அம்பானி திட்டமே வேற.. இனி டார்கெட் இந்தியா இல்லை..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானி, ஜியோ அறிமுகம் செய்த காலத்தில் இருந்தே கச்சா எண்ணெய் வர்த்தகத்தை அப்படியே போட்டுவிட்டு தனது முழுக் கவனத்தையும் ஜியோ மற்றும் அதன் டிஜிட்டல் சேவை மீது திருப்பியுள்ளார். கடந்த 2 மாதங்களாகத் தினமும் ஒரு தலைப்பு செய்தி ஜியோ-வை சார்ந்து தான் உள்ளது.

 

கொரோனா பாதிப்பால் வர்த்தகம் மற்றும் வருவாய் இல்லாமல் பல கோடி நிறுவனங்கள் தவித்து வரும் இந்த நிலையிலும், முகேஷ் அம்பானி ஜியோ நிறுவன பங்குகளை வைத்து 10 பில்லியன் டாலர் முதலீட்டை ஈர்த்து பங்குச்சந்தை முதலீட்டாளர்கள் மட்டும் அல்லாமல் டெக் மற்றும் டெலிகாம் சேவை நிறுவனங்களையும் ஆச்சரியத்தில் மூழ்கடித்துள்ளது. காரணம் முதலீடு செய்த நிறுவனங்கள் அப்படி..!!

இந்நிலையில் முகேஷ் அம்பானி யாரும் எதிர்பார்க்காத வகையில் ஒரு முக்கியமான முடிவை எடுத்த, அதற்காகக் கமுக்கமாக வேலையைப் பார்த்துக்கொண்டு இருக்கிறார்.

எஸ்பிஐ வைப்பு நிதி மீதான வட்டி குறைப்பு.. புதிய விகிதங்கள் இதோ..!

புதிய முடிவு

புதிய முடிவு

முகேஷ் அம்பானி தனது ஜியோ மற்றும் டிஜிட்டல் சேவையை ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தில் இருந்து தனியாகப் பிரித்து மும்பை பங்குச்சந்தையில் பட்டியலிட திட்டமிட்டு வருகிறார் என்றும் இதற்காகக் கடந்த ஒரு வருடமாக முயற்சி செய்கிறார் என்பதும் எல்லோருக்கும் தெரியும். ஆனால் இதில் பாதித் தான் உண்மை.

ஜியோ மற்றும் டிஜிட்டல் சேவையை ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தில் இருந்து தனியாகப் பிரிப்பது உண்மை தான், ஆனால் அதை இந்திய பங்குச்சந்தையில் பட்டியலிடப்போவது இல்லை.

வெளிநாட்டு சந்தை

வெளிநாட்டு சந்தை

ஜியோ மற்றும் டிஜிட்டல் சேவையை நிறுவன பங்குகளை வைத்து முன்னணி வெளிநாட்டு நிறுவனங்களிடம் இருந்து 10 பில்லியன் டாலர் முதலீட்டை ஈர்த்துள்ள நிலையில், முகேஷ் அம்பானி ஜியோ நிறுவனத்தை இந்திய பங்குச்சந்தையில் பட்டியலிடாமல் வெளிநாட்டுச் சந்தையில் பட்டியலிட திட்டமிட்டுள்ளார்.

வங்கிகளுடன் பேச்சுவார்த்தை
 

வங்கிகளுடன் பேச்சுவார்த்தை

ஜியோ நிறுவனத்தை வெளிநாட்டுப் பங்குச்சந்தையில் பட்டியலிட தேவையான நடவடிக்கைகளை எடுக்க முகேஷ் அம்பானி தலைமையிலாகக் குழு வங்கிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

இது அடுத்த 12 முதல் 24 மாதங்களுக்குள் நடந்து முடிந்து விடும் என்றும், முகேஷ் அம்பானி இன்னும் எந்த நாட்டில் பட்டியலிட முடிவு செய்துள்ளார் என்பது இன்னும் முடிவு செய்யவில்லை என்று இதுக்குறித்துத் தெரிந்த மூத்த அதிகாரி தெரிவித்துள்ளார்.

வெளிநாட்டு முதலீட்டாளர்கள்

வெளிநாட்டு முதலீட்டாளர்கள்

பேஸ்புக், சில்வர் லேக் பார்ட்னர்ஸ், ஜெனரல் அட்லான்டிக், KKR & Co என முன்னணி முதலீட்டு மற்றும் டெக் நிறுவனங்கள் ஜியோ மற்றும் அதன் டிஜிட்டல் சேவையை மட்டும் நம்பி முதலீடு செய்துள்ள நிலையில், வெளிநாட்டு முதலீட்டாளர்கள் மத்தியில் ஜியோ-க்கு நல்ல வரவேற்பு இருக்கும் என்பது முகேஷ் அம்பானியில் எண்ணம்.

இதேபோல் வெளிநாட்டு நிறுவனங்கள் அதிகளவில் முதலீடு செய்துள்ளதால் இவர்களின் பெயரை கொண்டு முதலீட்டாளர்களை எளிதாக ஈர்க்க முடியும் என்பது அம்பானியின் திட்டம்.

நல்ல காம்போ

நல்ல காம்போ

ஜியோ தற்போது டிஜிட்டல் சேவை மட்டும் அல்லாமல் வையர்லெஸ் டெலிகாம் சேவையையும் அடங்கியுள்ளது. இதன் மூலம் எடுத்த சில வருடங்களில் ஜியோ இந்தியாவின் மிகப்பெரிய ஈகாமர்ஸ் மற்றும் பேமெண்ட் நிறுவனமாக மாறலாம். இதன் மூலம் மொத்த நுகர்வோர் சந்தையும் ஜியோ கையில் இருக்கும்.

பொதுவாக டிஜிட்டல் சேவை இருந்தால், டெலிகாம் சேவை இருக்காது. டெலிகாம் சேவை இருந்தால் டிஜிட்டல் சேவை அளிக்கும் திறன் இருக்காது. ஆனால் ஜியோவிடம் இரண்டுமே உள்ளது.

ஓபன் இண்டர்நெட்

ஓபன் இண்டர்நெட்

ஜியோ நிறுவனத்திற்குத் தற்போது டெலிகாம் மட்டும் அல்லாமல் ரீடைல் முதல் கல்வி, பேமெண்ட் சேவை வரையில் மிகப்பெரிய மாற்றத்தை கொண்டு வரப்போகிறது.

அதுமட்டும் அல்லாமல் இந்தியா மட்டும் தான் உலகிலேயே மிகப்பெரிய ஓபன் இண்டர்நெட் மார்கெட் கொண்டுள்ள சந்தை. எனவே இந்தச் சந்தையில் அமேசான், வால்மார்ட், கூகிள் போன்ற உலகின் மாபெரும் டெக் நிறுவனங்கள் எளிதாக முதலீடு செய்ய முடியும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Ambani Prepares Facebook-Backed Unit for Overseas IPO

Reliance Industries Ltd. is working with banks on early preparations for an overseas listing of its digital and wireless business, people with knowledge of the matter said, after the unit attracted more than $10 billion of investment in a month.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X