ஜியோவிற்குப் போட்டியாக அமேசான் புதிய திட்டம்.. வெற்றி யாருக்கு..?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்தியாவின் முன்னணி ஈகாமர்ஸ் நிறுவனமான அமேசான் தனது வர்த்தகத்தை ஆன்லைன் மட்டும் அல்லாமல் ஆப்லைன் சந்தையிலும் முயற்சியாகப் புதிய திட்டத்தை உருவாக்கியுள்ளது. இந்தச் சோதனை திட்டத்திற்காக அமேசான் நிர்வாகம் சுமார் 10 கோடி ரூபாய் அளவிலான நிதியை ஒதுக்கீடு செய்துள்ளது.

 

இத்திட்டத்தில் திட்டத்தின் பெயர் 'Local Shop on Amazon' என்றும், முதற்கட்டமாக இந்தியாவின் 100 நகரங்களில் இருந்து சுமார் 5000 விற்பனையாளர்கள் மற்றும் கடை உரிமையாளர்களை இணைக்க முடிவு செய்துள்ளது.

திட்டத்தின் நோக்கம்

திட்டத்தின் நோக்கம்

அமேசான் இதுவரை எந்த நாட்டிலும் செய்யாத வகையில் இந்தியாவில் இத்திட்டத்தை வடிவமைத்துள்ளது. இத்திட்டத்தில் இணைய உள்ள 5000 சில்லறை விற்பனையாளர்கள் மற்றும் வர்த்தகர்களுக்குத் தொழில்நுட்ப உதவி வழங்கி, பொருட்களை இந்தியா முழுவதும் ஆன்லைனில் விற்பனை செய்யப் பயிற்சி கொடுக்கத் திட்டமிட்டுள்ளது அமேசான் இந்தியா.

இதன் மூலம் சில்லறை விற்பனையாளர்களுக்கு ஆன்லைன் விற்பனை சந்தையில் விற்பனை செய்யும் ஒரு புதிய வர்த்தகம் கிடைக்கும்.

வேகமான டெலிவரி

வேகமான டெலிவரி

இத்திட்டத்தின் மூலம் அமேசான் பொருட்களை வாடிக்கையாளருக்கு மிகவும் வேகமான முறையில் டெலிவரி செய்ய முடியும். இதுமட்டும் அல்லாமல் விற்பனையாளர்களுக்குத் தங்களது இயல்பான வர்த்தகத்தைத் தாண்டி புதிய வாடிக்கையாளர்கள், வர்த்தகர்கள் கிடைப்பார்கள்.

இதன் மூலம் சின்னச் சின்னக் கடைகள் கூட டிஜிட்டல் கடைகளாக மாறும் என அமேசான் தெரிவித்துள்ளது. மேலும் இது இரு தரப்பிற்கும் லாபமான வர்த்தகத் திட்டமாக இருக்கும் எனவும் அமேசான் நம்புகிறது.

டெலிவரி
 

டெலிவரி

மேலும திட்டத்தில் சேரும் விற்பனையாளர்களுக்கு எவ்விதமான கட்டுப்பாடுகளும், அளவீடுகளும் இல்லை. அவர்களால் எந்தெந்த பகுதிகளுக்குப் பொருட்களை டெலிவரி செய்ய முடியும் (பின்கோடு வாயிலாகக் கணக்கிடப்படுகிறது) என்பது மட்டுமே தான் கணக்கில் கொள்ளப்படும். சின்னக் கடையாக இருந்தாலும் சரி பெரிய கடையாக இருந்தாலும் சரி இத்திட்டத்தில் சேர்ந்துகொள்ள முடியும் என அமேசான் இந்தியாவின், விற்பனையாளர் சேவை பிரிவின் தலைவர் கோபால் பிள்ளை தெரிவித்துள்ளார்.

அமேசான் டெலிவரி ஆப்

இத்திட்டத்தில் சேரும் விற்பனையாளர்கள், பொருட்களை டெலிவரி செய்ய அமேசான் டெலிவரி ஆ பயன்படுத்த வேண்டும். அனைத்து ஆர்டர்களையும் இந்த ஆப் வாயிலாகவே நிர்வாகம் செய்துகொள்ள முடியும்.

6 மாத திட்டம்

6 மாத திட்டம்

அமேசான் இத்திட்டத்தை 6 மாத காலத்திற்கு நடத்த உள்ளது. மேலும் இத்திட்டத்தைப் பெங்களூரு, மும்பை, டெல்லி, ஹைதராபாத், புனே, ஜெய்ப்பூர், அகமதாபாத், கோயம்புத்தூர், சூரத், இந்தூர் லக்னோ, சஹரன்பூர், ஃபரிதாபாத், கோட்டா, வாரணாசி ஆகிய நகரங்களில் செயல்படுத்த அமேசான் முடிவு செய்துள்ளது.

ஜியோமார்ட்

ஜியோமார்ட்

அமேசானின் இத்திட்டம் கிட்டதட்ட ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஜியோமார்ட் சேவையைப் போன்றதே. ஜியோவின் அதிரடி திட்டங்கள் மூலம் இந்நிறுவனத்தின் ரீடைல் வர்த்தக வளர்ச்சி மிகக் குறைந்த காலகட்டத்தில் மிகப்பெரியதாக வளர்ச்சி அடைந்துள்ளது.

ஜியோ ஆன்லைன் வர்த்தகத்தில் பெரிய அளவில் வளர்ச்சி அடையவில்லை என்றால் ஆப்லைன் சந்தையில் வெற்றி நடைபோடுகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Amazon to help local shops, kirana stores sell online

Local shops and offline retailers of any size from any part of India will be allowed to join the programme. The programme will also allow a shopkeeper to choose the areas where they can deliver a product
Story first published: Friday, April 24, 2020, 20:51 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X