

விமான ஊழியர்களின் பங்கு முக்கியமானது

இதற்கிடையில் மக்கள் ஆக்சிஜன் தட்டுப்பாடு, மருந்து தட்டுப்பாடு, போதிய மருந்துவ உள்கட்டமைப்பின்மை என பலவற்றினாலும் அவதிப்பட்டு வருகின்றனர். இதற்கிடையில் இந்தியாவுக்கு உதவுவதற்காக இன்று உலகளவில் பல்வேறு நாடுகளும் உதவிகளை செய்து வருகின்றன. ஆனால் இப்படியான நெருக்கடியான காலகட்டத்திலும் அதனை மற்ற நாடுகளில் இருந்து, இந்தியாவுக்கு எடுத்து வருவதில் விமான ஓட்டிகளும், விமான ஊழியர்களுக்கும் முக்கிய பங்குண்டு.

முன்னுரிமை வழங்க வேண்டும்

முன்னுரிமை வழங்க வேண்டும்

உண்மையில் அவர்களின் பங்கு என்பது இதில் முக்கியமானது. அந்த வகையில் ஏர் இந்தியா விமான ஊழியர்கள் சங்கம், விமான ஊழியர்களுக்கு தடுப்பூசி போடப்படுவதில் முன்னுரிமை வழங்க வேண்டும். அப்படி தடுப்பூசி போடப்படாவிட்டால் அவர்கள் பணிக்கு வரமாட்டார்கள் என விமானிகள் சங்கம் அறிவித்துள்ளது.

அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்
 

அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்

தற்போது கொரோனா தடுப்பூசி பற்றி பரவலாக வலியுறுத்தப்பட்டு வரும் நிலையில், 18 வயதுக்கு மேற்பட்ட ஊழியர்களுக்கு தடுப்பூசி போட்டுக் கொள்ள அரசு வலியுறுத்தி வருகின்றது. இந்த நிலையில் 18 வயதுக்கும் மேற்பட்ட விமான ஊழியர்களுக்கு தடுப்பூசி செலுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஊழியர்கள் பணிக்கு வரமாட்டர்கள்

ஊழியர்கள் பணிக்கு வரமாட்டர்கள்

அவ்வாறு நடவடிக்கை எடுக்க தவறினால் ஊழியர்கள் பணிக்கு வரமாட்டர்கள் என விமான போக்குவரத்து இயக்குனருக்கு, ஏர் இந்தியா விமானிகள் சங்கம் கடிதம் அனுப்பியுள்ளது. உலகம் முழுக்க கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையிலும், அதனால் அதிகம் பாதிக்கப்படுபவர்களில் விமான ஊழியர்களும் அடங்குவர். ஏனெனில் இன்று அவர்களும் உலகம் முழுக்க அவர்கள் பயணித்து வருகின்றனர். அப்படி இருக்கும்பட்சத்தில், கொரோனா பெருந்தொற்று என்பது எளிதில் தாக்கலாம். ஆக அவர்களின் கோரிக்கை என்பது ஏற்றுக் கொள்ளக் கூடியது தானே.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Air india pilots crew will have to stop if they are not vaccinated

Air india latest updates.. Air india pilots crew will have to stop if they are not vaccinated
Story first published: Tuesday, May 4, 2021, 22:04 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X