இது செம நியூஸ்.. இப்ப டிக்கெட் வாங்கிக்கோங்க.. 1 மாதம் கழித்து பணம் கொடுக்கலாம்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பயண பிரியர்களுக்கு இது ஒரு குட் நியூஸ் எனலாம். அதிலும் தீபாவளி போன்ற விழாக்கால பருவத்தில் இது போன்ற அறிவிப்புகள் மிக பயனுள்ளதாக இருக்கும்.

 

அப்படி என்ன அறிவிப்பு? இது மக்களுக்கு எந்த விதத்தில் பயனுள்ளதாக இருக்கும் வாருங்கள் பார்க்கலாம்.

அமேசான் பே மற்றும் மேக் மை டிரிப் (MakeMy Trip) நிறுவனங்கள் கூட்டாக இணைந்து பயணிகளுக்கு, சிறப்பானதொரு பயன அனுபவத்தினை வழங்கும் பொருட்டு ஒரு அறிவிப்பினை கொடுத்துள்ளன.

தீபாவளி ஷாப்பிங் துவங்கியாச்சா.. கடன் வலையில் சிக்கிக்கொள்ளாதீர்கள்.. முதல்ல இதைப் படிங்க..!

நீண்டகால ஒப்பந்தம்

நீண்டகால ஒப்பந்தம்

தற்போது ஆன்லைன் நிதி ரீதியிலான சேவைகள் மேம்பட்டு வரும் நிலையில், அதில் தங்களை நிலை நிறுத்திக் கொள்ளவும், அடுத்த கட்டத்திற்கு தங்களை எடுத்து செல்ல அமேசான் பே-வும், இதே தங்களது ஆன்லைன் வணிகத்தினை டிஜிட்டல் மூலமாக இன்னும் மேம்படுத்தும் விதமாக மேக் மை டிரிப்பும் நீண்டகால ஒப்பந்தத்தினை ஏற்படுத்தியுள்ளன.

வட்டி இல்லா கடன்

வட்டி இல்லா கடன்

இந்த ஒப்பந்தத்தின் மூலம் அமேசான் வாடிக்கையாளர்கள், விமானங்கள், பேருந்துகள், ஹோட்டல் முன் பதிவு செய்யும் வாடிக்கையாளார்கள், அதற்கான கட்டணத்தினை, 1 மாதம் கழித்து செலுத்தலாம் என தெரிவித்துள்ளன. அதோடு இந்த ஒரு மாதத்திற்கு வட்டி எதுவும் செலுத்த தேவையில்லை என்றும் கூறப்பட்டுள்ளது. ஆக அமேசான் பே மற்றும் மேக் மை டிரிப்பின் இந்த பயண சேவை குறித்தான ஒப்பந்தம் டிஜிட்டல் சேவையை மேம்படுத்துவதுடன், வாடிக்கையாளர்கள் சிறந்த பயணத்தையும் அனுபவிக்க முடியும்.

வாடிக்கையாளார்களுக்கு பயன்
 

வாடிக்கையாளார்களுக்கு பயன்

இது குறித்து மேக் மை டிரிப் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி இணை நிறுவனர், ராஜேஷ் மாகோவ், அமேசான் பே உடனான இந்த கூட்டணி, வாடிக்கையாளர்காளுக்கு மிக பயனுள்ளதாக இருக்கும். புதிய வாடிக்கையாளர்களை ஈர்க்கும் என கூறியுள்ளார். இதே அமேசான் பே இந்தியாவின் தலைமை செயல் அதிகாரி மகேந்திரா நெருர்கர், மேக் மை டிரிப் நிறுவனத்துடனான கூட்டணி குறித்து, மில்லியன் கணக்கான வாடிக்கையாளார்கள், இந்த கூட்டணி மூலம் பயன் பெறுவர். இது சிறந்த பயண அனுபவத்தினை கிடைக்க வழிவகுக்கும் என்றும் கூறியுள்ளார்.

பயணம் அதிகரிப்பு

பயணம் அதிகரிப்பு

தற்போது நாட்டில் கொரோனாவின் தாக்கம் குறைந்துள்ள நிலையில், பயண போக்கு அதிகரிக்க தொடங்கியுள்ளது. வரவிருக்கும் பண்டிகை காலங்களில், குறிப்பாக புத்தாண்டு காலங்களில் ஆன்லைன் பதிவுகள் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது வாடிக்கையாளார்களுக்கு மிக பயனுள்ளதாக அமையும் என்றும் தெரிவித்துள்ளது.

வாடிக்கையாளார்களை ஊக்குவிக்கும்

வாடிக்கையாளார்களை ஊக்குவிக்கும்

அமேசான் பே வாடிக்கையாளார்கள் தங்களது பயண டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய முடியும் என்பதோடு, ஒரு மாதத்திற்கு வட்டியும் கொடுக்க தேவையில்லை என்பதால், இது வாடிக்கையாளர்களுக்கு ஒரு நெகிழ்வை கொடுக்கும். இந்த கூட்டணி மூலம் அமேசான் பே-யின் மிகப்பெரிய தளம் மூலம், மேக் மை டிரிப்பின் வணிகம் பெரியளவில் விரிவாக்கம் செய்ய உதவும். வாடிக்கையாளார்களின் முன்பதிவினை இது மேலும் ஊக்குவிக்கும் என தெரிவித்துள்ளது.

அமேசான் பே ஐசிஐசிஐ கூட்டணி

அமேசான் பே ஐசிஐசிஐ கூட்டணி

இதே போல அமேசான் பே ஐசிஐசிஐ இணைந்து வாடிக்கையாளார்களுக்கு, அவர்களின் ஹோட்டல், பஸ், விமான முன்பதிவுகளுக்கு வரம்பற்ற கேஷ்பேக்கையும் வழங்கி வருகின்றது. இங்கும் முன்பதிவு செய்து பின்னர் பணம் செலுத்திக் கொள்ளலாம் என்ற அம்சம் ஏற்கனவே உள்ளது. இது ரெட்பஸ் மூலமாக பதிவு செய்து கொள்ளும் அம்சம் ஏற்கனவே அமேசான் போர்டலில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Amazon Pay and MakeMy Trip strategic partnership offering buy a ticket now, pay after one month without interest:

Amazon Pay and MakeMy Trip strategic partnership offering buy a ticket now, pay after one month without interest/ அமேசான் பே மற்றும் மேக் மை டிரிப் நிறுவனங்கள் கூட்டாக இணைந்து, விமானங்கள், பேருந்துகள், ஹோட்டல் முன் பதிவு செய்யும் வாடிக்கையாளார்கள், அதற்கான கட்டணத்தினை, 1 மாதம் கழித்து செலுத்தலாம் என அறிவித்துள்ளன.
Story first published: Tuesday, November 2, 2021, 13:01 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X