பட்ஜெட்டில் அதிரடி காட்டுங்க.. உற்சாகமூட்டிய ஆனந்த் மஹிந்திரா.. நிர்மலா இன்னும் பதில் சொல்லலியே!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பட்ஜெட் 2020 சூடு பிடிக்கத் தொடங்கிவிட்டது. சமீபத்தில் பிரதமர் நரேந்திர மோடி, உள் துறை அமைச்சர் அமித் ஷா உட்பட பெருந் தலைகளே பட்ஜெட் கூட்டங்களில் எல்லாம் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.

 

அதோடு பிரதமர், இந்தியாவின் டாப் வியாபாரிகளான கெளதம் அதானி, முகேஷ் அம்பானி, ரத்தன் டாடா போன்றவர்களை சந்தித்துப் பேசி இருக்கிறார் என்றால், பாஜக அரசு பட்ஜெட்டை எவ்வளவு சீரியஸாக எடுத்துக் கொண்டு இருக்கிறது என்பதைப் பார்க்க முடிகிறது.

இப்போது பட்ஜெட் 2020 குறித்து ஒரு முக்கிய தொழிலதிபர் ஒரு விஷயத்தைக் கேட்டு இருக்கிறார்.

ஆனந்த் மஹிந்திரா

ஆனந்த் மஹிந்திரா

இந்தியாவின் மிக முக்கிய, ஆட்டோமொபைல் தொழிலதிபர்களில் ஒருவரான ஆனந்த் மஹிந்திரா, இந்தியப் பொருளாதாரத்தைப் பற்றி வந்த ஒரு செய்தியைப் பகிர்ந்து, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் ஒரு விஷயத்தை கேட்டு இருக்கிறார். முதலில் அவர் சொன்ன செய்தியை பார்த்து விடுவோம்.

செய்தி

செய்தி

சீன பொருளாதாரம், கடந்த 2019ம் வருடத்தின் ஜிடிபி வளர்ச்சி சுமாராக 6 முதல் 6.5 சதவிகிதத்தைத் தொட்டு விடும் எனச் சொல்லி இருக்கிறது ப்ளூம்பர்க். ஆக பொருளாதார வளர்ச்சியில் சீனாவிடம், இந்தியா மீண்டும் தன் இடத்தைப் பறி கொடுத்து இருக்கிறது என்பது தான் செய்தி.

 

செய்வீங்களா

மேலே சொன்ன செய்தி உடன் "ப்ளூம்பெர்க் கணிப்பின் படி, 2019 - 20 நிதி ஆண்டில், இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சி 5% மட்டும் தான் இருக்கும். மீண்டும் சீனாவுக்கு பின்னால் சென்று விட்டது இந்தியா. நம்முடைய போட்டி போடும் திறனைக் வெளிக் கொண்டு வர வேண்டும். நிர்மலா சீதாராமன் ஜி, நாம உலகத்தை ஆச்சர்யப்படுத்துவோம். ஒரு மாஸான, ப்ளாக் பஸ்டர் பட்ஜெட்டை கொண்டு வாங்க. மீண்டும் சீனாவை முந்துவோம்" என வெளிப்படையாகக் கேட்டு இருக்கிறார் ஆனந்த் மஹிந்திரா.

பெருசா எதிர்பாக்காதீங்க ஜி

ஆனந்த் மஹிந்திரா, நிதி அமைச்சருக்கு விடுத்து இருக்கும் இந்த கோரிக்கை ட்விட்டுக்கு, பலரும் தங்கள் கருத்துக்களை ட்விட்டரில் தெரிவித்துக் கொண்டு இருக்கிறார்கள். அதில் ஒருவர் "நீங்கள் ரொம்ப பெருசா எதிர்பாக்குறீங்க, கொஞ்சம் அமைதியா இருங்க. உங்களுக்கு ஏமாற்றம் தான் மிஞ்சும்" என ட்விட்டி இருக்கிறார்.

பாகிஸ்தான்

பாகிஸ்தான்

சிவானந்த் தார்கே என்கிற டிவிட்டர் வாசி "ஸ்ஸ்... யாராவது ஒரு மனிதராவது சீனா வோட போட்டி போட சொல்றாரு... இல்லன்ன எல்லா பயலும் வளர்ச்சி காணாத பாகிஸ்தானை முந்தச் சொல்லி சந்தோஷப்பட்டுக்குவாங்க" என தற்கால அரசியலையும், ஆனந்த் மஹிந்திராவின் ட்விட்டையும் சேர்த்து ட்ரோல் செய்து இருக்கிறார்.

பதில்

பதில்

சீனாவை முந்தும் அளவுக்கு நம் நிர்மலா சீதாராமன் எதாவது பட்ஜெட்டில் அறிவிப்பாரா..? ஆனந்த் மஹிந்திராவின் கேள்விக்கு இதுவரை பதில் சொல்லாத நிதி அமைச்சர், தன் பட்ஜெட்டில் ஏதாவது பிரமாதமான மாற்றங்களைக் கொண்டு வருவாரா..? நல்ல மாற்றங்கள் வரும் என்கிற நம்பிக்கையில் காத்திருப்போம். இன்னும் சில வாரங்களில் இதற்கு பதில் தெரிந்து விடும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Anand Mahindra ask nirmala Sitharaman for a super budget

The mahindra group chairman Anand Mahindra asks Finance Minister Nirmala Sitharaman to surprise world with a super budget in 2020.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X