அம்பானி தொட முடியாத தூரத்தில் டாடா! மத்தியில் எல்ஐசி! அசரடிக்கும் பிராண்ட் வேல்யூ!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்தியாவிலேயே, அதிக மதிப்புள்ள பிராண்ட் என்றால் எதை சொல்வீர்கள்? நமக்கு பிடித்த கம்பெனி, நமக்கு பிரமாதமாக சேவை வழங்கிய கம்பெனிகளைச் சொல்வோம்.

 

அப்படி பிராண்ட் ஃபைனான்ஸ் என்கிற கம்பெனி, பல்வேறு தரவுகளின் அடிப்படையில் உலகின் டாப் 500 பிராண்டுகள் தொடங்கி இந்தியாவின் டாப் 100 பிராண்டுகள் வரை பல பட்டியல்களை வெளியிட்டு இருக்கிறார்கள்.

அதில் தான் அம்பானி நிறுவனத்தால் தொட முடியாத உயரத்தில் இருக்கிறது டாடா குழுமம்.

டாடா குழுமம்

டாடா குழுமம்

இந்தியாவின் தொழில் துறையில் கடந்த 20-ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இருந்தே செயல்படும் குழுமம். ஆங்கிலத்தில் Salt to Software எனச் சொல்வார்கள். அப்படி இந்தியாவில் சில்லறை வணிகம் தொடங்கி, ஆட்டோமொபைல், மென்பொருள், உணவு, ஸ்டீல், கட்டுமானம், ஹோட்டல்... என பல வியாபாரங்களைச் செய்து வரும் குழுமம் தான் டாடா.

டாடா பிராண்ட்

டாடா பிராண்ட்

கடந்த 2019-ம் ஆண்டும் டாடா தான் இந்தியாவிலேயே அதிக மதிப்புள்ள நம்பர் 1 பிராண்ட். உலகின் டாப் 100 பிராண்டுகள் பட்டியலில் இடம் பிடித்து இருக்கும் ஒரே இந்திய நிறுவன பிராண்டும் டாடா மட்டும் தான். டாடா குழுமத்தின் பிராண்ட் மதிப்பு 20 பில்லியன் டாலரைத் தொட்டு இருக்கிறதாம். ஒரு இந்திய பிராண்டின் மதிப்பு 20 பில்லியன் டாலரைத் தொடுவது இதுவே முதல் முறையாம்.

எல் ஐ சி
 

எல் ஐ சி

இந்தியாவிலேயே அதிக மதிப்புள்ள 2வது பிராண்டாக, அரசு இன்சூரன்ஸ் நிறுவனமான எல் ஐ சி இடம் பிடித்து இருக்கிறது. எல் ஐ சி கம்பெனியின் பிராண்ட் மதிப்பு 7.3 பில்லியன் டாலரில் இருந்து 8.1 பில்லியன் டாலராக அதிகரித்து இருக்கிறது. அடுத்த ஆண்டு இரண்டாம் இடத்தில் எல் ஐ சி இருப்பது சந்தேகம் தான். காரணம் ரிலையன்ஸ் வெறும் 0.2 பில்லியன் டாலர் தான் பின் தங்கி இருக்கிறது.

அம்பானியின் ரிலையன்ஸ்

அம்பானியின் ரிலையன்ஸ்

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், ஒரு கச்சா எண்ணெய் நிறுவனமாகத் தான் இருந்தது. ஆனால் இப்போது தன்னை ஒரு ரீடெயில், டெலிகாம் சார்ந்த நிறுவனமாக மாற்றிக் கொள்ள எல்லா வேலைகளையும், கணக்கு போட்டு செய்து கொண்டு இருக்கிறார் முகேஷ் அம்பானி. தன் கடன்களையும் கணிசமான அளவுக்கு, அடைக்கவும் திட்டம் போட்டு பங்குகளை விற்றுக் கொண்டு இருக்கிறார்.

ரிலையன்ஸ் ஜியோ

ரிலையன்ஸ் ஜியோ

இதன் விளைவாக, கடந்த 2016-ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட, ரிலையன்ஸ் ஜியோ, இன்று இந்தியாவிலேயே அதிக வாடிக்கையாளர்களைக் கொண்ட கம்பெனியாக வளம் வந்து கொண்டு இருக்கிறது. சமீபத்தில் ஜியோமார்ட் வழியாக சில்லறை வியாபாரத்தையும் வளைக்க வேலை பார்த்துக் கொண்டு இருக்கிறார். இதனால் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் பிராண்ட் வேல்யூ 6.3 பில்லியன் டாலரில் இருந்து 7.9 பில்லியன் டாலராக அதிகரித்து இருக்கிறதாம்.

அம்பானி சாதனை

அம்பானி சாதனை

அம்பானியின் ரிலையன்ஸ் குழுமம் 4-வது இடத்தில் இருந்து 3-வது இடத்துக்கு முன்னேறி இருக்கிறது. அதோடு, இந்தியாவின் டாப் 10 பிராண்டுகளில், ஒரே வருடத்தில் 25 %-க்கு மேல் பிராண்டு மதிப்பு அதிகரித்த கம்பெனிகளில், அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனமும் உண்டாம். எந்த பக்கம் கேட்டு போட்டாலும் நம் அம்பானி ஏதாவது ஒரு சாதனையை செய்து கொண்டே தான் இருக்கிறார்.

நம்பர் 1-க்கு போட்டி

நம்பர் 1-க்கு போட்டி

நம் முகேஷ் அம்பானிக்கு தான் நம்பர் 1 என்றால் மிகவும் பிடிக்குமே..! அப்படி, இந்தியாவின் பிராண்ட் வேல்யூ பட்டியலிலும் ரிலையன்ஸ் நம்பர் 1 ஆக வேண்டும் என்றால், அடுத்த சில ஆண்டுகளில் சாத்தியமா எனக் கேட்டால், சிரமம் தான். காரணம் டாடா 20 பில்லியன் டாலரில் எளிதில் தொட முடியாத தூரத்தில் இருக்கிறது. ஆனால் ரிலையன்ஸ் 7.9 பில்லியன் டாலரில் தான் இருக்கிறது.

மற்ற இடங்கள்

மற்ற இடங்கள்

4-வது இடத்தில் இன்ஃபோசிஸ்

5-வது இடத்தில் எஸ்பிஐ

6-வது இடத்தில் ஹெச் டி எஃப் சி பேங்க்

7-வது இடத்தில் மஹிந்திரா

8-வது இடத்தில் இந்தியன் ஆயில்

9-வது இடத்தில் ஹெச் சி எல்

10-வது இடத்தில் ஏர்டெல்.. என நிறுவனங்கள் பட்டியல் தொடர்கிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Ambani may not able to touch Tata brand value in next few years

The Tata is in top of the highest valuable brands list in india. Tata brand value is $20 billion. Ambani's Reliance industries is in 3rd place with $7.9 Billion dollar. So Ambani may not able to touch Tata's brand value in next few years.
Story first published: Monday, June 1, 2020, 12:03 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X