கிரிப்டோகரன்சி சந்தையில் நீண்ட காலமாக ஆதிக்கம் செலுத்தும் பிட்காயின் மதிப்பு பெரிய அளவில் உயரவில்லை என்றாலும் தொடர்ந்து வளர்ச்சி பாதையில் இருக்கிறது. ஆனால் இதேவேளையில் பிட்காயினுக்குப் போட்டியாகச் சிறிதும் பெரிதுமாகப் பல பிட்காயின் கிரிப்டோகரன்சி சந்தைக்குள் வந்துள்ளது.
இதனால் மொத்த கிரிப்டோகரன்சி சந்தை மதிப்பீட்டில் பிட்காயின் ஆதிக்கம் குறைந்துள்ளது. சரி Altcoins என்றால் என்ன தெரியுமா..

ஆல்ட்காயின்
கிரிப்டோகரன்சி சந்தையின் மொத்த சந்தை மதிப்பீட்டில் பிட்காயின் மட்டும் 90 முதல் 95 சதவீதம் ஆதிக்கம் செலுத்திய காலம் எல்லாம் உண்டு. இதன் பிட்காயினைப் பிரதானமாகக் காட்டவும், மற்ற காயின்கள் அனைத்தும் அழைக்க மாற்று கிரிப்டோகாயின் அதாவது alternative cryptocurrency என அழைக்கப்பட்டது.
பின்னாளில் alternative cryptocurrency என்பது Altcoin ஆக மாறியது.

பிட்காயின் Vs ஆல்ட்காயின்
ஆல்ட்காயின் பெயர் வந்த பின்பு கிரிப்டோகரன்சி சந்தையில் பிட்காயின் Vs ஆல்ட்காயின் ஆக மட்டுமே இருக்கிறது. இந்த நிலையில் டிசம்பர் 9ஆம் தேதி தரவுகள் படி உலகளவில் மொத்த கிரிப்டோகரன்சி சந்தையின் மதிப்பு 2.26 டிரில்லியின் டாலராக இருந்த நிலையில் பிட்காயின் மதிப்பு இதில் வெறும் 39.83 சதவீதமாகக் குறைந்தது.
இது ஜனவரி 1ஆம் தேதி 70 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன்பு ஜனவரி 15, 2018ல் பிட்காயின் ஆதிக்கம் 32.81 சதவீதம் வரையில் குறைந்தது குறிப்பிடத்தக்கது.

பிட்காயின் மதிப்பு
இன்று ஒரு பிட்காயின் மதிப்பு 0.62 சதவீதம் சரிந்து 48,552.01 டாலராக உள்ளது, இதன் மூலம் மொத்த பிட்காயின் சந்தை மதிப்பு 918.58 பில்லியன் டாலராக உள்ளது. இதைத் தொடர்ந்து எதிரியம் மதிப்பு 1.65 சதவீதம் சரிந்து 3,934 டாலராக உள்ளது, இதன் மூலம் மொத்த பிட்காயின் சந்தை மதிப்பு 468.576 பில்லியன் டாலராக உள்ளது.

அதிகம் லாபம்
இன்று கிரிப்டோ சந்தையில் அதிகம் லாபம் கொடுத்த முக்கியமான கிரிப்டோகரன்சிகள்
Baby Cat Girl : BBYCAT - 346.49%
DART Inu : DART - 291.21%
Coinpad : CP - 265.02%
PAPPAY : PAPPAY - 241.69%
Cross Chain Farming : CCF - 179.07%
ZEON : ZEON - 132.15%
Coin To Fish : CTFT - 113.17%
Txbit Token : TXBIT - 107.91%
Axial Entertainment Digital Asset : AXL - 99.19%
GamingShiba : GAMINGSHIBA - 94.09%
Antex : ANTEX - 86.70%
Aditus : ADI - 79.37%
Dacxi : DACXI - 78.15%