கொரோனா மத்தியிலும் 7,500 கோடிக்கு டீல்! கைகோர்க்கும் நோக்கியா ஏர்டெல்!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நோக்கியா கம்பெனிக்கும் சரி, ஏர்டெல் கம்பெனிக்கும் சரி... அதிக இண்ட்ரோ தேவை இல்லை. இரண்டுமே நமக்கு பழக்கப்பட்ட கம்பெனிகள் தான்.

 

கொரோனா வைரஸ், எல்லா வியாபாரங்களையும் தன் வலைக்குள் சிக்க வைத்திருக்கிறது. ஆனால் ஏர்டெல் போன்ற டெலிகாம் கம்பெனிகள் ஜாலியாக தன் வியாபாரத்தை வளர்த்துக் கொண்டு இருக்கின்றன.

அதோடு ஏர்டெல் தன் எதிர்காலத்தையும் திட்டமிட்டு ஒரு நல்ல டீலை நோக்கியா உடன் செய்து கொண்டு இருக்கிறது.

இந்தியா

இந்தியா

உலகத்துக்கு இந்தியா ஒரு பெரிய வணிக சந்தை. இப்போதே இந்தியா தான் உலகின் 2-வது பெரிய டெலிகாம் சந்தை. வரும் 2025-ம் ஆண்டில், இந்தியாவில் சுமாராக 92 கோடி மொபைல் பயன்பாட்டாளர்கள் இருப்பார்களாம். இதில் 8.8 கோடி 5 ஜி இணைப்புகளும் அடக்கம் என்கிறது GSMA2.

வளர்ச்சி

வளர்ச்சி

இந்தியாவில் தொடர்ந்து டேட்டா சேவை பயன்பாடு அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. கடந்த 2019-ம் ஆண்டில் மட்டும் சுமாராக 47 % வளர்ச்சி கண்டு இருக்கிறது. இது நோக்கியாவின் MBiT Index 2020-ன் கணக்கு என்பது குறிப்பிடத்தக்கது. ஆக இந்தியாவில் இன்னும் டெலிகாம் அசுர வளர்ச்சி காண இருக்கிறது.

டீல்
 

டீல்

இந்த நேரத்தில் ஏர்டெல் நிறுவனம் நோக்கியா உடன் சுமார் 7,500 கோடி ரூபாய்க்கு ஒரு டீல் போட்டு இருக்கிறது. அதன் படி, இந்தியாவில் ஏர்டெல்லின் 9 டெலிகாம் சேவை சர்க்கிள்களுக்கும், நோக்கியா கம்பெனி, தன் SRAN (Single Radio Access Network) சேவையை களம் இறக்கும். இதனால் ஏர்டெல்லின் நெட்வொர்க் கையாளும் அளவு மேம்படும். குறிப்பாக 4ஜி நெட்வொர்க் கெபாசிட்டியை அதிகரிக்குமாம்.

SRAN பயன்பாடு

SRAN பயன்பாடு

இந்த SRAN சேவைகளை மட்டும் பயன்படுத்தி 2G, 3G மற்றும் 4G என அனைத்து சேவைகளையும் வழங்க முடியுமாம். அதுவும் குறைந்த செலவில், அதிக குழப்பம் இல்லாமல் நெட்வொர்க் சேவைகளை வழங்க முடியுமாம். எனவே தான் ஏர்டெல், நோக்கியா உடன் SRAN-க்கு டீல் போட்டு இருக்கிறார்கள்.

ஏர்டெல் தரப்பு

ஏர்டெல் தரப்பு

"ஏர்டெல் நிறுவனம் தன் சேவைகளில் தொடர்ந்து முன்னணியில் இருக்கிறது. எங்கள் வாடிக்கையாளர்களுக்கு சிறந்த சேவைகளை வழங்க, தொடர்ந்து புதிய நெட்வொர்க் டெக்னாலஜிக்களில் முதலீடு செய்ய இருக்கிறோம். அதில் நோக்கியா உடனான இந்த டீல் மிகவும் முக்கியமானது. ஏர்டெல் நிறுவனத்துக்கு நோக்கியாவின் SRAN சேவைகளைப் பயன்படுத்துவதில் மிகவும் மகிழ்ச்சி" எனச் சொல்லி இருக்கிறார் ஏர்டெல்லின் தலைவர் கோபால் விட்டல்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

amidst corona airtel sign 7500 crore deal with nokia for SRAN

The coronavirus pandemic has shut almost all the segment of business except telecom. No Airtel sign Rs. 7,500 crore deal with nokia for SRAN to improvise their network.
Story first published: Tuesday, April 28, 2020, 16:17 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X