சீனாவின் மூன்று பிராண்டுகளுக்கு தடை.. அமேசான் பரபர நடவடிக்கை.. பின்னணி என்ன..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

அமெரிக்காவினை சேர்ந்த மிகப் பிரபலமான இ-காமர்ஸ் நிறுவனமான அமேசான், சீன நிறுவனத்தின் மூன்று பிராண்டுகளை தனது தளத்தில் தடை செய்ய திட்டமிட்டுள்ளது.

 

இது RAVPower power banks, Taotronics earphones, VAVA cameras-three brands உள்ளிட்ட பிராண்டுகளை தான் தடை செய்ய முடிவு செய்துள்ளது.

ஐய்யோ பாவம்.. இந்திய பணக்காரர்களுக்கு இப்படியொரு பிரச்சனையா..?!

இது இந்த பிராண்டுகள், தங்கள் வணிகர்கள் நேர்மறையான மதிப்புரைகளை எழுத விரும்பும் வாடிக்கையாளர்களுக்கு பரிசுகளை வழங்குவதாக கண்டறிந்த பின்னர் தடை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

இது பொதுவான நடைமுறை தான்

இது பொதுவான நடைமுறை தான்

சீனா இ-காமர்ஸில் இது ஒரு பொதுவான நடைமுறை என்று கூறப்படும் நிலையில், அமேசான் இந்த மறுஆய்வு முறையை தவறாக புரிந்து கொண்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இது குறித்த விசாரணையில் சில பிராண்டுகள் வாடிக்கையாளர்களுக்கு பரிசுகளுக்கான அட்டையை வழங்கியிருக்கலாம். ஆனால் இது அமேசானின் விதிமுறைகளை மீறியதாக கூறப்படுகிறது.

மின் சாதன பொருட்கள் தடை

மின் சாதன பொருட்கள் தடை

இவ்வாறு அமேசான் தடை செய்யவுள்ள மூன்று பிராண்டுகளும், குழந்தைகளை கண்கானிக்கும் கேமராக்கள் உள்ளிட்ட, பல நுகர்வோர் மின் சாதனங்களை விற்பனை செய்கின்றன. மேற்கண்ட இந்த மின் சாதன பொருட்கள், 2020 ஆரம்பத்தில் இருந்து அமேசானின் சன்வாலியின் மொத்த விற்பனையில் மூன்றில் ஒரு பங்கு வகிக்கின்றன.

விற்பனையாளர்கள் விதிமீறல்கள்
 

விற்பனையாளர்கள் விதிமீறல்கள்

கடந்த மாதத்தில் இருந்தே சீனாவின் சில மின்னணு கேட்ஜெட்டுகள், அமேசானின் ஆன்லைன் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக SCMP முன்னதாக ஒரு அறிக்கையில் கூறியிருந்தது. சீன விற்பனையாளர்கள் நண்பர்களை கொண்டு மறுபரிசீலனை செய்ய சொல்வது உட்பட பல விதிமீறல்கள் மூலம், வாடிக்கையாளர்களை ஈர்ப்பதில் ஈடுப்பட்டு வந்ததே இதற்கு காரணம் என்றும் கூறப்படுகிறது.

சீனாவின் மிகப்பெரிய பிராண்டுகள் பாதிப்பு

சீனாவின் மிகப்பெரிய பிராண்டுகள் பாதிப்பு

அமேசான் தடை செய்த ஒவ்வொரு விற்பனையாளரும் மிகப்பெரியவை என்று ஷென்செனை சேர்ந்த அமேசான் ஆலோசகர் சாக் பிராங்க்ளின் கூறியுள்ளார். அமேசானின் இந்த நடவடிக்கையால் பைட்டான்ஸ் மற்றும் சியோமி ஆதரவுடைய, நுகர்வோர் தயாரிப்பு நிறுவனமான படோசன் ஆகியவற்றால் நடத்தப்படும் முக்கிய கடையான எம்போவும் இதனால் பாதிக்கப்பட்டுள்ளது.

விதிமுறை மீறினால் நடவடிக்கை பாயும்

விதிமுறை மீறினால் நடவடிக்கை பாயும்

வளர்ந்து வரும் சீன பிராண்டுகள் தங்களது உள்நாட்டு சந்தையை தாண்டி, தற்போது தான் அமேசான் மற்றும் இபே மூலமாக வெளி சந்தைகளில் பரவ தொடங்கியுள்ளனர். இந்த நிலையில் அமேசானின் இந்த நடவடிக்கை நிச்சயம் பெரிய தாக்கமாகத் தான் இருக்கும். எப்படியிருப்பினும் விதிமுறைகளை மீறினால், தடை செய்யப்படலாம் என்ற அச்சமும் இருக்கும் என்றும் பிராங்க்ளின் கூறுகின்றார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Amazon bans 3 more Chinese brands amid elimination fake reviews

Amazon latest updates.. Amazon bans 3 more Chinese brands amid elimination fake reviews
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X