ஜியோவையே தூக்கி சாப்பிட்ட ஏர்டெல்! திரும்ப வந்துட்டேன்னு சொல்லு!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ரிலையன்ஸ் ஜியோ இந்திய டெலிகாம் துறையில் கால் எடுத்து வைத்ததில் இருந்து, இந்திய டெலிகாம் சந்தையில் இருந்த போட்டி பல மடங்கு அதிகரித்துவிட்டது.

 

ஐந்து வருடங்களுக்கு முன் ஒரு ஜிபி டேட்டாவுக்கு 100 - 150 ரூபாய் செலுத்திக் கொண்டு இருந்த நாம், ஜியோ வருகைக்குப் பின், கிட்டத்தட்ட அதே விலைக்கு, நாள் ஒன்றுக்கு 1 ஜிடிபி டேட்டா பயன்படுத்தத் தொடங்கி இருக்கிறோம்.

இதனால் ஏர்டெல், வொடாபோன் ஐடியா எல்லாம் பலத்த அடி வாங்கியது. இப்போது ஏர்டெல் சுதாரித்துக் கொள்ளத் தொடங்கி இருக்கிறது. கடந்த ஜூன் 2020-ல் மொபைல் சப்ஸ்கிரைபர்கள் தொடர்பான விஷயத்தில் சில சுவாரஸ்ய தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

ஆக்டிவ் மொபைல் யூசர்கள்

ஆக்டிவ் மொபைல் யூசர்கள்

கடந்த ஜூன் 2020 மாதத்தில், ஏர்டெல் கம்பெனியில் 3.7 மில்லியன் ஆக்டிவ் மொபைல் யூசர்கள் இணைந்து இருக்கிறார்களாம். ஆனால் ரிலையன்ஸ் ஜியோவில் இருந்து 2.1 மில்லியன் ஆக்டிவ் மொபைல் யூசர்களை இழந்து இருக்கிறார்களாம். வொடாபோன் ஐடியாவில் இருந்தும் 3.7 மில்லியன் ஆக்டிவ் மொபைல் யூசர்கள் இழந்து இருப்பதாக எகனாமிக் டைம்ஸ் வலை தளத்தில் செய்திகள் வெளியாகி இருக்கின்றன.

தூக்கிச் சாப்பிட்ட ஏர்டெல்

தூக்கிச் சாப்பிட்ட ஏர்டெல்

இப்படி ஆக்டிவ் மொபைல் யூசர்கள் ஏர்டெல் கம்பெனிக்கு அதிகரித்து இருப்பதால், ஏர்டெல்லில் மொத்த ஆக்டிவ் மொபைல் யூசர்களின் எண்ணிக்கை 307 மில்லியனில் இருந்து 311 ம்மில்லியனாக அதிகரித்து இருக்கிறது. ரிலையன்ஸ் ஜியோவின் ஆக்டிவ் மொபைல் யூசர்கள் எண்ணிக்கை 313 மில்லியனில் இருந்து 310 மில்லியனாக குறைந்து இருக்கிறது. வொடாபோன் ஐடியாவின் ஆக்டிவ் மொபைல் யூசர்கள் எண்ணிக்கை 277 மில்லியனில் இருந்து 273 மில்லியனாக சரிந்து இருக்கிறது.

இப்ப நம்பர் 1 ஏர்டெல் தான்
 

இப்ப நம்பர் 1 ஏர்டெல் தான்

ஆக, இந்திய டெலிகாம் துறையில், அதிக எண்ணிக்கையில் ஆக்டிவ் மொபைல் யூசர்களை வைத்திருக்கும் டெலிகாம் சேவை கம்பெனியாக, பார்தி ஏர்டெல், மீண்டும் முதல் இடத்தைப் பிடித்து இருக்கிறது. இந்த செய்தியை, மோதிலால் ஓஸ்வால் என்கிற தரகு நிறுவனம் சொன்னதாக, எகனாமிக் டைம்ஸ் வலைதளத்தில் வெளியாகி இருக்கிறது.

Visitor Location Register Subscriber

Visitor Location Register Subscriber

ஒரு கம்பெனியின் மொத்த மொபைல் எண்களில், எத்தனை மொபைல் எண்கள் ஆக்டிவாக இருக்கிறது என்பதை, இந்த VLR (Visitor Location Register) மூலம் தெரிந்து கொள்ளலாம். வெறுமனே ஒரு டெலிகாம் சேவை வழங்கும் கம்பெனியில், அதிக வாடிக்கையாளர்கள் இருப்பது மட்டும் முக்கியமல்ல, மொபைல் எண்கள் ஆக்டிவ்வாகவும் இருக்க வேண்டும்.

இந்தியாவின் மொத்த கணக்கு

இந்தியாவின் மொத்த கணக்கு

இந்தியாவில் மொத்தம் 114.07 கோடி (1140.71 மில்லியன்) பேர் வொயர் லெஸ் சப்ஸ்கிரைபர்களாக இருக்கிறார்கள். அதில் 95.8 கோடி (958 மில்லியன்) பேர் தான் ஆக்டிவ் மொபைல் யூசர்களாக இருக்கிறார்கள். அதாவது மொத்த சப்ஸ்கிரைபர்களில் 83.98 சதவிகிதம் பேர் தான் ஆக்டிவ்வாக இருக்கிறார்கள்.

98.14 % வைத்திருக்கும் ஏர்டெல்

98.14 % வைத்திருக்கும் ஏர்டெல்

அப்படிப் பார்க்கும் போது, ஏர்டெல் கம்பெனியின் மொத்த வாடிக்கையாளர்களில் 98.14 % பேர் ஆக்டிவ் யூசர்களாக இருக்கிறார்கள். வொடாபோன் ஐடியாவின் மொத்த வாடிக்கையாளர்களில் 89.49 % மற்றும் ரிலையன்ஸ் ஜியோவின் மொத்த வாடிக்கையாளர்களில் 78.15 % வாடிக்கையாளர்கள் ஆக்டிவ் மொபைல் யூசர்களாக இருப்பதாகச் சொல்கிறது டிராய் தரவுகள்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Airtel beat reliance jio in Active mobile users

The sunil mittal managing Bharti Airtel company beat the mighty Reliance jio in Active Mobile users count.
Story first published: Friday, September 25, 2020, 15:05 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X