இன்போசிஸ் நிறுவனத்தின் நிறுவனரான நாராயண மூர்த்திச் சிஇஓ பதவியில் இருந்து வெளியேறிய பின்பு கட்டமரான் என்னும் தனது சொந்த முதலீட்டு நிறுவனத்தை உருவாக்கினார்.
இந்நிறுவனத்தின் வாயிலாக ஈகாமர்ஸ் துறைக்குள் நுழைய வேண்டும் என்பதற்காக Prione என்னும் நிறுவனத்தை அமெரிக்க ஈகாமர்ஸ் நிறுவனமான அமேசான் உடன் இணைந்து உருவாக்கப்பட்டது.
Prione நிறுவனத்தின் கீழ் தான் இந்தியாவின் முன்னணி ஈகாமர்ஸ் விற்பனை பிராண்டான கிளவுட்டெயில் (cloudtail) உள்ளது.
சென்னை நிறுவனத்தில் முதலீடு செய்த RK தமனி.. கிடுகிடு ஏற்றத்தில் பங்கு விலை..!

அமேசான் மற்றும் கட்டமரான்
இன்று அமேசான் மற்றும் கட்டமரான் நிறுவனம் இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கையில், Prione நிறுவனத்தில் நாராயணமூர்த்தியின் கட்டமரான் நிறுவனம் வைத்திருக்கும் பங்குகளை அமேசான் வாங்க உள்ளதாக அறிவித்துள்ளது.

CCI அமைப்பு
இதன் மூலம் கிளவுட்டெயில் பிரிவில் அதிகப்படியான ஆதிக்கத்தை அமேசான் செலுத்த உள்ளது, மேலும் இந்த வர்த்தக ஒப்பந்தத்தை அமேசான் நிறுவனம் CCI அமைப்பிடம் சமர்ப்பித்துள்ளது. இதற்கான அறிவிப்பு வந்த உடனேயே பங்கு விற்பனை துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Prione நிறுவனம்
2021 ஆகஸ்ட் மாதம் அமேசான் மற்றும் கட்டமரான் இக்கூட்டணி வேண்டாம் என இரு தரப்பும் முடிவு செய்த நிலையில், தற்போது இதற்கான பங்கு விற்பனை முடிவை எடுத்துள்ளது, மேலும் மே 19, 2022ஆம் தேதி Prione நிறுவனத்தின் கூட்டணி ஒப்பந்தத்தை மறு ஆய்வு செய்ய வேண்டிய காலம் வரும் நிலையில் அதற்கு முன்பாகவே இந்த முடிவை எடுத்துள்ளது அமேசான் - கட்டமரான் கூட்டணி.

இந்திய ஈகாமர்ஸ் விதிகள்
Prione நிறுவனத்தில் நாராயணமூர்த்தியின் கட்டமரான் நிறுவனம் சுமார் 76 சதவீத பங்குகளை வைத்துள்ளது. இந்திய ஈகாமர்ஸ் விதிகள் படி இந்தியாவில் ஈகாமர்ஸ் வர்த்தகம் செய்யும் எந்தொரு வெளிநாட்டு நிறுவனமும், அதன் கிளை நிறுவனமும் தனது ஈகாமர்ஸ் தளத்தில் விற்பனையாளராக இருக்கும் நிறுவனத்தின் பங்குகளை வைத்திருக்கக் கூடாது.

அமேசான் புதிய திட்டம்
இதற்காகத் தான் Prione நிறுவனத்தில் இருந்த 49 சதவீத பங்கு இருப்பதை அமேசான் 24 சதவீதமாகக் குறைத்தது. மேலும் மே மாதம் வரையில் நிர்வாகத்தில் எவ்விதமான மாற்றமும் இல்லாமல் தற்போது இருக்கும் கிளவுட்டெயில் இயங்கும், இதற்கிடையில் அமேசான் புதிய விற்பனையாளரை தேடலாம்.