ஏர் இந்தியா விற்பனை.. அமித்ஷா தலைமையிலான குழு ஒப்புதல்.. இனி என்ன நடக்க போகிறதோ..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி: பொதுத்துறையை சேர்ந்த விமான நிறுவனமான ஏர் இந்தியா பெருத்த கடன் பிரச்சனையில் தவித்து வரும் நிலையில், அந்த நிறுவனத்தை எப்படியேனும் விற்றால் போதும் என மத்திய அரசு ஒரு புறம் தீவிரமாக முயற்சித்து வருகிறது.

 

இந்த நிலையில் சுமார் 60 ஆயிரம் கோடி ரூபாய் கடன் சுமையில் சிக்கி தவித்து வருகிறது ஏர் இந்தியா.

முன்னதாக குறிப்பிட்டபங்குகளை அரசு வைத்துக் கொண்டு, மீதமுள்ள பங்குகளை தனியாருக்கு விற்க அரசு முடிவு செய்த நிலையில், பெருத்த கடன் பிரச்சனையில் உள்ள ஏர் இந்தியாவை வாங்க யாரும் முன்வரவில்லை.

கேபிஎன் இன்டர்சிட்டி, எஸ்ஆர்எஸ் சூப்பர் பாஸ்ட்.. இப்படியும் இனி ரயில் ஓடுமோ.. வந்தாச்சு பிரைவேட்

பங்குகளை விற்க முடிவு

பங்குகளை விற்க முடிவு

இப்படியொரு நிலையில் தான், மத்திய அரசு ஏர் இந்தியாவின் 100 சதவிகித பங்குகளையும் விற்க முடிவெடுத்துள்ளது. இதனால் ஏர் இந்தியாவை முற்றிலும் தனியார்மயமாக்க மத்திய அரசு திட்டமிட்டடது. இப்பணிகளை மேற்கொள்ள மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா தலைமையிலான மந்திரிகள் குழு ஒப்புதலும் அளித்துள்ளது.

ஏர் இந்தியா விற்பனைக்கு ஒப்புதல்

ஏர் இந்தியா விற்பனைக்கு ஒப்புதல்

அமித்ஷா தலைமையிலான இந்த குழுவின் கூட்டம், 2-வது தடவையாக, கடந்த செவ்வாய்கிழமையன்று டெல்லியில் நடைபெற்றது. அதில், ஏர் இந்தியா விற்பனைக்காக தயாரிக்கப்பட்ட பங்கு விற்பனை ஒப்பந்தத்துக்கும், விருப்பம் தெரிவிக்கும் படிவத்துக்கும் ஒப்புதல் அளிக்கப்பட்டது. இவை இரண்டும் இம்மாதமே வெளியிடப்படும் என்று உயரதிகாரிகள் மத்தியில் கூறப்படுகிறது.

மறுமலர்ச்சி திட்டம்
 

மறுமலர்ச்சி திட்டம்

மேலும் ஏர் இந்தியாவின் சுமார் 60,000 கோடி ரூபாய் கடன் சிறப்பு தேவைக்கான வாகனம் கணக்கில் (எஸ்பிவிக்கு) மாற்றப்படும் என்றும், இந்த மொத்த தொகையில் ஏற்கனவே 29,400 கோடி ரூபாய் எஸ்பிவிக்கு மாற்றப்பட்டுள்ளது. இந்த நிறுவனத்தினை மீட்டெடுக்க பல காலமாக முயற்சி எடுத்து வரும் நிலையில் அதனை விற்க திட்டமிட்டுள்ளது.

யாரெல்லாம் கலந்து கொண்டனர்?

யாரெல்லாம் கலந்து கொண்டனர்?

இந்த கூட்டத்தில் மத்திய நிதியமச்சர் நிர்மலா சீதாராமன், மத்திய வர்த்தக அமைச்சர் பியூஷ் கோயல், மத்திய விமான துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி, விமான போக்குவரத்து செயலாளர் பிரதீப் சிங் கரோலா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டார்.

ஏர் இந்தியா இழப்பு

ஏர் இந்தியா இழப்பு

கடந்த 2018 - 2019ம் ஆண்டில் ஏர் இந்தியா நிறுவனம் 8,556.35 கோடி ரூபாய் இழப்பை கண்டுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. அதிலும் குறிபாக இயக்க நஷ்டம் மட்டும் 4,600 கோடி ரூபாய் கண்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் இதன் வருவாய் 26,400 கோடி ரூபாயை தொட்டுள்ளதும் கவனிக்கதக்கது. அதிலும் பாகிஸ்தான் வான்வெளி மூடப்பட்டதில் இருந்து ஏர் இந்தியாவுக்கு 3 - 4 கோடி ரூபாய் நஷ்டம் தினசரி அதிகரித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Air india sale: Govt’s GOM led by Amit shah approved the draft inviting bids for the sale of air india

Government’s GOM led by Amit shah approved the draft inviting bids for the sale of air india. Also GoM approved the share purchase agreement, under which the airline's total debt of around Rs 60,000 crore would be transferred to a SPV.
Story first published: Wednesday, January 8, 2020, 15:04 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X