டெல்லி: வழக்கமாக பார்தி ஏர்டெல், வோடபோன் ஐடியா உள்ளிட்ட நிறுவனங்கள் கட்டண அதிகரிப்பை செய்த பின்பே, அதற்கும் குறைவாக கட்டண செலவில் ஏதேனும் டாரிஃப்களை ஜியோ வெளியிடும்.
ஆனால் இந்த முறையும் ஏர்டெல், வோடபோன் ஐடியா உள்ளிட்ட நிறுவனங்கள் கட்டண அதிகரிப்பை செய்த சில தினங்களுக்கு பின்பே, வழக்கம்போல் ஜியோ கட்டண அதிகரிப்பை செய்தது.
ஏர்டெல் வழக்கம் போல் இல்லாமல் ஜியோ, வோடபோன் ஐடியாவை மிஞ்சும் அளவுக்கு ஒரு திட்டத்தினை வெளியிட்டுள்ளது.

அப்படி என்ன ஸ்பெஷல் திட்டம்?
ஏர்டெல் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு சிறந்த சலுகையை வழங்கும் நோக்கத்திலும், ஜியோவை விஞ்சவும் தந்திரமாகவும் செயல்பட்டுள்ளது என்றே கூறலாம். ட்ரூலி அன்லிமிடெட் என்ற மூன்று அன்லிமிடெட் திட்டங்களை அறிவித்துள்ளது. இதுவரை இலவசம் என்ற ஆயுதத்தை பயன்படுத்திய ஜியோ, திடிரென கடந்த சில வாரங்களுக்கு முன்பு கட்டணம் செலுத்த வேண்டும் அறிவித்தது. இதனால் வாடிக்கையாளர்கள் பெரும் கடுப்பாகினர். இதுவரையில் இலவச சேவையை மட்டுமே அனுபவித்த வாடிக்கையாளர்கள் தற்போது கட்டணத்தை அளித்து வருகின்றனர். ஆனால் தற்போது கட்டணம் செலுத்தி வரும் ஏர்டெல் வடிக்கையாளர்களுக்கே இலவச சேவையை வழங்க உள்ளது ஏர்டெல்.

ட்ரூலி அன்லிமிடெட் சேவை
இந்த ட்ரூலி அன்லிமிடெட் சேவை திட்டமானது, 219 ரூபாய் ப்ரீபெய்டு சலுகையில் அனைத்து நெட்வொர்க்களுக்கும் தினசரி 1 ஜிபி டேட்டாவும், இதே 399 ரூபாய் மற்றும் 449 ரூபாய்க்கு முறையே 1.5 ஜிபி டேட்டாவும், 2ஜிபி டேட்டாவும் முறையே 56 நாட்களுக்கும் வழங்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. இது தவிர அனைத்து நெட்வொர்க்குகளுக்கும் இலவச கால்கள் வழங்கப்ப்படும் என்றும் தெரிவித்துள்ளது. இது தவிர அனைத்து மொபைல்களுக்கும் இலவச சேவை என அறிவித்துள்ளது.

புதியகட்டுபாடுகள் எதுவும் இல்லை
இந்த புதிய சேவைகள் தவிர ஏர்டெல் வழங்கி வரும் சேவையில் எந்தவித புதிய கட்டுப்பாடுகளும் இல்லை. மேலும் இந்த வாய்ஸ்கால்கள் குறித்தான அன்லிமிடெட் திட்டம் இன்று முதல் அமலுக்கு வரும் என்றும் கருதப்படுகிறது.

ஜியோவில் எப்படி?
இந்த திட்டங்களானது ஜியோவுடன் ஒப்பிடும்போது ஏர்டெல் கட்டணங்கள் குறைவு தான் என்று கூறப்படுகிறது. ஏனெனில் இதே கட்டணங்களில் ஜியோவில் 28 நாட்கள் திட்டத்தில் முதல் 1000 நிமிடங்கள் மட்டுமே இலவசம் என்றும் கூறப்படுகிறது. இதே இரு மாத திட்டங்கள் 2000 நிமிடங்களும், இதே வருட திட்டத்தில் 12,000 நிமிடங்கள் மட்டுமே இலவசம் என்றும், இதற்கு பின்பு ஐயூசி கட்டணமாக ஒரு நிமிடத்துக்கு 6 பைசா செலுத்த வேண்டும் என்றும் கருதப்படுகிறது.

ஏர்டெல் நஷ்டம்
பார்தி ஏர்டெல் நிறுவனம் கடந்த செப்டமபர் காலாண்டில் 23,045 கோடி ரூபாய் நஷ்டத்தினையும், இதே உச்ச நீதிமன்றத்திற்கு செலுத்த வேண்டிய தொகையாக 28,450 கோடி ரூபாய் செலுத்த வேண்டியும் உள்ள நிலையிலேயே இப்படி ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது ஏர்டெல். இதுவே ஜியோ வாடிக்கையாளர்களையும் கவரும் வண்ணம் உள்ளதோடு, நிறுவனத்தின் வருவாயும் அதிகரிக்க உதவும் என்றும், பெரிதும் உதவும்.