குக்கர் விற்பனை செய்தது தப்பா? அமேசான் நிறுவனத்திற்கு ரூ.1 லட்சம் அபராதம்!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்தியாவில் உள்ள முன்னணி ஆன்லைன் இ-காமர்ஸ் நிறுவனங்களில் ஒன்றான அமேசான் நிறுவனத்திற்கு மத்திய நுகர்வோர் ஆணையம் ரூபாய் ஒரு லட்சம் அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளது.

 

அமேசான் நிறுவனம் தரக்கட்டுப்பாடுகளை மீறி பிரஷர் குக்கர்களை விற்பனை செய்ததாகவும் அதற்காக இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாகவும் நுகர்வோர் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது.

இதனை அடுத்து அமேசான் நிறுவனம் அபராதத்தை கட்டுவது மட்டுமின்றி இது வரை விற்பனை செய்த குக்கர்களை வாடிக்கையாளர்களிடம் இருந்து திரும்ப பெற்று அதற்குரிய பணத்தையும் செலுத்த வேண்டும் என்று நுகர்வோர் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது

அமேசானுக்கு அபராதம்

அமேசானுக்கு அபராதம்

ஆன்லைன் சில்லறை விற்பனையாளரான அமேசான் தர விதிமுறைகளை பூர்த்தி செய்யாத பிரஷர் குக்கர்களை விற்பனை செய்ததற்காக ரூ.1 லட்சம் அபராதம் செலுத்த வேண்டும் என மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையத்தின் முதன்மை ஆணையர் திருமதி நிதி கரே உத்தரவிட்டுள்ளார்.

2,265 பிரஷர் குக்கர்கள்

2,265 பிரஷர் குக்கர்கள்

அமேசான் இ-காமர்ஸ் நிறுவனத்திற்கு அபராதம் விதித்த மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் (சிசிபிஏ) தனது உத்தரவில், அமேசான் தனது தளத்தின் மூலம் விற்பனை செய்த 2,265 பிரஷர் குக்கர்களை வாங்கியவர்களுக்கு தகவல் தெரிவித்து, தயாரிப்புகளை திரும்ப பெறவும் மற்றும் நுகர்வோருக்கு தொகையை திருப்பி செலுத்தவும் அறிவுறுத்தியுள்ளது.

மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம்
 

மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம்

மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையத்தின் முதன்மை ஆணையர் திருமதி நிதி கரே தலைமையிலான ஆணையம், அமேசான் நிறுவனம் தனது இ-காமர்ஸ் தளத்தில், உள்நாட்டு பிரஷர் குக்கர்களை விற்பனை செய்ததற்காக நடவடிக்கை எடுக்க சமீபத்தில் உத்தரவு பிறப்பித்தது. நுகர்வோர் பாதுகாப்பு அமைப்பு, கட்டாய தரங்களை மீறி, உள்நாட்டு பிரஷர் குக்கர்களை விற்பனை செய்யும் இ-காமர்ஸ் தளங்களுக்கு எதிராக சுய-மோட்டோ நடவடிக்கையையும் எடுக்க தொடங்கியுள்ளது.

அறிவுறுத்தல்

அறிவுறுத்தல்

அமேசான், பிளிப்கார்ட், பேடிஎம் மால், ஷாப்க்ளூஸ் மற்றும் ஸ்னாப்டீல் உள்ளிட்ட முக்கிய இ-காமர்ஸ் தளங்களுக்கு ஹெல்மெட், பிரஷ்ஷர் குக்கர் மற்றும் சமையல் எரிவாயு சிலிண்டர் விற்பனை குறித்து சில அறிவுறுத்தல்களை நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் வழங்கியுள்ளது.

2,265 பிரஷர் குக்கர்கள்

2,265 பிரஷர் குக்கர்கள்

அமேசான் நிறுவனம் சமர்ப்பித்த பதிலை ஆய்வு செய்த பிறகு, QCO (தரக் கட்டுப்பாட்டு ஆணை) அறிவிப்புக்கு பிறகு, அமேசான் மூலம் கட்டாய தரங்களுக்கு இணங்காத மொத்தம் 2,265 பிரஷர் குக்கர்கள் விற்கப்பட்டது உறுதி செய்யப்பட்டது. அமேசான் தனது இ-காமர்ஸ் தளத்தின் மூலம் இத்தகைய பிரஷர் குக்கர்களை விற்பனை செய்ததில் பெற்ற மொத்த கட்டணம் ரூ. 6,14,825.41 என்றும், அந்த தொகையை நுகர்வோர்களுக்கு திருப்பி செலுத்தவும் அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

விற்பனை கமிஷன்

விற்பனை கமிஷன்

அமேசான் தனது தளத்தில் விற்கப்படும் பிரஷர் குக்கர்களுக்கு விற்பனை கமிஷன் கட்டணத்தை பெற்றதாக ஒப்புக்கொண்டது. அமேசான் தனது இ-காமர்ஸ் தளத்தில் பட்டியலிடப்பட்டுள்ள ஒவ்வொரு தயாரிப்பின் விற்பனையிலிருந்தும் வணிக ரீதியாக சம்பாதிக்கும் போது, ​​இந்த பொருட்களின் விற்பனையில் சிக்கல்கள் ஏற்பட்டால் அந்நிறுவனம் பொறுப்பேற்க வேண்டும் என்பதையும் CCPA உறுதி செய்துள்ளது.

45 நாட்களுக்குள் அறிக்கை

45 நாட்களுக்குள் அறிக்கை

எனவே, தயாரிப்புகளை திரும்ப பெறவும், வாங்குபவர்களுக்குத் தொகையைத் திருப்பி தரவும் அமேசானை மத்திய நுகர்வோர் ஆணையம் கேட்டுக் கொண்டது. மேலும் அமேசான் இ-காமர்ஸ் நிறுவனம் 45 நாட்களுக்குள் இதுகுறித்த அறிக்கையை சமர்ப்பிக்குமாறு கேட்டு கொள்ளப்பட்டுள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Amazon Fined Rs 1 Lakh For Selling Sub-Standard Pressure Cookers

Amazon Fined Rs 1 Lakh For Selling Sub-Standard Pressure Cookers | குக்கர் விற்பனை செய்தது தப்பா? அமேசான் நிறுவனத்திற்கு ரூ.1 லட்சம் அபராதம்!
Story first published: Friday, August 5, 2022, 9:05 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X