ஏர்டெல்லின் அட்டகாசமான சலுகை.. போட்டியாளர்களுக்கு சரியான சவால் தான்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தொலைத் தொடர்பு துறையில் நிலவி வந்த நெருக்கடியான நிலை மாறி, கொரோனா காலத்தில் துளிர் விடத்தொடங்கியது. தொடர்ச்சியான பல பிரச்சனைகளுக்கும் மத்தியில், கொரோனா காலத்தில் தான் சற்றே லாபத்திற்கு திரும்பியுள்ளன.

 

பல வருடங்களாகவே நஷ்டத்தினைக் மட்டுமே கண்டு வந்த நிறுவனங்களுக்கு, இது மிகப்பெரிய நிவாரணமாக அமைந்துள்ளது எனலாம்.

எனினும் இந்த நிலையை தக்கவைத்துக் கொள்ளவும் புதிய வாடிக்கையாளர்களை கவரவும் நிறுவனங்கள், பல அதிரடியான ஆஃபர்களை கொடுத்து வருகின்றன.

ஏர்டெல்லின் ஆல் இன் ஒன்

ஏர்டெல்லின் ஆல் இன் ஒன்

அந்த வகையில் மிகப்பெரிய தொலைத் தொடர்பு நிறுவனமான பார்தி ஏர்டெல் நிறுவனம், ஆல் இன் ஒன் பண்டில் என்ற திட்டத்தினை அறிமுகப்படுத்தியுள்ளது. ஏர்டெல் பிளாக் என்று இந்த திட்டத்தில் மொபைல், டிடிஹெச், பிராண்ட்பேண்ட் என அனைத்தையும் ஒரே திட்டத்தில் பெற முடியும்.

இனி தனித்தனியாக தேவையில்லை

இனி தனித்தனியாக தேவையில்லை

இதற்கு முன்பாக நாம் மொபைலுக்கு தனியாகவும், டிடிஹெச்சுக்கு தனியாகவும் பிராண்ட்பேண்டுக்கு தனியாகவும் ரீசார்ஜ் செய்ய வேண்டிய நிலை இருந்தது. ஆனால் இனி ஏர்டெல் பிளாக் திட்டத்தின் மூலம் ஒரே திட்டத்தில் இந்த சேவைகள் அனைத்தையும் பெற முடியும். இதன் மூலம் உங்களுக்கு செலவும் குறையும். ஒன்றொன்றுக்கும் தனித்தனியாக ரீசார்ஜ் செய்ய வேண்டிய அவசியமும் இருக்காது.

ரூ.2.099 திட்ட சலுகை
 

ரூ.2.099 திட்ட சலுகை

ஏர்டெல்லின் இந்த பிளாக் திட்டம் மாதத்திற்கு 998 ரூபாயில் இருந்து 2,099 ரூபாய் வரையில் உள்ளது. இந்த திட்டத்தில் 2,099 ரூபாய் திட்டத்தில் எல்லா திட்டங்களையும் பெற்றுக் கொள்ளலாம். இதில் மூன்று 3 மொபைல் இணைப்புகளை பெற்றுக் கொள்ளலாம். 1 பைபர் கனெக்ஷனையும் பெற்றுக் கொள்ளலாம். இதுதவிர 1 டிடிஹெச் கனெக்ஷனையும் பெற்றுக் கொள்ளலாம்.

ரூ.1,349 திட்டத்தில் என்ன சலுகை

ரூ.1,349 திட்டத்தில் என்ன சலுகை

ஏர்டெல்லின் இந்த ரூ.1,349 திட்டத்திலும் 3 மொபைல் இணைப்புகளையும், 1 டிடிஹெச் இணைப்பையும் பெற்றும் கொள்ளலாம். இதே 998 ரூபாய் மதிப்பிலான திட்டத்தில் 2 மொபைலுக்கும், 1 டிடிஹெச் இணைப்பும் பெற்றுக் கொள்ளலாம்.

மற்ற விவரங்களுக்கு

மற்ற விவரங்களுக்கு

ஏர்டெல் தேங்கஸ் ஆப்பினை பதிவிறக்கி, ஏர்டெல் பிளாக் திட்டத்தைப் பெறுங்கள். அப்படியில்லை எனில் உங்களிடம இருக்கும் சேவைகளை தொகுப்பதன் மூலம், உங்கள் சொந்த திட்டத்தையும் நீங்கள் உருவாக்கலாம்.

உங்களுக்கு அருகிலுள்ள ஏர்டெல் ஸ்டோருக்கு சென்றும் விவரங்களை பெறலாம்.

அப்படியும் இல்லை எனில், 8826655555 என்கிற எண்ணிற்கு மிஸ்டு கால் கொடுத்தும் விவரங்களை பெற்றுக் கொள்ளலாம்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Airtel launches all in one plan form mobile, broadband, DTH services; check details here

Airtel latest updates.. Airtel launches all in one plan form mobile, broadband, DTH services; check details here
Story first published: Friday, July 2, 2021, 18:29 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X