மே3 வரை ப்ரீபெய்டு பேக்குகள் வேலிடிட்டி நீட்டிப்பு.. ஏர்டெல், ஜியோ அறிவிப்பு..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்தியாவில் கொரோனா பாதிப்பின் காரணமாகக் கோடிக்கணக்கான மக்கள் வேலைவாய்ப்பும் வருமானமும் இல்லாமல் இருக்கும் இந்த நேரத்தில் நாட்டின் முன்னணி தனியார் டெலிகாம் நிறுவனங்களான பார்தி ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியா ஆகிய நிறுவனங்கள் தங்களது ப்ரீபெய்டு வாடிக்கையாளர்கள் பலன் பெறும் வகையில் மே 3ஆம் தேதி வரையில் வேலிடிட்டி காலத்தை நீட்டிப்பு செய்துள்ளது.

 

இந்தச் சலுகையின் மூலம் வருமானம் இல்லாமல் ரீசார்ஜ் செய்ய முடியாவர்கள் அனைவரும் பயன் பெறுவார்கள்.

பார்தி ஏர்டெல் மற்றும் வோடபோன்

பார்தி ஏர்டெல் மற்றும் வோடபோன்

இப்புதிய சலுகை குறித்தி வோடபோன் ஐடியா நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், பியூச்சர் போன் கொண்டுள்ள அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் தங்களது ப்ரீபெய்டு பேக்குகள் மே 3ஆம் தேதி, ஆதாவது லாக்டவுன் காலம் முடியும் வரையில் வேலிடிட்டி காலத்தை நீட்டிப்பு செய்துள்ளது. இந்தச் சலுகை குறைந்த வருமானம் கொண்ட மக்களுக்குப் பெரிய அளவில் உதவும்.

அதேபோல் பார்தி ஏர்டெல் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறைந்த வருமானம் கொண்ட வாடிக்கையாளர்களுக்கு ரீசார்ஜ் செய்யவில்லை என்றாலும் மே 3 வரையில் இன்கம்மிங் கால்கள் அனைத்தும் வரும் எனத் தெரிவித்துள்ளது.

ஜியோ

ஜியோ

முகேஷ் அம்பானியின் ஜியோ நிறுவனமும் இதேபோன்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதோடு ஜியோ புதிதாக JioPOS Lite என்ற செயலியையும் அறிமுகம் செய்துள்ளது. இந்த ஆப் பயன்படுத்து மற்ற ஜியோ வாடிக்கையாளர்களுக்கு ரீசார்ஜ் செய்தால் அவர்களுக்குக் கமிஷன் கொடுக்கப்படும் எனவும் அறிவித்துள்ளது.

ரீசார்ஜ்
 

ரீசார்ஜ்

லாக்டவுன் காலத்தில் டெலிகாம் வாடிக்கையாளர்கள் ஆன்லைன் தளத்தைத் தாண்டி தற்போது ஏடிஎம், போஸ்ட் ஆபீஸ், மளிகை கடைகள், மருத்துக் கடைகள் எனப் பல இடங்களில் ரீசார்ஜ் செய்யும் வசதிகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஆயினும் லாக்டவுன் காரணமாக ஏர்டெல் தளத்தில் சுமார் 3 கோடி வாடிக்கையாளர்கள் ரீசார்ஜ் செய்ய முடியாமல் தவித்து வருகின்றனர் என ஏர்டெல் தெரிவித்துள்ளது.

டிராய்

டிராய்

இந்திய டெலிகாம் கட்டுப்பாட்டு ஆணையமான டிராய் சில வாரங்களுக்கு முன்பு டெலிகாம் நிறுவனங்களை, தங்கள் ப்ரீபெய்டு வாடிக்கையாளர்களின் ரீசார்ஜ் திட்டத்திற்கு ஏற்பட மே 3 தேதி வரையில் டேட்டா கொடுக்குமாறு அறிவுறுத்தியது. அதேபோல் இந்தச் சலுகைகளால் எத்தனை வாடிக்கையாளர்கள் நன்மை அடைந்துள்ளனர் என்பது தொடர்பாக முழுவிபரத்தையும் சமர்ப்பிக்குமாறு அறிவித்துள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Airtel, Vodafone Idea extend validity of pre-paid plans till 3 May

Private telecom operators Bharti Airtel and Vodafone Idea announced the extension of validity for pre-paid mobiles accounts of low-income customers till 3rd May after Trai scrutiny into the math of validity extension they had previously announced. Reliance Jio has extended a similar initiative for all customers who fail to recharge during this time.
Story first published: Saturday, April 18, 2020, 6:13 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X