லாக்டவுனில் ஆனந்த் மஹிந்திரா அதிரடி.. ஸ்டார்ட்அப் நிறுவனத்தில் முதலீடு..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கொரோனா எதிரொலியாக நாடு முழுவதும் லாக்டவுன் செய்யப்பட்டுத் தற்போது படிப்படியாகத் தளர்வு கொடுக்கப்பட்டு வருகிறது. இதனால் நாட்டின் பெரும்பாலான இடங்களில் வர்த்தகம் சந்தை மீண்டும் இயங்க துவங்கியுள்ளது. குறிப்பாகப் பெரு நகரங்களில் மால்கள் கூடத் திறக்கப்பட்டுவிட்டது. இதன் தொடர்ந்து முதலீட்டுச் சந்தையிலும் இயல்பாகத் துவங்கியுள்ளதாகத் தெரிகிறது.

 

மஹிந்திரா குழுமத்தின் தலைவர் ஆனந்த் மஹிந்திரா சத்தமில்லாமல் ஒரு ஸ்டார்ட்அப் நிறுவனத்தில் முதலீடு செய்து அசத்தியுள்ளார். பொதுவாக டிவிட்டரில் மாஸ் காட்டும் ஆனந்த் மஹிந்திரா தனது முதலீடு குறித்தும் டிவீட் செய்துள்ளார்.

எந்த நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளது...? என்ன டிவீட் செய்துள்ளார்..?

அதானிக்கு அடித்த ஜாக்பாட்.. பில்லியன் செலவில் சூரிய ஆலைகள் கட்டுவதற்கான ஒப்பந்தத்தில் வெற்றி..!

ஆனந்த் மஹிந்திரா

ஆனந்த் மஹிந்திரா

ஆட்டோமொபைல், டெக், வங்கியியல் எனப் பல துறையில் வர்த்தகம் செய்து வரும் ஆனந்த் மஹிந்திரா தற்போது ஸ்டார்ட்அப் நிறுவனத்தின் மீதான மோகத்தில் குருகிராம் நகரத்தை தலைமையிடமாகக் கொண்ட Hapramp என்ற நிறுவனத்தில் சுமார் 1 மில்லியன் டாலர் முதலீடு செய்துள்ளார்.

Hapramp நிறுவனம் பிளாக்செயின் மற்றும் சோசியல் மீடியா பிரிவில் மிகமுக்கியமான திட்டங்களில் பணியாற்றி வருகிறது.

5 ஐஐடி மாணவர்கள்

5 ஐஐடி மாணவர்கள்

Hapramp நிறுவனம் 2018ல் 5 ஐஐடி மாணவர்களால் துவங்கப்பட்ட ஒரு டெக் ஸ்டார்டஅப் நிறுவனமாகும்.

லாக்டவுன் மற்றும் மந்தமான வர்த்தகச் சூழ்நிலையின் காரணமாக இந்தியாவில் தற்போது ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் மிகவும் மோசமான நிலையை எதிர்கொண்டு வருவது ஒருபக்கம் இருந்தாலும், கடந்த 5 வருடத்தில் இந்திய தொழில்நுட்ப சந்தை, டிஜிட்டல் சேவை, முதலீட்டு சந்தை பெரிய அளவில் வளர்ச்சி அடைந்ததிற்கு ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் தான் முக்கியக் காரணமாகும்.

2 வருட தேடல்
 

2 வருட தேடல்

ஆனந்த் மஹிந்திரா தனது முதலீடு குறித்து டிவிட்டரில், 2 வருட தேடலுக்குப் பின் முதலீடு செய்ய ஒரு ஸ்டார்ட்அப்-ஐ தேர்வு செய்துள்ளேன். Hapramp நிறுவனம் 5 இளைஞர்களால் சிறப்பான முறையில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்நிறுவனம் கிரியேடிவ், தொழில்நுட்பம் மற்றும் டேட்டா பாதுகாப்புடன் உருவாக்கப்பட்டுள்ளது. என்று தனது டிவிட்டரில் தெரிவித்துள்ளார்.

2018..

2018..

ஆனந்தி மஹிந்திரா தனது டிவிட்டரில் இந்திய சோசியல் மீடியா ஸ்டார்அப் நிறுவனத்தின் முதலீடு செய்ய ஆர்வமாக உள்ளதாக டிவீட் செய்திருந்தார். இதற்காக முன்னாள் மஹிந்திரா குழு நிர்வாகியான ஜஸ்பிரீத் பின்திரா-வை உதவி செய்த அழைத்திருந்தார்.

இதுகுறித்து ஜஸ்பிரீத் பின்திரா கூறுகையில், Hapramp நிறுவனம் Web 3.0 social network-ஐ உருவாக்கி வருகிறது. வேகமாக வளர்ந்து வரும் டிஜிட்டல் சேவை துறையில் சிறப்பான வர்த்தக மாடல் உடன் இந்நிறுவனம் இயங்கி வருவதாகக் கூறினார்.

12 ஊழியர்கள்

12 ஊழியர்கள்

வெறும் 12 ஊழியர்கள் மட்டுமே கொண்ட இந்த Hapramp நிறுவனத்தின் GoSocial app தளத்திற்கு அடுத்த 3 மாதத்தில் 1 லட்சம் வாடிக்கையாளர்களையும், இந்த வருட முடிவிற்கு 10 லட்ச வாடிக்கையாளர்களையும் பெற இலக்கு நிர்ணயம் செய்துள்ளது. மேலும் இந்நிறுவனத்தின் சேவை மற்ற தென் ஆசிய நாடுகளுக்கும் விரிவாக்கம் செய்யத் திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Anand Mahindra invests $1 mln in Gurugram-based startup Hapramp

Mahindra Group Chairman Anand Mahindra has invested $1 million (about Rs 7.5 crore) in Gurugram-based Hapramp -- a startup working on technologies like blockchain and social media. The startup was founded in 2018 by five students of Indian Institute of Information Technology-Vadodara.
Story first published: Wednesday, June 10, 2020, 14:45 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X