சம்பள பாக்கி என்னவாயிற்று.. டாடாவுக்கு கைமாறும் முன் கூறுங்கள்.. விற்றும் பிரச்சனை முடியவில்லையா..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறையை சேர்ந்த விமான நிறுவனமாக இருந்த ஏர் இந்தியா நிறுவனம், அதனை தொடங்கிய டாட்டா குழுமத்திற்கே மறுபடியும் செல்ல உள்ளது ஏற்கனவே அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட ஒரு விஷயம்.

 

இந்த ஒப்பந்தமானது 18,000 கோடி ரூபாய்க்கு டாடா குழுமம் கையகப்படுத்தியுள்ளது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பும் சமீபத்தில் வெளியானது.

இதற்கிடையில் டாடா நிறுவனத்திடம் ஏர் இந்தியா நிறுவன நிர்வாகம் ஒப்படைக்கப்பட உள்ள நிலையில், ஊழியர் சங்கங்கள் மத்திய அரசுக்கு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சமீபத்தில் கடிதம் எழுதியுள்ளது குறிப்பிடத்தகக்து.

4 நிறுவன பங்குகளை அதிரடியாக விற்ற ராகேஷ் ஜுன்ஜுன்வாலா.. என்னென்ன பங்குகள் அது..!

விமான துறை அமைச்சகத்திற்கு கடிதம்

விமான துறை அமைச்சகத்திற்கு கடிதம்

குறிப்பாக ஊழியர்களுக்கு குறைந்தபட்சம் ஒரு வருடம் பணி உத்தரவாதம் அளிக்க வேண்டும் என்று மத்திய அரசு ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் ஊதியம், விடுமுறைகள், ஊழியர்கள் தங்கும் இடங்கள் உள்ளிட்ட பல பிரச்சினைகளையும் சுட்டிக்காட்டி, ஊழியர் சங்கங்கள் விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சகத்திற்கு கடிதம் எழுதியுள்ளன.

சம்பள பிரச்சனை

சம்பள பிரச்சனை

டிசம்பர் இறுதிக்குள் தனியார்மயமாக இருக்கும் ஏர் இந்தியா நிறுவனத்தினை தனியார்மயமாக்கும் முன்னதாக, ஏர் இந்தியா விமானிகள் தங்களது சம்பள பாக்கி மற்றும் நிலுவை தொகையை குறித்தான தெளிவான ஒரு அறிக்கைக்காக காத்துக் கொண்டுள்ளனர் எனலாம். ஏனெனில் கொரோனா காரணமாக கடந்த 18 மாதங்களில் மேற்கொள்ளப்பட்ட சம்பள குறைப்பு, மீண்டும் எப்போது சேர்க்கப்படும் என்ற கேள்வி எழுந்துள்ளது.

கொரோனாவில் இருந்து மீள்ச்சி
 

கொரோனாவில் இருந்து மீள்ச்சி

இந்த நிலையில் இது குறித்து தெளிவான ஒரு அறிக்கைக்காக ஊழியர்கள் காத்துக் கொண்டுள்ளனர் எனலாம். தற்போது நாட்டில் கொரோனாவின் தாக்கம் குறைந்து இயல்பு நிலைக்கு திரும்பி வரும் நிலையில், விமான சேவைகள் இயல்புநிலைக்கு தொடங்கி வருகின்றன. இந்த நிலையில் ஊழியர்களுக்கான குறைக்கப்பட்ட சம்பள விகிதம், தற்போது வரையில் அது இன்னும் மீட்கப்படவில்லை.

விரைவில் அதிகரிக்கலாம்

விரைவில் அதிகரிக்கலாம்

இந்த நிலையில் ஏர் இந்தியா நிறுவனமும் தனியார் மயமாக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில்தான் ஊழியர்களின் இந்த எதிர்பார்ப்புகளும் மிக அதிகரித்துள்ளது. ஒரு புறம் ஏர் இந்தியா ஊழியர்களின் கவலைகள் விரைவில் களையப்படலாம், விரைவில் சம்பள விகிதம் அதிகரிக்கப்படலாம் என்ற கருத்து நிலவி வந்தாலும், இது குறித்த அதிகாரப்பூர்வ கருத்துக்கள் எதுவும் வெளியாகவில்லை.

முழு சம்பளமும் கிடைக்குமா?

முழு சம்பளமும் கிடைக்குமா?

இப்படியொரு நிலையில் தான் ஏர் இந்திய விமானிகள் இது குறித்த தெளிவான அறிவிப்பினை எதிர்பார்க்கின்றனர். விமானங்கள் கொரோனாவின் தாக்கம் குறைந்து வரும் நிலையில், கொரோனாவுக்கு முந்தைய நிலையைபோல முழு திறனுடன் செயல்பட அனுமதிக்கப்பட்டால், குறைக்கப்பட்ட சம்பள விகிதமும் மீட்கப்படுமா? என்ற எதிர்பார்ப்பும் நிலவி வருகின்றது.

பிரச்சனைகள் களையப்பட வேண்டும்?

பிரச்சனைகள் களையப்பட வேண்டும்?

மேலும் விரைவில் சம்பள விகிதத்தினை மாற்றி அமைக்குமாறு விமான நிர்வாகத்திடமும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. விமானிகளுக்கு கொடுக்கப்படும் பிளையிங் அலவன்ஸ் அளவையும் 40% குறைக்கப்பட்டுள்ள நிலையில், இந்த விகிதமானது நடைமுறையில் 70 - 80% உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஏர் இந்தியா விமான நிறுவனம் டாடா குழுமத்திடம் ஒப்படைக்கபடுவதற்கு முன்பு, விமானிகளுக்கும், ஊழியர்களுக்கும் உள்ள பிரச்சனைகள், நிலுவைகள் தீர்க்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் வலுவாக எழுந்துள்ளது. இவற்றோடு ஊழியர்களுக்கான விடுமுறை குறித்த தெளிவுபடுத்தல்களையும் தொழிற்சங்கங்கள் விளக்க கூறியுள்ளன.

சம்பள பாக்கி

சம்பள பாக்கி

விமான நிறுவனம் தனியார்மயமாக்கப்படும் என்ற ஒப்புதலுக்கு மத்தியில் முதலீடு மற்றும் பொது சொத்து மேலாண்மை அமைப்பான தீபம், ஏர் இந்திய ஊழியர்களுக்காக 1,332 கோடி ரூபாய் சம்பள பாக்கியும் அரசாங்கத்தால் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. எனினும் மற்ற தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.

எத்தனை விமானிகள்

எத்தனை விமானிகள்

ஆக இதுபோன்ற பலவற்றையும் கவனத்தில் கொள்ள வேண்டிய நிலையில் மத்திய அரசு உள்ளது. நவம்பர் 1 2019 நிலவரப்படி, ஏர் இந்தியா நிறுவனம் 1,874 விமானிகளை கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இதில் குறைந்தபட்சம் 1,308 ஊழியர்கள் நிரந்தர ஊழியர்களாகவும், 566 பேர் ஒப்பந்த ஊழியர்கள் ஆகவும் உள்ளது குறிப்பிடத்தக்கது

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Air india pilots need clarity on salary ahead of privatization

Air India latest updates.. Air india pilots need clarity on salary ahead of privatization
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X