அமேசான் புதிய முயற்சி.. விவசாயிகள் மகிழ்ச்சி..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்தியாவின் முன்னணி ஆன்லைன் ஷாப்பிங்கு நிறுவனமான அமேசான் நாட்டின் மொத்த சந்தையையும் பிடிக்க வேண்டும் என்று வால்மார்ட் துணையுடன் இயங்கும் பிளிப்கார்ட் உடன் கடுமையான போட்டிப் போட்டு வரும் அதே நிலையில், பல புதிய சேவைகளையும் வர்த்தகத்தையும் இந்தியாவில் தொடர்ந்து அறிமுகம் செய்து வருகிறது அமேசான்.

சமீபத்தில் கூடச் சோமேட்டோ, ஸ்விக்கி நிறுவனங்களுக்குப் போட்டியாக ஆன்லைன் உணவு டெலிவரி வர்த்தகத்தையும், கூகிள் பே, பேடிஎம் ஆகியவற்றுக்குப் போட்டியாக அமேசான் பே வர்த்தகத்தையும் அறிமுகம் செய்து பெரிய அளவில் வர்த்தக விரிவாக்கம் செய்யத் திட்டமிட்டு வருகிறது.

இப்படியிருக்கும் நிலையில் இந்தியாவில் முதல் முறையாக அமேசான் Farm to Forkஎன்ற திட்டத்தை அறிமுகம் செய்து முதற்கட்டமாகப் புனே நகரத்தில் இதைத் துவங்கியுள்ளது அமேசான்.

Farm to Fork திட்டம்
 

Farm to Fork திட்டம்

அமேசான் இத்திட்டத்தைப் பல நாடுகளில் செயல்படுத்தியிருக்கும் நிலையில் இந்தியாவில் முறையாகக் கொண்டு வந்துள்ளது. இத்திட்டத்தின் மூலம் அமெரிக்க நிறுவனமான அமேசான் இந்திய விவசாயிகள் விளைவிக்கும் உணவு பொருட்களை அவர்களிடம் இருந்து நேரடியாகக் கொள்முதல் செய்து தனது ஆன்லைன் மற்றும் ஆப்லைன் வர்த்தகத் தளத்தில் விற்பனை செய்வது தான் இந்த இத்திட்டம்.

புனே

புனே

இத்திட்டத்தை இந்தியாவில் புனே நகரத்தில் இருந்து செயல்படுத்தத் துவங்கியுள்ளது அமேசான். புனே நகரத்தில் 12க்கும் அதிகமான விவசாயிகளை இத்திட்டத்திற்குள் இணைந்துள்ளது. இவர்களிடம் இருந்து கொள்முதல் செய்யப்படும் பொருட்களை அமேசான் தனது அமேசான் பிரஷ் மற்றும் அமேசான் பேன்டரி ஆகிய இரு வர்த்தகத் தளத்தில் விற்பனை செய்ய உள்ளதாகத் தகவல் கிடைத்துள்ளது.

விரிவாக்கம்

விரிவாக்கம்

அமேசானின் இந்த Farm to Fork திட்டம் தற்போதைய நிலையில் சோதனை ஓட்டமாக மட்டுமே இருக்கிறது. இத்திட்டம் வெற்றி அடைந்தால் இந்தியாவின் பல முக்கிய நகரங்களுக்கு இதை அடுத்தகட்டமாக விரிவாக்கம் செய்யத் திட்டவட்டமாக முடிவு செய்துள்ளது.

தற்போது அமேசான் தனது காய்கறி மற்றும் பழங்கள் விற்பனைக்காக மொத்த விலை கடைகளான மண்டியில் தான் வாங்கி வருகிறது. இதை நேரடியாக விவசாயிகளிடம் இருந்து பெறும் போது அமேசான் நிறுவனத்திற்கும் கூடுதல் லாபம் கிடைக்கும். இதன் காரணமாகத் தான் இத்திட்டத்தைச் செயல்படுத்தியுள்ளது.

மளிகை பொருட்கள்
 

மளிகை பொருட்கள்

இதேபோல் அமேசான் தற்போது உணவு பொருட்கள் பிரிவில் மளிகை பொருட்கள் விற்பனை பிரிவையும் மிகவும் முக்கிய வர்த்தகப் பிரிவாகப் பார்த்து வருகிறது. அடுத்தச் சில வருடங்களில் இதையும் Farm to Fork திட்டத்திற்குள் இணைக்க முயற்சி செய்து வருகிறது அமேசான்.

இந்தியாவில் அமேசானின் அனைத்து வர்த்தகப் பிரிவும் சிறப்பான முறையில் வர்த்தகத்தைப் பெற்று இருக்கும் நிலையில், மளிகை பொருட்கள் மற்றும் காய்கறி விற்பனையில் பெரிய அளவிலான வாடிக்கையாளர்கள் கிடைக்கவில்லை. இதன் காரணமாகத் தான் இப்பிரிவில் தொடர்ந்து வர்த்தகத்தை மேம்படுத்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது அமேசான் நிர்வாகம்.

மொத்த சந்தை

மொத்த சந்தை

இந்தியாவின் உணவு மற்றும் மளிகை பொருட்களின் மொத்த வர்த்தகச் சந்தை 580 பில்லியன் டாலர். இதில் வகைப்படுத்தப்பட்ட அதாவது Organised சில்லறை விற்பனையாளர்களின் மொத்த வர்த்தகச் சந்தையின் மதிப்பு வெறும் 25 பில்லியன் டாலர் தான். இந்த மாபெரும் சந்தையைப் பிடிக்கத்தான் அமேசான் போராடி வருகிறது.

2024ஆம் ஆண்டுக்குள் Organised சில்லறை விற்பனையாளர்களின் மொத்த வர்த்தகச் சந்தை 69 பில்லியன் டாலர் வரையில் உயரலாம் எனச் சந்தை ஆய்வுகள் கூறுகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Amazon new initiative to source directly from farmers

Amazon Retail India Pvt Ltd (ARIPL), the wholly-owned food retailing venture of the US giant, is currently working with dozens of farmers in the region and the company has created a cold chain hub in the vicinity to supply fresh produce to sell online through its Amazon Fresh and Amazon Pantry. Amazon is running a pilot project in Pune where the US e-commerce company is for the first time sourcing fresh produce directly from the farmers as part its farm-to-fork initiatives.
Story first published: Thursday, December 19, 2019, 9:17 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Goodreturns sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Goodreturns website. However, you can change your cookie settings at any time. Learn more