அதுக்குள்ள 10 லட்சம் பேரா..? கலக்கும் ஏர்டெல்.. களத்தில் குதித்த ஜியோ..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்திய டெலிகாம் துறையே ஒரு போட்டி நிறைந்த களமாக மாறிவிட்டது. சமீபத்தில் ரீசார்ர்ஜ் கட்டணங்களை அதிகரித்த பின்பும் களத்தில் சூடு குறைந்ததாகத் தெரியவில்லை.

கடந்த டிசம்பர் 10, 2019 அன்று தான் ஏர்டெல் நிறுவனம் தன்னுடைய Wifi கால் வசதியை அறிமுகப்படுத்தினார்கள்.

இதென்னடா புது வசதியா இருக்கே என பல வாடிக்கையாளர்களும் இந்த வசதியைப் பயன்படுத்தத் தொடங்கி இருக்கிறார்களாம்.

ஏர்டெல் Wifi கால்
 

ஏர்டெல் Wifi கால்

இந்த ஏர்டெல் வைஃப கால் மூலம், Wifi வசதி இருக்கும் அலுவலகம் அல்லது வீடுகளில் உள்ளே இருந்து கொண்டே தரமான கால் சேவைகளைப் பெறலாம். இந்த Wifi கால் வசதிக்கு கூடுதலாக எந்த ஒரு கட்டணமும் செலுத்தத் தேவை இல்லை. இருக்கும் எண்ணில் இருந்தே Wifi காலிங் சேவையைப் பயன்படுத்தலாம்.

டெல்லியில் தொடக்கம்

டெல்லியில் தொடக்கம்

இந்த ஏர்டெல் Wifi கால் செய்ய பயன்படுத்தப்படும் அப்ளிகேஷனும் அதிக அளவில் டேட்டாவைப் பயன்படுத்தாதம். ஆக, ஏர்டெல் நிறுவனம் தொடங்கிய இந்த Wifi காலிங் சேவையை, முதலில் டெல்லி மற்றும் என் சி ஆர் பகுதிகளில் மட்டும் தான் கொண்டு வந்தது.

சேவை விரிவாக்கம்

சேவை விரிவாக்கம்

அடுத்த சில வாரங்களிலேயே தமிழ் நாடு, குஜராத், ஹரியானா, கேரளா, மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, பஞ்சாப், உத்திரப் பிரதேசம் கிழக்கு, உத்திரப் பிரதேசம் மேற்கு, ஆந்திரப் பிரதேசம், கர்நாடகா, கொல்கத்தா, மும்பை போன்ற மாநிலங்கள் மற்றும் மாநகரங்களுக்கு, இந்த Wifi காலிங் சேவையைக் கொண்டு வந்துவிட்டார்கள்.

டிவைஸ்கள்
 

டிவைஸ்கள்

இந்த ஏர்டெல் Wifi காலிங் சேவையைத் இப்போது சியாமி, சாம்சங், ஒன்ப்ளஸ், ஆப்பிள், விவோ, மைக்ரோமேக்ஸ் போன்ற 16 முன்னணி ஸ்மார்ட்ஃபோன் பிராண்ட்களில் 100-க்கும் மேற்பட்ட ஸ்மார்ட்ஃபோன் ரகங்களில், தற்போது பயன்படுத்த முடியுமாம். ஏர்டெல் Wifi காலிங் சேவையை பயன்படுத்தக் கூடிய ஸ்மார்ட்ஃபோன் ரகங்களின் எண்ணிக்கையையும் ஒரு பக்கம் கூட்டிக் கொண்டிருக்கிறது ஏர்டெல் நிறுவனம்.

1 மில்லியன் பேர்

1 மில்லியன் பேர்

கடந்த டிசம்பர் 10, 2019-ல் தொடங்கிய இந்த ஏர்டெல் Wifi காலிங் சேவை, இந்த ஜனவரி 10, 2020-ல் சுமாராக 10 லட்சம் பேர் இந்தியா முழுக்க பயன்படுத்தத் தொடங்கி இருக்கிறார்கள் என ஏர்டெல் நிறுவனத்தின் முதன்மை டெக்னாலஜி அதிகாரி ரந்தீப் செகான் சொல்லி இருக்கிறார்.

ஜியோ வருகை

ஜியோ வருகை

ஏர்டெல்லின் வளர்ச்சியைப் பார்த்த, முகேஷ் அம்பானியின் ஜியோ கம்பெனி, சரியாக ஜனவரி 10, 2020 அன்று தன் Wifi காலிங் சேவையைத் தொடங்கினார்கள். ஜியோ என்றாலே அதிரடி தானே... தொடங்கும் போதே அனைத்து இந்தியாவுக்கும் ஒரே நேரத்தில் Wifi காலிங் வசதியைத் தொடங்கி இருக்கிறார்கள்.

நோ சார்ஜ்

நோ சார்ஜ்

ரிலையன்ஸ் ஜியோவிலும் ஏர்டெல் Wifi காலிங் போலத் தான். கூடுதலாக எந்த கட்டணமும் செலுத்தத் தேவை இல்லை. இருக்கும் எண்ணை வைத்துக் கொண்டே Wifi காலிங் செய்யலாம். Wifi காலிங் செய்ய வீட்டிலோ அல்லது அலுவலகத்திலோ ஒரு Wifi வசதி இருந்தால் போதும். ஆக இரண்டு பேருமே கிட்டத் தட்ட ஒரே மாதிரி திட்டத்துடன் தான் களம் இறங்கி இருக்கிறார்கள்.

ஜியோ டிவைஸ்

ஜியோ டிவைஸ்

ஆனால், ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் Wifi காலிங் சேவையை சுமார் 150 ஸ்மார்ட்ஃபோன்களில் பயன்படுத்த முடியுமாம். இந்த ஸ்மார்ட்ஃபோன்களின் எண்ணிக்கையை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டு இருக்கிறார்களாம். ஆக ரிலையன்ஸ் ஜியோ போல, ஏர்டெல் நிறுவனத்தின் Wifi காலிங் வசதியை இன்னும் நிறைய ஸ்மார்ட்ஃபோன்களில் பயன்படுத்த முடிய வேண்டும். அப்போது தான் ஜியோவோடு ஏர்டெல்லால் போட்டி போட முடியும்.

அடுத்த மாதம்

அடுத்த மாதம்

ஆக அடுத்த பிப்ரவரி 2020-ல் இலவச Wifi காலிங் சேவையில் யார் முன்னணியில் இருக்கிறார்கள்... சுனில் மிட்டலின் ஏர்டெல்லா அல்லது முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவா என தெளிவாகத் தெரிந்து விடும். அதான் Wifi காலிங் வசதியைக் கொடுத்துவிட்டோமே, பிறகு எதற்கு சாதாரண வாய்ஸ் கால் என, அதன் தரத்தில் கை வைக்காமல் இருந்தால் சரி.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

airtel Vs reliance jio wifi calling airtel got 1 mn customer

Airtel and Reliance jio introduced wifi calling facility recently. airtel got 1 million customers in one month.
Story first published: Monday, January 13, 2020, 18:54 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X