ஜியோ உடன் போட்டிப்போட ஏர்டெல் புதிய திட்டம்.. மாபெரும் மறுசீரமைப்பு நடவடிக்கை..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்தியாவின் முன்னணி டெலிகாம் சேவை நிறுவனமான பார்தி ஏர்டெல், ஜியோ நிறுவனத்தைப் போலவே டிஜிட்டல் வர்த்தகப் பிரிவில் அதிகளவிலான வர்த்தகத்தையும் வருமானத்தைப் பெற வேண்டும் என இலக்கு நிர்ணயம் செய்து தனது டிஜிட்டல் வர்த்தகச் சொத்துக்கள் அனைத்தும் புதிய நிர்வாகத்தின் கீழ் கொண்டு வர முடிவு செய்துள்ளது.

 

இதன்படி ஏர்டெல் நிறுவனத்தில் இருக்கும் மியூசிக், கிளவுட், பேமெண்ட்ஸ் மற்றும் கன்டென்ட் ஆகியவற்றை மும்பை பங்குச்சந்தையில் பட்டியலிட்டு உள்ள பார்தி ஏர்டெல் நிறுவனத்தின் கீழ் கொண்டு வர முடிவு செய்துள்ளது.

 ஜியோ - ஏர்டெல் போட்டி

ஜியோ - ஏர்டெல் போட்டி

டெலிகாம் சேவை, வர்த்தகம், வாடிக்கையாளர்கள் என அனைத்து பிரிவிலும் ஜியோ உடன் போட்டிப்போட்டு வரும் சுனில் மிட்டல் தலைமையிலான ஏர்டெல் லிமிடெட் தனது டிஜிட்டல் சொத்துக்கள் அனைத்தும் பார்தி ஏர்டெல் நிறுவனத்தின் கீழ் கொண்டு வர முடிவு செய்துள்ளது.

 டிஜிட்டல் சொத்துக்கள் மறுசீரமைப்பு

டிஜிட்டல் சொத்துக்கள் மறுசீரமைப்பு

இந்த நிர்வாக மாற்றத்தின் மூலம் இந்தியா உயர்மட்ட நிர்வாக நேரடியாக டிஜிட்டல் வர்த்தகத்தைக் கவனித்துக்கொள்வது மட்டும் அல்லாமல் பெரிய அளவில் வர்த்தகத்தை மேம்படுத்த முடியும் என நம்புகிறது. இதன் வாயிலாகத் தற்போது Wynk மியூசிக், ஏர்டெஸ் Xstream, ஏர்டெல் தேங்க்ஸ், மிட்ரா பேமெண்ட் பிளாட்பார்ம், ஏர்டெல் Ads, ஏர்டெல் கிளவுட் ஆகியவற்றைப் பார்தி ஏர்டெல் நிறுவனத்தின் கீழ் சேர்க்க உள்ளது.

 4 வர்த்தகப் பிரிவுகள்
 

4 வர்த்தகப் பிரிவுகள்

இதன் மூலம் பார்தி ஏர்டெல் நிறுவனத்தின் கீழ் வர்த்தகங்கள் 4 முக்கியப் பிரிவுகளாகப் பிரிந்துள்ளது.

1. மொபைல், பிராண்ட்பேன்ட், எண்டர்பிரைசர்ஸ் ஆகியவை ஏர்டெல் லிமிடெட் நிறுவனமாகவும்,

2. பேமென்ட்ஸ் வங்கி தனிப் பிரிவாகும்

3. ஆப்பிரிக்கா, பங்களாதேஷ், இலங்கை மற்றும் நீர்மூழ்கி கேபிள் ஆகியவற்றை இண்டர்நேஷனல் பிரிவாகவும்

4. டேட்டா சென்டர் மற்றும் இன்டஸ் டவர் பிரிவை இன்பராஸ்டக்ச்சர் பிரிவில் தனியாகப் பிரித்துள்ளது.

 அன்னிய முதலீடுகள்

அன்னிய முதலீடுகள்

பார்தி ஏர்டெல் நிறுவனத்தில் தற்போது செய்யப்பட்டு உள்ள நிர்வாக மறுசீரமைப்பு மூலம் டிஜிட்டல் வர்த்தகத்தை மேம்படுத்துவது மட்டும் அல்லாமல் ஜியோ நிறுவனம் பெற்ற அன்னிய முதலீடுகளைப் போலவே ஏர்டெல் நிறுவனமும் பெற முடியும் என்பது தான் சுனில் மிட்டல்-ன் திட்டமாக உள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Airtel shifts all digital assets to listed entity Bharti Airtel

Airtel shifts all digital assets to listed entity Bharti Airtel
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X