அமேசானின் குடியரசு தின விழா சிறப்பு விற்பனை சலுகையானது ஜனவரி 20, அன்று முதல் தொடங்கவுள்ளது.
பொதுவாக இது போன்ற விற்பனை நாட்களின் சலுகைகளை அமேசான் போன்ற நிறுவனங்கள் வாரி வழங்குவதுண்டு. இந்த விழாக்காலத்தில் பல ஆஃபர்களையும் அறிவித்துள்ளன.
அமேசான், பிளிப்கார்ட் ஆகிய இரு நிறுவனங்களுமே போட்டி போட்டுக் கொண்டு வாடிக்கையாளர்களுக்கு, அடுத்த சில நாட்களில் தங்களது சலுகையை வழங்க திட்டமிட்டுள்ளன. அந்த வகையில் இன்று நாம் பார்க்கவிருப்பது அமேசானில் இதுபோன்ற சலுகைகள் என்னென்ன என்பதனை பற்றித் தான்.

எப்போது தொடக்கம்
இந்த இரு நிறுவனங்களுமே நூற்றுக்கும் மேற்பட்ட சலுகைகளையும், தள்ளுபடிகளையும் இந்த குடியரசு தின விழா சலுகையாக வழங்க திட்டமிட்டுள்ளன. குறிப்பாக இந்த நிறுவனங்களின் விழாக்கால சலுகை என்றாலே, அதில் ஸ்மார்ட்போன்களுக்கு தனி இடம் உண்டு. குறிப்பாக அமேசானின் இந்த சலுகை விற்பனையானது ஜனவரி 20 அன்று தொடங்கவுள்ளது. இது ஜனவரி 23 அன்று 11.59PM -க்கு முடிவடைகிறது. இந்த விற்பனை சலுகையானது ஜனவரி 19, 12AM அன்றே தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பல சலுகைகள்
இந்த சலுகை விற்பனையில் மொபைல் போன்கள், நுகர்வோர் எலக்ட்ரானிக் பொருட்கள், ஃபேஷன் & பியூட்டி, ஹோம் & கிட்சன் அப்ளையன்சஸ், தொலைக்காட்சிகள் , தினசரி தேவைப்படும் அத்தியாவசிய பொருட்கள் மற்றும் இன்னும் பலவற்றையும் தள்ளுபடி விலையில், கூடுதலாக பல சலுகைகளுடன் வழங்க திட்டமிட்டுள்ளது.

இதற்கு கூடுதல் சலுகை
மேற்கண்ட ஆஃபர்கள் தவிர, எஸ்பிஐ கிரெடிட் கார்டுகள் மூலம் பரிவர்த்தனை செய்பவர்களுக்கு கூடுதலாக 10 சதவீதம் சலுகைகள் கிடைக்கும். இது தவிர பஜாஜ் பின்செர்வ் இஎம்ஐ கார்டு மூலமாகவும், அமேசான் பே, ஐசிஐசிஐ கிரெடிட் கார்டு உள்ளிட்ட பல கார்டுகள் மூலமாகவும் பே லேட்டர் ஆப்சன் மூலமாகவும் பரிவர்த்தனை செய்தால், உடனடியாக 10 சதவீதம் உடனடி தள்ளுபடியை பெறலாம்.

அமேசானின் ஸ்மார்ட்போன் ஆஃபர்கள்
இந்த குடியரசு தின விழா சலுகை விற்பனையில், ஸ்மார்ட்போன்களும் மற்றும் உதிரிபாகங்களும் 40 சதவீதம் வரை தள்ளுபடி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதே எக்ஸ்சேன்ஸ் தள்ளுபடியில் 5000 ரூபாய் வரையில் தள்ளுபடி பெற முடியும். இதனையும் நோ காஸ்ட் இஎம்ஐ ஆப்சன் மூலம் பெறலாம். இதனை பல மாதங்கள் வரை செலுத்திக் கொள்ளலாம்.

ஒன்பிளஸ் போனுக்கு என்ன சலுகை
ஒன்பிளஸ் ஸ்மார்ட்போனின் புதிய மாடலான OnePlus 8T யினை 40,499 ரூபாய்க்கு பெறலாம். இதனை நோ காஸ்ட் இஎம்ஐ மூலமாக 18 மாத கால அவகாசத்தில் பெறலாம். அதோ போல ஒன்பிளஸ் 8 புரோ தினசரி 99 ரூபாய் செலுத்தினால் போதும் என அமேசான் தெரிவித்துள்ளது. ஒன்பிளஸ் நோர்டு 29,999 ரூபாய்க்கும் இந்த விழாக்கால விற்பனையின் மூலம் கிடைக்கும்.

ஜியோமியில் என்ன சலுகை
சமீபத்தில் வெளியான ஜியோமின் 2 மாடல்களும் இந்த சலுகை மூலம் பெற முடியும். ரெட்மி 9 பவர் மற்றும் Mi 10i இவை இரண்டும் கூடுதல் வங்கி சலுகைகளுடன் கிடைக்கிறது. நோட் 9 சீரியஸ் 10,999 ரூபாயிலிருந்து பெறலாம். இதனை நோ காஸ்ட் இஎம்ஐ மூலம் 12 மாதங்கள் வரை செலுத்திக் கொள்ளலாம்.

சாம்சங்கில் என்ன சலுகை
இன்றைய காலகட்டத்திலும் சாம்சங் ஒரு விருப்பமான ஸ்மார்ட்போன் ஆகத் தான் பார்க்கப்படுகிறது. சமீபத்திய வெளியீடான சாம்சங் M02s மற்றும் சாம்சங் கேலக்ஸி S21 இந்த சலுகையில் பெற முடியும். கேலக்ஸி M51, 7000 mAH பேட்டரியுடன் கிடைக்கும், 6 மாத கால அவகாசத்தினை நோ காஸ்ட் இஎம்ஐ சலுகை மூலம் பெற முடியும். இதன் மூலம் 8000 ரூபாய் தள்ளுபடியையும் பெற முடியும்.
இதே படஜெட் விலை போன்களான Samsung M31 6GB போன்களும் 14,999 ரூபாயில் பெற முடியும். சாம்சங்க் எம்31 17,999 ரூபாயிலிருந்தும் பெற முடியும். இதுவும் நோ காஸ்ட் இஎம்ஐ ஆப்சனையும் பெற முடியும். இது தவிர வங்கி சலுகையும் உண்டு.

ஐபோனிற்கு என்ன சலுகை
ஐபோன் 12மினி போன்களுக்கும் இந்த சலுகை பொருந்தும். இது தவிர விவோ ஸ்மார்ட்போன்கள் 30 சதவீதம் வரையில் சலுகை விலையிலும், 5,000 ரூபாய் வரையில் எக்ஸ்சேஞ்ச் சலுகையும் பெற முடியும்.
ஒப்போ ஸ்மார்ட்போன்களை பொறுத்தவரை 23,000 ருபாய் வரை தள்ளுபடி இருக்கும், மேலும் 12 மாதங்கள் வரையிலான நோ காஸ்ட் இ.எம்.ஐ விருப்பங்களும் கிடைக்கும். இது தவிர மொபைல் பாகங்கள், பவர் பேங்க் ஹெட்செட்டுகள் என அனைத்தும் சலுகை விலையில் கிடைக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.