ஆஹா பிரமாதம்! வியாபாரத்தை விரிவுபடுத்தும் அமேசான்! புதிய சார்ட் சென்டர்கள் வேறு வருதாம்!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இன்று இந்தியா என்கிற நாடு வெறுமனே ஐடி கம்பெனிகளாலும், உற்பத்தித் திறனாலும் மட்டும் பொருளாதார அடிப்படையில் பெரிய நாடாக இல்லை.

மாறாக, உலகின் மிகப் பெரிய வாடிக்கையாளர்கள் படையை வைத்திருப்பதால் தான், இன்று இந்தியா எல்லோராலும், எல்லா கம்பெனிகளாலும் அதிகம் கவனிக்கப்படுகிறது.

அமேசான் நிறுவனமும், இந்தியாவில் தன் வியாபாரத்தை விரிவுபடுத்த சில நடவடிக்கைகளை எடுத்து வருவதாகச் செய்திகள் வெளியாகி இருக்கின்றன. என்ன நடவடிக்கைகளை எடுத்து இருக்கிறார்கள்? ஏன் இப்போது இந்த விரிவாக்கப் பணிகளைச் செய்கிறார்கள்? வாருங்கள் பார்ப்போம்.

5 சார்டிங் செண்டர்கள்
 

5 சார்டிங் செண்டர்கள்

விசாகப்பட்டினம், ஃபருக் நகர், பெங்களூரு, மும்பை, அஹமதாபாத் போன்ற இந்தியாவின் முக்கிய நகரங்களில், அமேசான் இந்தியா (Amazon India) கம்பெனி, சார்டிங் செண்டர்களை நிறுவ இருக்கிறார்களாம். அதோடு ஏற்கனவே இந்தியாவில் இருக்கும் 8 சார்டிங் சென்டர்களை விரிவுபடுத்தப் போவதாகச் செய்திகள் வெளியாகி இருக்கின்றன.

என்ன நன்மை

என்ன நன்மை

இந்த சார்டிங் செண்டர்களால், இந்தியாவில் அமேசான் கம்பெனியின் டெலிவரி வேகம் அதிகரிக்குமாம். அதோடு வாடிக்கையாளர்கள் & விற்பனையாளர்களுக்கு மத்தியில் இருக்கும் இணைப்பு வலுப்படுத்தப்படும் என்கிறது அமேசான் தரப்பு. இந்தியாவில், அடுத்த சில மாதங்கள் முழுக்க, தொடர்ந்து பண்டிகைகள் ஒன்றன் பின் ஒன்றாக வந்து கொண்டே இருக்கும் என்பது இங்கு கவனிக்கத்தக்கது.

எதற்கு இந்த சார்டிங் செண்டர்கள்

எதற்கு இந்த சார்டிங் செண்டர்கள்

அமேசானின் இந்த சார்டிங் செண்டர்கள், வாடிக்கையாளர்களுக்கான பேக்கேஜ்கள் டெலிவரி ஸ்டேஷன்களுக்குச் செல்வதற்கு முன் பிரிக்க பயன்படுத்துகிறார்களாம். வாடிக்கையாளர் இருக்கும் இடம் மற்றும் அவர்களுக்குச் சென்று சேரப் போகும் போக்குவரத்து முறை பொருத்து பேக்கேஜ்கள் பிரிக்கப்படுமாம். பேக்கேஜ்களைப் பிரிக்கும் வேலைக்குக் கூட, டெக்னாலஜியும், ஆட்டோமேஷனும் அதிகம் பயன்படுத்துகிறார்களாம்.

வியாபாரம் அதிகம்
 

வியாபாரம் அதிகம்

பொதுவாகவே, இ காமர்ஸ் கம்பெனிகளுக்கான வியாபாரம், இந்த பண்டிகை கால கட்டத்தில் தான் அதிகமாக வந்து கொண்டு இருக்கிறதாம். ஏற்கான்வே மேலே சொன்னது போல, இந்தியாவில் அடுத்த சில மாதங்களில் பல பண்டிகைகள் வரிசையாக வரும். எனவே இ காமர்ஸ் கம்பெனிகள், தற்போது கூடுதலாக முதலீடுகளைச் செய்து, தங்கள் கெபாசிட்டிகளை அதிகரித்துக் கொள்கிறார்கள்.

10 Fulfillment center

10 Fulfillment center

கடந்த ஜூலை 2020 மாதத்தில் தான், அமேசான் நிறுவனம், இந்தியாவில் 10 Fulfillment center-களைக் கட்ட இருப்பதாகச் சொன்னதும் இங்கு நினைவு கூறத்தக்கது. அதோடு 5 Fulfillment center-களை விரிவுபடுத்த இருப்பதாகவும் சொன்னது குறிப்பிடத்தக்கது. ஆக அமேசான் வெறித்தனமாக தன் வியாபாரத்தை அதிகரிக்கும் வேலையில் இறங்கி இருப்பது தெளிவாகத் தெரிகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Amazon to launch 5 new sorting centers in India

Amazon India E commerce company to launch 5 new sorting centers in India and to expand 8 existing sorting units ahead of festive season.
Story first published: Wednesday, September 9, 2020, 15:45 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X