இந்திய அரசின் கட்டுப்பாட்டிலிருந்த ஏர் இந்தியாவை மோடி அரசு தனியாருக்கு விற்பனை செய்த நிலையில், டாடா குழுமம் ஏர் இந்தியாவைக் கைப்பற்றித் தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்து 100 சதவீத வர்த்தகத்தைத் துவங்கியுள்ளது. மேலும் புதிய விமானங்களை வாங்கவும், சேவையை விரிவாக்கம் செய்யவும் திட்டமிட்டு அதற்கான பணிகளைச் செய்து வருகிறது.
ஏர் இந்தியா ஊழியர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. குறைக்கப்பட்ட சம்பளத்தில் சற்று அதிகரிப்பு..!

டாடா குழுமம்
டாடா குழுமம் ஏர் இந்தியாவின் சிஇஓ-வாகத் துருக்கியை சேர்ந்த இல்கர் ஐய்சி-யை நியமிக்கத் திட்டமிட்ட நிலையில், பல்வேறு காரணத்திற்காக இப்பதவி வேண்டாம் என இல்கர் அறிவித்துள்ளார்.

டாடா சன்ஸ் சந்திரசேகரன்
இதற்கிடையில் ஏர் இந்தியாவின் சேர்மன் ஆக டாடா சன்ஸ் சந்திரசேகரன் நியமிக்கப்பட்ட நிலையில், தற்போது மிகப்பெரிய நிர்வாக மாற்றம் நடைபெற்றுள்ளது. குறிப்பாகப் பழைய ஏர் இந்தியா நிறுவனத்தின் உயர் அதிகாரிகள் பணி மாற்றம் ஏற்பட்டு உள்ளனர்.

நிபுன் அகர்வால்
ஏர் இந்தியாவின் நிர்வாகக் குழுவின் தலைவராக முன் நியமிக்கப்பட்டு இருந்த நிபுன் அகர்வால் தற்போது தலைமை வர்த்தக அதிகாரியாக நியமிக்கப்பட்டு உள்ளார். இவரைத் தொடர்ந்து தலைமை மனிதவள பிரிவு அதிகாரியாகச் சுரேஷ் தட் திருப்பதி நியமிக்கப்பட்டு உள்ளார்.

மீனாட்சி மாலிக் மற்றும் அமித்ரா சரன்
இப்பதவிகளில் ஏற்கனவே இருந்த ஏர் இந்தியாவின் முன்னாள் அதிகாரிகளான மீனாட்சி மாலிக் மற்றும் அமித்ரா சரன் ஆகியோர் ஏர் இந்தியா சிஇஓ-வின் ஆலோசகராக நியமிக்கப்பட்டு உள்ளது டாடா குழும நிர்வாகம்.

சந்திரசேகரன்-க்கு ஆலோசகர்
இதைத் தொடர்ந்து இல்கர் ஆய்சி நியமணம் தோல்வியில் முடிந்த நிலையில் புதிய சிஇஓ-வை தேடும் பணியில் சந்திரசேகரன் தலைமையிலான அணி தீவிரமாக இருக்கிறது. புதிய சிஇஓ-வை நியமிக்கும் வரையில் மீனாட்சி மாலிக் மற்றும் அமித்ரா சரன் ஆகியோர் ஏர் இந்தியா சேர்மன் ஆன சந்திரசேகரன்-க்கு ஆலோசகராக இருப்பார்.

சத்ய ராமசாமி
டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் நிறுவனத்தில் முன்பு பணியாற்றிய சத்ய ராமசாமி, ஏர் இந்தியா நிறுவனத்தின் தலைமை டிஜிட்டல் மற்றும் தொழில்நுட்ப அதிகாரியாக நியமிக்கப்பட்டு உள்ளார் என வெள்ளிக்கிழமை வெளியான உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முக்கியப் பதவி
ராஜேஷ் டோக்ரா ஏர் இந்தியா நிறுவனத்தின் வாடிக்கையாளர் அனுபவம் மற்றும் தரைவழி கையாளுதலின் தலைவராக நியமிக்கப்பட்டு உள்ளார். ஏர் இந்தியாவின் மூத்த அதிகாரியான ஆர்.எஸ்.சந்து, ஏர் இந்தியாவின் செயல்பாட்டுத் தலைவர் பொறுப்பில் தொடர்ந்து வகிப்பார் என்று அறிவித்துள்ளது.

8 வருட முயற்சி
ஏர் இந்தியாவின் மூத்த வீரர் வினோத் ஹெஜ்மாடி தலைமை நிதி அதிகாரியாகத் தொடர்ந்து பொறுப்பேற்பார் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஏர் இந்தியா சுமார் 8 வருட முயற்சிக்கு பின்பு மத்திய அரசு விற்பனை செய்துள்ளது.