ரூ.279ல் தினசரி 1.5GB டேட்டா +வாய்ஸ்கால்.. ரூ.4 லட்சத்துக்கு இன்சூரன்ஸ்.. ஏர்டெல் அசத்தல் திட்டம்!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்திய தொலைத் தொடர்பு துறையில் நிலவி வரும் நெருக்கடியான நிலைக்கு மத்தியில், சந்தையில் தங்களது இடத்தினை தக்க வைத்துக் கொள்ள போராடி வருகின்றனர்.

 

கடந்த சில ஆண்டுகளாக தடுமாற்றத்தில் இருந்து வந்த தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்கு, ட்விஸ்ட் வைக்கும் விதமாக கொரோனா பரவ ஆரம்பித்தது. இதனால் நிறுவனங்கள் அவர்களது ஊழியர்களை வீட்டில் இருந்தே பணியாற்ற கூறின.

இதனால் டேட்டா பயன்பாடு மற்றும் வாய்ஸ் கால்ஸ் சேவையானது மிகப்பெரிய அளவில் உயர்ந்தது. இது துவண்டு போய் கிடந்த தொலைத்தொடர்பு துறைக்கு ஆறுதலாய் அமைந்தது எனலாம். இதற்கிடையில் சில தினங்களுக்கு முன்பு வெளியான டிராய் தரவின் படி, கடந்த பிப்ரவரி மாதத்த்தில் பிஎஸ்என்எல் தவிர, மற்ற தொலைத் தொடர்பு நிறுவனங்கள் வளர்ச்சி பாதையில் உள்ளதை காண முடிந்தது.

 ஏர்டெல்லின் அசத்தலான திட்டம்

ஏர்டெல்லின் அசத்தலான திட்டம்

இதற்கிடையில் இந்த வளர்ச்சியினை அப்படியே தக்க வைத்துக் கொள்ள ஒவ்வொரு நிறுவனங்களும், தாங்கள் தான் சிறந்தவர்கள் என நிரூபிக்க பல சலுகைகளை அறிவித்து வருகின்றன. அந்த வகையில் ஏர்டெல்லின் ஒரு திட்டம் நம்ம வியக்க வைக்கிறது. ஏனெனில் வெறும் 279 ரூபாயில் அன்லிமிடெட் டேட்டாவுடன், 4 லட்சம் ரூபாய்க்கான இன்சூரன்ஸ் சலுகையுல் வழங்குகிறது.

 வேறு என்னென்ன சலுகைகள்

வேறு என்னென்ன சலுகைகள்

ஏர்டெல்லின் இந்த 279 ரூபாய் திட்டத்தில் தினசரி 1.5ஜிபி 4ஜி டேட்டா கிடைக்கிறது. அதோடு வரம்பற்ற வாய்ஸ் கால் சேவை, தினசரி 100 எஸ் எம் எஸ் என பல சேவைகள் கிடைக்கும். இவற்றுடன் 4 லட்சம் ரூபாய்க்கான இன்சூரன்ஸ் சேவையும் கிடைக்கும்.

 வேலிடிட்டி எத்தனை நாள்
 

வேலிடிட்டி எத்தனை நாள்

இதில் நல்ல விஷயம் என்னவெனில் இந்த ஆயுள் காப்பீடிற்கு மருத்துவ பரிசோதனைகள் எதுவும் தேவையில்லை. எனினும் இந்த திட்டம் 28 நாட்களுக்கு மட்டுமே செல்லும். இந்த திட்டத்தில் ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் பிரீமியம் சந்தாவும் இலவசமாக கிடைக்கும். எனினும் டேட்டா வரம்பு குறைந்ததும் இணைய வேகம் குறையும்.

 ஏர்டெல்லின் ரூ.179 திட்டம்

ஏர்டெல்லின் ரூ.179 திட்டம்

இதுமட்டும் அல்ல, ஏர்டெல்லில் 179 ரூபாய்க்கான திட்டத்தில் 2 லட்சம் ரூபாயக்கான இன்சூரன்ஸ் திட்டம் கிடைக்கிறது. இந்த திட்டம் 28 நாட்களுக்கு மட்டுமே செல்லும். தினசரி அதிவேக 2ஜிபி டேட்டா கிடைக்கிறது. அனைத்து நெட்வொர்க்குகளுக்கும் வரம்பற்ற வாய்ஸ் கால் சேவையும் கிடைக்கிறது. அதோடு தினசரி 300 எஸ் எம் எஸ்-கள் கிடைக்கிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Airtel’s Rs.279 prepaid plan offers Rs.4 lakh life insurance with unlimited internet and more benefits

Airtel latest update.. Airtel’s Rs.279 prepaid plan offers Rs.4 lakh life insurance with unlimited internet and more benefits
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X